Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 2, 2007
இடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்; வாருங்கள்! - கே.எம்.கே.


இந்திய நடுவண் அரசு அலுவல்களிலும், மத்திய அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் பிற்பட்ட வகுப்பின ருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்து அறிவித்தவர் முந்தைய பிரதமர் வி.பி.சிங்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் இந்தியாவில் 3647 பிற்பட்ட வகுப்புகள் உள்ளன என்று கூறப்பட்டது. அத்துணை வகுப்பார்களுக்குத்தான் 27 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.

இந்த 3647 வகுப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வகுப்புகள் 130க்குள் உள்ளன. அதேபோல கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்த வகுப்புகளும், சீக்கியரைச் சார்ந்த பிற்பட்ட வகுப்புகளும், பார்சிகளைச் சார்ந்த பிற்பட்ட வகுப்புகளும், புத்தர்களைச் சார்ந்த வகுப்புகளும் மண்டல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் பிற்பட்ட வகுப்புகளில் இடம் பெற்றுள்ளவர்கள் பெரும்பான்மையாக இந்துக்கள்தாம். 27 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் பெற்று வருகிறவர்களும் அவர்களே. தாழ்த்தப்பட்ட மலைசாதியினரும் இந்துக்கள்தாம். அவர்களுக்கென்று 22 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது.

இடஒதுக்கீடு தரப்பட்டுள்ள 49 சதவீதத்தினால் பலன் பெற்ற முஸ்லிம்கள் எத்தனை பேர் என்றால் அது மிக மிக அற்பமாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தியாவில் பொதுவாக, குறிப்பாக வடபுலத்தில் முஸ்லிம்களின் நிலை - அவர்களின் கல்வி, சமூகப் பொருளாதார நிலை -மிகவும் தாழ்ந்தவர்களுக்கும் தாழ்ந்த நிலைதான் என்று பல்வேறு கமிஷன் அறிக்கைகள் கூறி வந்துள்ளன. இதில் முக்கியமானது கோபால்சிங் கமிஷன் அறிக்கையாகும்.

இந்த அறிக்கைகள் சமர்ப்பித்த எந்தவொரு பரிந்துரை யையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

14-வது பாராளுமன்ற காலத்தில்தான் - யு.பி.ஏ.யின் முதலாவது ஆட்சியில்தான் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைமையில் சென்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில்,

¨ மத்திய அரசில் சிறுபான்மையினருக்கு என்று தனியாக அமைச்சகம் பிறந்தது.

¨நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிஷன் அமைக்கப்பட்டது

¨நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் உருவாக்கப்பட்டது.

இந்த கமிஷன்களின் பரிந்துரைகளில் மிக முக்கியமான தாக உள்ளது இடஒதுக்கீடுதான்.

¨முஸ்லிம்களின் பொருளாதார - கல்வி நிலையை உயர்த்துவது, தேசத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதாகும். நாட்டில் ஒரு சமூகம் முழுவதும் பின்தங்கச் செய்து, நாடு எவ்வித முன்னேற்றம் கண்டாலும் அது உண்மையான முன்னேற்றம் ஆகாது. ஆகவே, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அரசு அலுவல்களிலும், கல்வித் துறையிலும், தேர்தல் துறைகளிலும் இடஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு முனைப்போடு முன்வர வேண்டும் என்று சச்சார் கமிஷன் கூறிற்று.

¨ அதைத் தொடர்ந்து வந்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், முஸ்லிம்களுக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் சிறுபான்மையினர். இவர்களுள் 13.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு என்று தனியே 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க. சில இயக்கங்கள் இந்த இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தருவதற்குக் குரல் கொடுத்து வந்தன.

இந்நிலையில்தான் கடந்த டிசம்பர் 22-ம் தேதி மத்திய அமைச்சரவை கூடி, இந்திய சிறுபான்மை மக்களுக்கு 27 சதவீதத்தில் உள்ஒதுக்கீடாக 4.5 சதவீதம் தருவதற்கு முடிவு செய்தது. அது இப்போது அரசாணையாக வெளிவந்திருக்கிறது.

பிற்பட்டோருக்கு உள்ள இடஒதுக்கீட்டில், அதே பிற்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு என்று இடஒதுக்கீடு செய்து, தமிழக முஸ்லிம் பிற்பட்டோருக்கு 3.5 சதவீதம் என்று அறிவித்த பெருமை டாக்டர் கலைஞரைச் சேரும்.

கலைஞர் காட்டிய வழியை - கொள்கையை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக ஏற்கவில்லை. நியாயப்படி மத்திய அரசு பட்டியலில் உள்ள பிற்பட்ட வகுப்புகளில் இருந்து முஸ்லிம் பிற்பட்ட வகுப்புகளைத் தனியே பிரித்து, அவர்களுக்கு என்று இந்த 4.5 சதவீதம் என்று சொல்லி இருந்தால் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கலாம்.

ஆனால், இந்தியாவில் வாழும் 18 சதவீத சிறுபான்மை யினருக்கும் ஒட்டு மொத்தமாக 4.5 சதவீதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, மிகப் பெரும் ஏமாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அறிவிப்புகூட, பிப்ரவரி மாதம் உ.பி., மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்திரகாண்டம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

எதிர்பார்த்ததுபோல, இதற்கு பாரதீய ஜனதா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜ.க. வின் துணை அமைப்புகள் நாடு முழுவதிலும் போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

எது நடந்தாலும் சரியே! யார் எதிர்த்தாலும் சரியே! மக்கள் மன்றத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் காலம் பிறந்து விட்டது!

சிறுபான்மையினருக்குத் தனியே இடஒதுக்கீடு வேண்டும் என்பதை மத்திய அரசு இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது.

¨ சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் இடஒதுக்கீடும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதே மத்திய அரசு இந்திய முஸ்லிம் சிறுபான்மையின ருக்கென்று தனியே இடஒதுக்கீடு செய்வதையும், அந்த இடஒதுக்கீடு 10 சதவீதம் ஆக்குவதையும் விரைவில் நாம் கண்டாக வேண்டும்! அதற்கு வழி, மக்கள் மன்றந்தான்! இடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்! வாருங்கள்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்