Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 3, 2007
மேலப்பாளையத்தில் வார்டு வாரியாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் 31-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு


மேலப்பாளையம் நகர இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தீர்மான அடிப்படையில் மேலப் பாளையம் முழுவதும் வார்டு அமைத்து புதிய நிர்வாகக்குழு தேர்ந்து எடுக்கும் பணி நடை பெற்று வருகிறது.

01-01-2012 ஞாயிறு மாலை 4 மணியளவில் 31-வது வார்டு அமைப்பு கூட்டம் மோத்தை மீராபிள்ளைத் தெரு எம்.எம். என். இல்லத்தில் நகரதுணை செயலாளர் எம்.ஜி. காஜா தலைமையில், சித்தர் சுஹைபு லெப்பை, வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் (முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் தாய்ச்சபையின் வர லாற்றை புதிய உறுபினர் களுக்கு விளக்கிப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ. நாகூர்கனி, நகர செயலாளர் ஹாபிழ் மைதீன் அப்துல்காதர், நகர பொருளாளர் அப்துல் ஜப்பார், நகர துணைச் செயலாளர் மில்லத் காஜாமைதீன், அன்வர் ஆகி யோர் தாய்சபையின் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்.

வார்டு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. 31-வது வார்டு தலைவராக மோத்தை ஷாகுல் ஹமீது, செயலாளராக மூசா ஜாபர், பொருளாளராக பி.எச்.ஹபீப் அலி, துணைத் தலைவராக தமீம் அன்சாரி, துணைச் செயலாளராக எம். காஜா மைதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.

மகபூப் அலி, செய்யதுஅலி, காஜா நிசாமுதீன், ருமான யாசீன், ஹாமீம், ஷாகுல் ஹமீது, பிளம்பர் செய்யது அலி, மோத்தை தமீம் அன்சாரி, நசீர், முகமது சுஹைபு, காதர் மொய்தீன், சுல்தான் ஆகியோர் நிர்வகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள் வி.எஸ்.ஆர். சாகுல் ஹமீது, சம்சுதீன், மரைக்காயிர், சாகுல் ஹமீது, ஓதி அபுபக்கர் சித்திக், டி.எம். சாகுல் ஹமீது மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு தலைவர் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்