Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, June 22, 2018 8 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 3, 2007
திருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் கூட்டம் முஹம்மது யூனூஸ், பி.எஸ். ஹம்ஸா, அக்பர் அலி பங்கேற்பு


திருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் லீக் யூத் லீக் அமைப்பு குழுவினர் தேர்வு மாநில யூத் லீக் செயலாளர் முஹம்மது யூனூஸ் முன்னிலை யில் நடைபெற்றது.

மங்கலம் சமுதாயக் கூடத் தில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு முஹம்மது நபி தலைமை வகித்தார். மங்கலம் பிரைமரி தலைவர் ஜக்கரியா சேட், செயலாளர் சாதிக் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டி முஸ்தபா, இஸ்லாமிய வாலிபர் முன்னணி செயலாளர் அலாவுன் பாதுஷா, எஸ்.டி.யூ. அமைப் பாளர் காஜா மைதீன், எம். எஸ்.எஃப். அமைப்பாளர் அப்பாஸ், மகளிர் லீக் அமைப் பாளர் சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலவி முஹம்மது அஸார் உலூமி இறைமறை வசனம் ஓதி தமிழில் விளக்க உரை கூறி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மங்கலம் முஸ்லிம் லீக் அமைப்பு குழுவிற்கு எம். முஹம்மது நபி, பி.பி.எம். இர்பான், சிராஜ்தீன், முஹம்மது சாதிக் அலி, முஹம்மது சுலைமான் மலங் குஷா, எம்.எஸ். இப்ராஹீம், ரபிதீன் (ஊராட்சி மன்ற உறுப் பினர்), அப்பாஸ், நூர் முஹம்மது, சதாம் உசேன், அபுதாஹிர் ஆகிய 11 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு மாநில முஸ்லிம் யூத் லீக் துணை அமைப்பாளர் ஈரோடு ஆரிப் உறுதி மொழி ஏற்பு நடத்தி வைத் தார்.

முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினரை வாழ்த்தி திருப்பூர் புறநகர் மாவட்டத தலைவர் பி.எஸ்.அம்சா ஹாஜியார், மாவட்டச் செயலாளர் அக்பர் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம்பிறை ஏ.எம். ஜஹாங்கீர், மாநகர் மாவட்ட யூத் லீக் அமைப்பாளர் மன்சூர் அஹமது ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள்.

முஸ்லிம் லீக் திட்டங்கள், வளர்ச்சிக்கான சேவைகள் குறித்த மாநில முஸ்லிம் லீக் செயலாளர் பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனூஸ் சிறப்புரை யாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முஸ்லிம் லீக், முஸ்லிம் யூத் லீக் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல் பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனை கள் கேட்கப்பட்டது.

விழாவில் எம்.எஸ்.எஃப்-ன் 14 வயது தௌபீக் என்ற மாணவர் 1906-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முஸ்லிம் லீக் செய்துள்ள சேவைகளை, தனது மழலை சொற்பொழிவால் அனைவரும் வியக்கும்படி பேசினார்.

கூட்டத்தில் இர்பான் வரவேற்பும், நன்றியும் கூறினார். இறுதியில் இந்தியாவின் முதல் தேசிய கீதமான கவி அல்லாமா இக்பாலின் சாரே ஜஹான் சே அச்சா என்ற உர்தூ பாடல் இசைக்கப்பட்டது.

நிறைவாக காஜா முஹ்யத் தீன் துஆ ஓதினார்.

இந் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜவஹர் அலி, யூத் லீக் துணை அமைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான், எஸ்.எம்.ஏ. ஜெய்லாப் தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்