Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, February 25, 2018 9 Jumad Al-Akhir 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<Previous
Friday, February 9, 2007
உள்ளாட்சி வார்டு சீரமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கவனத்திற்கு...


தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட தேர்லுக்கான வார்டு சீரமைப்புப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி வார்டு சீரமைப்பின்போது சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டிருப்பதை பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மறுசீரமைப்பின் போது சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருப்பதோடு, தமிழக சட்டமன்றத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திரு மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு முழுவதிலும் மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளாட்சி வார்டு சீரமைப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து இறுதிகட்ட கருத்து கேட்டு வருகின்றார். அவரை இன்று தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத் பிரதிநிதிகளோடு சந்தித்து கலந்துரையாடினார். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களும் தேர்தல் ஆணையரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார்கள். 14-02-2018 அன்று தலைமை நிலையத்தில் நடைபெறக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தங்களின் மாவட்டங்களின் உள்ளாட்சி வார்டு சீரமைப்பின்போது ஏற்பட்டுள்ள ஆட்சேபனைகளை தலைமை நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்

<<Previous

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்