Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்
{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Thursday, October 4, 2007
இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் சிராஜூல் மில்லத் அவர்களின் லட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி


சிராஜூல் மில்லத்"" ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் பிறந்த தினம் அக்டோபர் 4. இன்று அவர்களின் 93-வது பிறந்த நாள் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒப்பற்ற தலைவரின் மக்பராவில்(அடக்கத்தலத்தில்) ஜியாரத்-பாத்திஹா நடத்தி அவர்களின் நினைவு அலைகளில் கொஞ்ச நேரம் மூழ்கி எழும் வழக்கத்தை தமிழ்நாடு மாநில கிளையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மாலை 5 மணி அளவில் ராயப்பேட்டை அமீருன்னிஸா கபரஸ்தான் மஸ்ஜித் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்டங்கள் மற்றும் பிரைமரி லீக்களின் நிர்வாகிகளும், தொண்டர்களும், சமுதாயப் புரவலர்களும், அறிஞர்களும், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சான்றோர்களும் கூடுவதும், சிராஜூல் மில்லத் அவர்களின் மஃபிரத்துக்கு (மறுமை வாழ்வு நலத்துக்கு) துஆ (பிரார்த்தனை) இறைஞ்சுவதை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.சிராஜூல் மில்லத் அவர்களின் நினைவுகள் முஸ்லிம் லீகர்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் வருகிறது என்று யாரும் கருதினால், அது அவர்களின் அறியாமையே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் அற்புதத் தலைவர் அவர்.ஆத்தூர் காதிர் முஹ்யுத்தீன் அப்துல் ஹமீத் அவர்களின் அருமைப் புதல்வர் அப்துஸ் ஸமத், தனது தந்தைவழி மார்க்கத்தைக் கற்றவர்; தனது பேராசிரியர் அல்லாமா அப்துல் வஹாப் புகாரி சாஹிப் அவர்களிடம் இஸ்லாமிய வரலாற்றைக் கற்றவர்; பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றலால் ஈர்க்கப் பெற்றவர்; தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களின் எழுத்தால் தனது எழுத்தாற்றலைச் செம்மைப் படுத்தியவர். இதையெல்லாம் சிராஜூல் மில்லத் அவர்களே கூற, நாங்கள் பலமுறை கேட்டிருக்கிறோம்.

சிராஜூல் மில்லத் அவர்களின் நினைவுகளில் மூழ்கும்போது, இங்கே அவருக்கு மூலவர்களாகத் திகழ்ந்த மூதறிஞர்களின் நினைவுகளிலும் முஸ்லிம் லீகர்கள் மூழ்கித் திளைக்கின்றனர் என்பதே உண்மையாகும்.""""சிராஜூல் மில்லத்"" என்னும் சிறப்புப் பட்டம் தந்த பெருமை பள்ளபட்டி உலமாக்களுக்கு - குறிப்பாக ஆர்.கே. பாகவி என்று போற்றப்பெற்ற அப்துல் காதிர் பாகவி மற்றும் சங்கைமிகுந்த சன்மார்க்க மேதைகளைச் சாரும். பள்ளபட்டிக்கு வரலாற்றில் பலப்பல பெருமைகள் உண்டு. அவற்றுள் """"சிராஜூல் மில்லத்"" என்னும் பட்டத்தைத் தந்ததன் மூலம், சிராஜூல் மில்லத் அவர்களை குறிப்பிடும்போதெல்லாம் பள்ளபட்டியும் நமது நினைவுக்குள் தானாகவே வந்துவிடுகிறது.‘மில்லத்’ என்றால் சமுதாயம் என்றும், ‘ஸிராஜ்’ என்றால் ஒளிவிளக்கு என்றும் அரபு மொழி அறிஞர்கள் பொருள் விரிக்கிறார்கள்.

‘சமுதாய ஒளிவிளக்கு’ என்னும் பொருளுடைய """"சிராஜூல் மில்லத்"" என்னும் பட்டமே தலைவர் அப்துஸ் ஸமத் அவர்களுக்கு முதல் பெயர் போலவே வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது.தன்னை உலமாக்கள் ‘சமுதாய ஒளிவிளக்கு’ என்று அழைத்ததால் என்னவோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொன்விழா மாநாட்டில் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறுபது அறிஞர்கள், புரவலர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், உலமாக்கள் ஆகியோருக்கு """"சமுதாய ஒளிவிளக்கு"" என்னும் விருதும் பாராட்டுரையும் பெறச்செய்து பெருமகிழ்வு கொண்டார். கல்வித் தந்தை எனப் போற்றப்பட்ட பி.எஸ். அப்துர் ரஹ்மான் காகா, மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் காகா, சதக் அப்துல் காதர் காகா போன்ற பெருமக்கள் ‘சமுதாய ஒளிவிளக்கு’ விருது வழங்கப் பெற்றவர்களில் ஒரு சிலர் ஆவர்.

இவர்களின் அலுவலகங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதுகளைக் காட்சிப் பொருளாக வைத்து பெருமைப்பட்ட பேருள்ளங்கள் இவர் களுக்கு உண்டு.

தன்னைப்போலவே, சமுதாயத்தில் உள்ள நன்மக்கள் எல்லோருமே பொன்மக்களாகத் திகழ வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டு வாழ்ந்த பெருமை சிராஜூல் மில்லத் அவர்களுக்கு இருந்தது.இந்தச் ‘சமுதாய ஒளிவிளக்கு’ உறங்கும் கல்லறையில், """"எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்; இல்லாத எளி யோர்க்கு வழங்கி வாழ்வோம்; எல்லாருடனும் இணங்கி வாழ் வோம்"" என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட நடுகல் இருக்கிறது.

சிராஜூல் மில்லத் அவர்கள் வாழும் காலத்தில் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வந்த கொள்கைப் பிரகடனமே இந்த வாசகங்கள். சிராஜூல் மில்லத் அவர்களின் வாழ்வு இலட்சியத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள் ஒருபோதும் அலட்சியம் செய்துவிடாமல் இருப்பதற்கு உறுதிமொழி எடுப்பதுதான் அவரின் இந்த பிறந்த நாள் செய்தியாக இருக்கிறது.

இந்த நற்செய்தியை நாளும் நினைப்போம்; நாளெல்லாம் போற்றுவோம்.

<<PreviousNext>>

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்