Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 1, 2007
மார்க்க வானில் இருந்து ஞான விண்மீன் உதிர்ந்து விட்டது - கே.எம்.கே.


சென்னை புரசைவாக்கம் ஜாமிஆ மஸ்ஜிது தலைமை இமாம் மௌலானா கே.ஏ. நிஜாமுத்தீன் ஆலிம் அவர்கள் 31-12-2011 இரவு மரணமுற்றார் என்னும் செய்தி அறிந்து உள்ளம் அழுதது; உடம்பெல்லாம் நிலைகுலைந்தது போன்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டோம்.

தமிழ் கூறும் நல்லுலகில் பரந்து வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் பேரன்பையும், பெரும் மரியாதையையும் பெற்று விளங்கிய பேரறிஞர் அவர். திருக்குர்ஆன் விரி வுரைகளைப் பல ஆண்டு காலம் புரசை மஸ்ஜிதில் தொடர்ந்து ஆற்றிய பெருமை அவருக்கு உண்டு. ஹதீஸ் கலையில் தமிழக உலமாக்களில் தலை சிறந்தவர் என்னும் பேரும் புகழும் பெற்று வாழ்ந்தார்.

மௌலானா அவர் களின் மார்க்க உரைகள் மார்க்க மேதைகளுக்கும் சில புதிய கோணங்களில் விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்தவையாகும்.

தமிழக உலமாக்களில் தர்க்கரீதியாகவும், தக்க ஆதாரங் களுடனும், மார்க்க விளக்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவராகவே வாழ்ந்தார். தமிழகத்தில் அண்மைக் காலத்தில் மார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய விமர்சனங்களுக்கும் தத்துவக் குழப்பங்களுக்கும், மௌலானாவின் பதில்களும் விளக்கங் களும் புதிய வரலாறு படைத்தன.

மார்க்க ஞானம் தேடும் மனம் படைத்தோர் எல்லோரும் மலரைச் சுற்றும் வண்டுகள் போல மௌலானாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டனர்.

பலர் மார்க்க விளக்கம் பெற்று புதிய மனிதர்களாகவே திருந்தியிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.

தமிழகம் முழுவதிலும் கடல் கடந்த நாடுகளிலும் மீலாது விழாக்களில் பங்கேற்று முஸ்லிம்களுக்கு மார்க்கத் தெளிவை ஊட்டியது போல, முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாம் பற்றிய ஞானத்தைப் பரப்பிய பெருமை இவருக்கு உண்டு.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இஸ்லாமி தமிழ் இலக்கிய மாநாட்டில் மௌலானா அவர்கள் அரபு மொழி பற்றிய ஆய்வுரையைத் தந்தார். மொழி வல்லுநர்கள் அவர் உரையைக் கேட்டு வியந்து வியந்து பாராட்டி நின்றனர்.

திருக்குர்ஆனில் அரபு மொழி எவ்வாறு கவிதை நடையில் எதுகை மோனையோடு, இதயங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பதையும்,

நபி பெருமானார் (சல்-அம்) அவர்களின் காலத்திலேயே, இன்றைக்குத் தமிழ் மொழி ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமாக உச்சரிப்பும் பேச்சு வழக்கும் பெற்றிருப்பதுபோல, அந்தக் காலத்திலேயே அரபு மொழி அரபுலகத்தில் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபாடான முறையில் பேசப்பட்டு வந்ததையும், அவ்வேறுபாடுகளை எல்லாம் துல்லியமாக அறிந்தவராக அண்ணலார் திகழ்ந்தார்கள் என்பiயும்,

இன்றைக்கு அரபு மொழி உலக அரங்கில் எத்தகைய உன்னத நிலையை அடைந்திரக்கிறது என்பதையும்,

பலப்பல அற்புதமான உதாரணங்கள் மூலம் விளக்கினார் மௌலானா. பேச்சுக்கலையின் தலைவராக அன்றைய தினம் ஒளிர்ந்தார்.

மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம் - ஆலமின் மரணம் அகிலத்தின் மரணம் என்பார்கள். இருண்ட உள்ளங்களில் இஸ்லாமிய ஒளிவிளக்கை ஏற்றி வைத்து வாழ்ந்த மார்க்க வானின் விண்மீன் ஒன்று உதிர்ந்து விட்டது! வானில் உடுக்கணங்களில் ஒன்று குறைந்தால் வானில் அந்த இழப்பு தெரியாது!

பூமியில் வானத்து விண்மீன் போல வாழ்ந்த மௌலானா மறைந்துளளது, இஸ்லாமிய பூவுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மௌலானாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு - உரிய உலமாக்கள் உதிப்பதற்கு - இறையருளை வேண்டுவோம். மௌலானாவின் மறைவில் வாடி வதங்கும் அவர்தம் இல்லத்தார்க்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

மௌலானாவின் மறைவுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃபிரத்துக்கு எல்லோரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்