Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 5, 2007
உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை முஸ்லிம் விரோதச் செய்திகளை வெளியிடுவது நல்லதல்ல ‘தினமலர்’ நாளிதழுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கண்டனம்


உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்ட சபை தேர்தல்கள் குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என்றும், மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது என்றும், இதைப் புரிந்து கொள்ளா மல் முஸ்லிம் விரோதச் செய்திகளை `தினமலர்’ வெளியிடுவது நல்ல தல்ல என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-

வரும் பிப்ரவரியில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் திருக்கிறது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழுவிலும், அதைத் தொடர்ந்து கேரள பாணக்காட்டில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத் திலும் மேற்கூறப்பட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் பற்றித் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

மூன்று முக்கிய முடிவுகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தீர்மானங்களில் மூன்று செய்திகள் விவரமாகத் தெரி விக்கப்பட்டுள்ளன :

ஒன்று, இந்த ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்.

இரண்டு, தேர்தலில் ஈடுபடு வதற்கும், தொகுதிகளைத் தெரிவு செய்வதற்கும், வேட்பா ளர்களை அடையாளம் காண்ப தற்கும் அந்தந்த மாநில முஸ்லிம் லீகுகள் உடனடியாக பணி தொடர வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தருவதற்கு மத்திய பார்வை யாளர்களை அனுப்புவது என்றும் அறிவிக்கப்பட்டு, பார்வையா ளர்களின் பட்டியலும் வெளியி டப்பட்டது.

மூன்றாவதாக, ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும், அந்தந்த மாநிலத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யின் கொள்கைகளுடன் ஒத்துப் போகக்கூடிய அரசியல் இயக் கங்களுடன் தேர்தல் உறவு, உடன்பாடு, கூட்டணி என்பது பற்றியெல்லாம் பேசி, அதன் விவரத்தை தேசிய தலைமைக் குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில்

23 தொகுதிகள் பட்டியல்

இதன் அடிப்படையில், உத்தரகாண்டு மாநிலத்தில் 24 தொகுதிகளில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளு டன் பேசி வருவதாகவும், இன்னும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்றும் மத்திய குழுவுக்குத் தெரிவித்திருக் கிறார்கள்.

அதேபோல் உத்தரப்பிர தேசத்தில் 23 தொகுதிகளின் பட்டியலை அந்த மாநில முஸ்லிம் லீக் தயாரித்து மத்திய குழு வுக்கு அனுப்பியுள்ளது. தேர்தல் உடன்பாடு குறித்து அரசியல் இயக்கங்களுடனும் தொடர்பு கொண்டு வருவதாகவும், இன்னும் யாருடனும் உறவோ, உடன்பாடோ, கூட்டணியோ ஏற்படவில்லை என்றும், உ.பி. மாநில முஸ்லிம் லீக் மத்திய குழுவுக்குத் தெரிவித் திருக்கி றது.

நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் பற்றிய இன்றைய நிலைபாடு இதுதான். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த நிலைபாட்டை வடபுலத்து ஏடுக ளில் விவரமாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

`தினமலர்’ நாளிதழின் அவதூறுச் செய்தி

இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபாடான, முரண்பாடான, செய்தியொன்றை இன்றைய (5-1-2012) சென்னை `தினமலர்’ ஏடு வெளியிட்டிருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதாகவும், அதை எதிர்த்து, `உலகமகாத் தலைவி யாக இன்றைக்கு எழுந்தருளி யுள்ள ஃபாத்திமா முஸப்பர் என்பவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரசுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாகவும் அறிவித் துள்ளார்’ - என்னும் மகாப் பெரிய செய்தியை எட்டுகாலச் செய்தியாக `தினமலர்’ வெளி யிட்டிருக்கிறது.

தினமலருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது உள்ள பற்று, பாசம், நம்பிக்கை, கருத்து என்ன என்பதை அறியாத குருடர்களாகத் தமிழகத்தில் எந்தவொரு முஸ்லிமும் இல்லை; எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனுப்பப்படும் எந்தவொரு செய்தியையும் இதுவரை அந்த ஏடு முழுமை யாகவோ, முறையாகவோ வெளியிட்டு, பத்திரிகா தர்மத் தைக் காத்தது கிடையாது.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு போட்டியாக ஒரு தெரு பொறுக்கி எழுதி னாலும், சொன்னாலும் அதைப் பல பத்திச்செய்தியாக வெளி யிட்டு தனது பாரம்பரிய புத்தியை அந்த ஏடு வெளிப் படுத்தி வருகிறது.

இதற்கெல்லாம் அந்த ஏட்டைக் குறைகூற முடியாது! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல, இஸ்லா மிய விரோத - முஸ்லிம் விரோத - முஸ்லிம் லீக் விரோதச் செய்திகளை வெளியிடுவதில் புதிய இன்பம் காண்பது அந்த ஏட்டின் பாரம்பரியம்தான்! இ.அஹமது தலைமையில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக உள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது அவர்களை தலைமைப் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக ஒரு `மாதரசி’ சொல்வதை `தினமலர்’ வேத வாக்காக எடுத்துக் கொண்டு செய்தியை வெளியிட்டிருக் கிறது. இதுபோன்ற காழ்ப்புணர்ச் சியில் செய்திகளை வெளியிடு வது தினமலருக்கு நல்லதல்ல! காலம் அதற்கு விரைவில் பதில் அளிக்கும்.

மத்திய அமைச்சர் இ. அஹமது தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்கு மிகமிகச் சிறப் பாகத் தேசிய அளவில் இயங்கி வருகிறது. இந்த எழுச்சியைக் கண்டு மனம் பொறுக்காத ஒரு மர்மக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எதிராகக் கிளம்பி இருக்கிறது.

இருட்டைக் கிழித்துக் கொண்டு எழுவதுதான் இளஞ் சூரியன்! அதுபோல காரிருளை ஓட்டுவதுதான் கார்மேகத்தில் உதிக்கும் பூரணச் சந்திரன்.

சூரியனையும், சந்திரனை யும் சூதுகள் மறைத்துவிட முடியாது! சூழ்ச்சிகள் அவற்றின் ஒளியைக் குறைத்து விட முடியாது.

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டுள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்