Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 5, 2007
அறிவுப் பஞ்சமில்லா தலைமைத்துவம்! - காயல் மகபூப்


``முஸ்லிம் லீக் தலைமை துவத்தில் அறிவுப் பஞ்சம் என்றைக்குமே ஏற்பட்டதில்லை. அண்மையில் தேவநேய பாவாணர் நூலக வளாகத்தில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.

முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப கருத்துக் களை எடுத்துக் கூறினர்.

ஒரு முற்போக்கு எழுத்தாளர், சோவியத் ரஷ்யா இருந்தபோது அங்கே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருந்தது; இன்று சோவியத் யூனியன் உடைந்து சிதறியதால் நிலைமை கேள்விக் குறியாகி விட்டது என்றார்.

இந்த முற்போக்கு சிந்தனை யாளர்களுக்கெல்லாம் ஒரு தலைமையிடமிருந்து சுடச்சுட பதில் வந்தது.

`பிறர் சொல்கின்றபடியெல்லாம் முஸ்லிம்கள் வாழ முடியாது காலம் காலமாக எங்களுக்கு கற்று தரப்பட்ட வழியில்தான் நாங்கள் வாழ முடியும். சோவியத் ரஷ்யா இருந்த போதுதான் பள்ளிவாசல்கள் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டன. தொழுகை நடத்த அனுமதிக்க வில்லை. மதரஸாக்கள் அரசு பணியாளர் களுக்குரியவை களாக மாற்றப்பட்டன. குர்ஆன் ஓத அனுமதிக்கப்பட வில்லை, மார்க்க அறிஞர்களையும் அன்று ரஷ்யா விட்டுவைக்கவில்லை. முஸ்லிம் களை அழிக்க முயன்ற ரஷ்யா அழிந்தது என்பதுதான் வரலாறு’ இந்த துணிச்சலான கருத்தை அந்த இடத் திலேயே சொன்ன தலைமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை! அறிவுப் பஞ்சமில்லாத தலைமைத்துவம் முஸ்லிம் லீகில் உண்டு என்பேதே அதன் தனிச்சிறப்பு.

சென்னையில் புத்தாண்டு தினத்தில் நடை பெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட செய்திதான் இது.

அவர் குறிப்பிட்ட அன்புத் தலைவர்தான் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல கல்லூரிகளின் மாணவர்கள் முஸ்லிம் லீகிற்கு புதியவர்கள். அவர்களில் பலர்கேட்ட ஆச்சரியமான கேள்வி, `நம் தலைவர் இவ்வளவு எளிமையானவரா; இவ்வளவு இலகுவாக சந்திக்க முடியக் கூடியவரா?’ என்பதுதான் பேராசிரியர் எளிமையின் எடுத் துக்காட்டு; பொறுமையின் சிகரம், அமைதியின் திருஉருவம்.

இந்த பொறுமையும் அமைதியுமே பல நேரங்களில் விமர் சனங்களுக்கு ஆளாக்கப்பட்டபோதெல்லாம் உடனிருப்பவர்கள்தான் ஆத்திரப் பட்டார்களே தவிர, அவர் ஒருபோதும் பொங்கியதில்லை.

மலைகுலைந்தாலும் நிலைகுலையா அவரின் மன உறுதி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். தனக்கு சரி எனப் பட்டதை எந்த சபையிலும் சொல்லத் தயங்காதவர். அவரது ஆழம் பொதிந்த அற்புதமான கருத்துக்களை அறிஞர்கள் வியந்து பாராட்டிய சம்பவங்கள் ஏராளம். ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு எழுதுவதில் தனி முத்திரை பதித்த தலைவர் பேராசிரியர், சிறிய நூலுக்கு கூட பெரும் விமர்சனம் எழுதும் வல்லமை பெற்றவர்.

`மானுட வசந்தம்’ புகழ் அறிஞர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அண்மையில் என்னிடம் சொன்ன ஒரு செய்தி, `நான் எழுதிய ஒரு சிறு நூலுக்கு பேராசிரியர் எழுதிய நூலாய்வு என்னை வியக்க வைத்தது. அற்புதமாக இருந்த அதுவே இன்னொரு நூலுக்கு கருத்தாக அமைந்தது. நான் ஆச்சரியப்பட்டேன்’ என்பது.

பேராசிரியரின் இன்னொரு சிறப்பு மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பில் ஒரு போதும் தலையிட மாட்டார். ஆனால் உன்னிப்பாக கவனிப்பார். எங்கள் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் ரசித்துப் பாராட்டுவார். அந்த பேராசிரியப் பெருந்தகையின் வழிகாட்டுதலில் அரசியலில் மட்டுமல்ல-`மணிச்சுடர்’ நாளிதழிலும் நாங்கள் பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்!

இன்று 72வது பிறந்த நாள் காணும் பேராசிரியர் பெருந்தகை இன்னும் பல்லாண்டு பல்லாண்டு எங்களுக்கு வழிகாட்ட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டுகிறோம்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்