Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 3, 2007
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும் எம்.எஸ்.எஃப். அமைப்பு குழுவினருக்கு தலைவர் பேராசிரியர் வேண்டுகோள்


மனிதகுல மாணிக்கம் நபி கள் நாயகம் (ஸல்) அவர் களின் பிறந்த தினத்தையொட்டி அனைத்துக் கல்லூரி மாண வர்கள், பள்ளி- மதரஸா மாண வர்களி டையே கட்டுரைப் போட்டி நடத்தி சிறப்பான கட்டுரைகளை எழுதியவர் களை ஊக்கப்படுத்தும் வகை யில் அவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்க வேண் டும் என எம்.எஸ்.எஃப். மாநில அமைப்புக் குழு உறுப்பினர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்), மாநில அமைப் புக் குழு கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் நடைபெற்றது.

எம்.எஸ்எஃப் மாநிலச் செய லாளர் பாம்புக்கோவில் சந்தை ஏ. செய்யது பட்டாணி தலைமை யில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநி லப் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருவண்ணா மலை முஹம்மது ஃபஹீம் இறை மறை ஓதினார். வாணியம்பாடி அர்ஷத் வர வேற்று பேசினார். புளியங்குடி முஹம்மது அல் அமீன் நிகழ்ச் சிகளை தொகுத்து வழங்கி னார்.

எம்.எஸ்.எஃப். மாநில, மாவட்டங்களின் அமைப்புக் குழு உறுப்பினர்கள் சென்னை டி.கே. ஷாநவாஸ், திருவண்ணா மலை மன்சூர், இராமநாதபுரம் சிராஜுதீன், வேலூர் அப்துல் ரஹீம், திருவள்ளூர் அன்சாரி, பாம்புக்கோவில்சந்தை வி.ஏ. செய்யது அபுதாஹிர், காயல் பட்டினம் சாமு சஃபான், புளியங் குடி அல்அமீன், எஸ். எஸ்.பி. இப்ராஹீம், சபியுல்லா, கோம்பை நிஜாம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அனைத்துக் கல்லூரி பிரதிநிதிகள் சென்னை முஹம்மது சதக் ஏ.ஜே. பொறியியல் கல்லூரி ஏ.எம்.எஸ். தொழிற்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி, ஈரோடு அல்அமீன் தொழில்நுட்பக் கல் லூரி, சென்னை புதுக்கல் லூரி, பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல் கலைக்கழகம், சட்டக் கல் லூரி, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், சுதந்திரத் தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.ஏ.எம். நிஜாமு தீன், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம் மது இஸ்மாயில், பிரபல எழுத் தாளர் டாக்டர் ஹிமானா சையத், கத்தார் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி. ஏ.டி. ஹபீப் முஹம்மது, எம்.ஜி.கே. நிஜாமுதீன்,பாலவாக் கம் ஹசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்ததின விழா:

இக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பாக செயல்படும் முஸ்லிம் மாணவர் பேரவைக்கு சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள் ளன. மாநில உயர்மட்ட அரசி யல் ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அது உங் களுக்கு விநியோகிக்கப்படும். எம்.எஸ்.எஃப்பின் மாநிலத் தலைமைச் செயலகம் காயிதெ மில்லத் மன்ஸிலில் செயல்படும். இதற்கென தனிக்கொடி உரு வாக்கப்பட்டுள்ளது. தனியாக உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு 15 முதல் 35 வயதுக்குட்பட்டோர் இதில் உறுப்பினராக சேர்க்கப் படுவார்கள். உறுப்பினர் ஆண் டுச்சந்தா ரூ5 ஆக நிர்ணயிக் கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் ஊர்கள் தோறும் எம்.எஸ்.எஃப் யூனிட் டுகள் உருவாக்கப்படும். மாவட்ட, மாணவ அமைப்பு எப் படி இருக்க வேண்டும் என்பது சட்ட திட்டங்களில் தெளிவு படுத்தப்படும்.

எம்.எஸ்.எஃப்பிற்கான நோக் கங்கள் மற்றும் குறிக்கோள் மிகத் தெளிவாக வரையறைக் கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நான்கு சேவை திட்டங்கள் தவறாமலும் மற்றவற்றை வாய்ப்புகள் கிடைக்கும்போதும் செயல்படுத்த வேண்டும்.

சேவைத் திட்டங்களில் ஒன்றான புனித ரபியுல் அவ்வல் மாதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய கால கட்டத்திற்கேற்ப பொருத்தமான தலைப்புகளில் கல்லூரி, மத ரஸா பள்ளி மாணவர்களி டையே கட்டுரைப்போட்டி நடத்தி மீலாது விழாக்களில் அதற்கு பரிசுகள் வழங்க வேண்டும். இதன்மூலம் சமய நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதோடு பிற சமயத் தார் மத்தியில் இஸ்லாத்தை எத்தி வைக்கக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பும் கிடைக் கும். வரக்கூடிய ரபியுல் அவ்வல் மாதத்திலிருந்து இதை எம்.எஸ். எஃப் தொடங்க வேண்டும்.

பயிற்சி முகாம் - சுற்றுலா

எம்.எஸ்.எஃப் உறுப்பினர்க ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, வரலாறு, ஒழுக்க வியல், இதழியல், பேச்சு, தலை மைத்துவப் பண்பு என பல்வேறு தலைப்புகளில் அதில் நிபுணத்து வம் பெற்றவர்களை கொண்டு வகுப்புகளும், கேள்வி -பதில் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு நல்ல திறமை சாலிகள் உருவாக் கப்பட வேண்டும். இந்தப் பயிற்சி முகாம்களை மண்டல வாரியா கவும் பிரித்து நடத்தலாம்.

எம்.எஸ்.எஃப் உறுப்பினர் களுக்கு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், சி.டிகளையும் தெரியப்படுத்துவதோடு மற்ற இடங்களில் வாழக்கூடிய சமுதாயத்தில் நிலைப்பாடு களை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பையும் உருவாக்க வேண் டும். ஒவ்வொரு ரமளான் மாதத் திலும் இஃப்தார் நிகழ்ச்சிக ளையும், ரமளான் பெருநாளை யொட்டி ஈத்மிலன் சகோதரத் துவ சந்திப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து அதில் சகோத ரத்துவ சமுதாயங்களை சேர்ந்த வர்களை அழைத்து பங்கேற்கச் செய்வதன் மூலம் சமூக நல்லி ணக்கத்தையும், இஸ்லாத்தை புரிந்து கொள்ளக் கூடிய சூழ் நிலையையும் உருவாக்க வேண் டும்.

இவை நான்கையும் தவறாமல் செய்வதோடு மற்ற விஷயங்களை சூழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும் போது மேற்கொள்ள எம்.எஸ். எஃப் அமைப்புக்குழு உறுப்பி னர்கள் தங்களை தயார்படுத் திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

நிறைவாக டி.கே.ஷாநவாஸ் நன்றி கூறினார். கோம்பை தாஹிர் துஆ ஓதினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்