Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, August 19, 2018 7 Zul-Hijja 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 7, 2007
மேற்கத்திய நாடுகளின் முஸ்லிம் விரோதப் போக்கு! முடிவு எப்போது? கே.எம்.கே.


மேற்கத்திய நாடுகள் என்பவை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் (யு.என்.ஓ.) இந்த நாடுகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிற காரணத் தால், ஆசிய நாடுகளையும், வேறு நாடுகளையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கு எவ்லாவிதமான கட்டுப்பாடுகளையும் விதிப்பதற்கு அவைகள் தயங்குவதில்லை.

சீன நாடு பொருளாதாரத்திலும், மேற்கத்திய நாடுகளுக்குச் சமமாக விஞ்ஞானத்திலும் வளர்ச்சி பெற்று விட்டது சீனாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க சக்திக்கு இடமில்லாமல் போய் விட்டது.

ரஷ்யாவும், அமெரிக்காவுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டதால், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் அங்கே செல்லுபடியாகவில்லை.

இந்தியா தனது பொருளாதாரத்தைத் சீராக்கிக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கி யிருக்கிறது; நவயுக விஞ்ஞானத்திலும் நானிலம் வியக்கும் பல சாதனைகளைச் செய்து இந்தியா தனது தனிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இங்கேயும் மேற்கத்திய ஆதிக்கம், சிலரின் மூலம், குறுக்கு வழிகளில் நுழைந்து விடுகிறது என்னும் பேச்சு அவ்வப்போது கிளம்புவதைப் பார்க்கிறோம்.

ஆப்பிரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் மேற்கத்தியரின் அதிகார ஆதிக்கம் எப்பொழுதும் போல தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது; ஆனால், இங்கெல்லாம் உள்ள நாடுகளை அழிக்கும் வகையில் மேற்கத்தியரின் நோக்கும் போக்கும் அமைவதில்லை.

ஆனால், முஸ்லிம் நாடுகள் மீதுதான் மேற்கத்திய நாடுகளின் நோக்கும் போக்கும் முற்றிலும் வித்தியாச மாகவே இருக்கிறது.

இதற்குப் பல வரலாற்றுப் பின்னணிகள் இருக்கின்றன என்பார்கள். முதலில் முஸ்லிம் நாடுகளை, தங்களுக்குள்ளேயே மோதவிட்டு வேடிக்கை பார்த்த மேற்கத்திய நாடுகள் இப்பொழுது தாமே தலைமை தாங்கி முஸ்லிம் நாடுகளில் அட்டூழியத்தை அவிழ்த்து விட்டு வருகின்றன.

முதன் முதலில் ஈராக் மீது, கெமிகல் வார் தொடுப்பதற்கு சதாம் ஹுசேன் எல்லா ஆயத்தங்களை யும் செய்து விட்டார்; அவரை அழிக்காவிடில் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் அழித்து விடுவார் என்று குற்றஞ் சுமத்தி, ஈராக் மீது போர் தொடுத்து, சீரழித்து, சிதைத்து, ஈராக்கின் பாரம்பரியப் பெருமையைக் குலைத்துப் புதைத்து விட்டு, இப்பொழுது வெளியேறி இருக்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்க, ஆப்கனிஸ்தான் நுழைவதாகக் கூறி, அங்குள்ள மலைத் தொடர்களை யெல்லாம், தரை மட்டமாக்கிவிட்டு, சுடுகாடு போல அந்த நாட்டை மாற்றி விட்டு, இப்பொழுது வெளியேறி வருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது ஈரான் மீது புதிய குற்றச்சாட்டை அவிழ்த்து விட்டுள்ளனர். அணுஆயுதங்கள் ஈரானில் அதிகம் உள்ளன என்பதே அந்த குற்றச்சாட்டு. அணுமின் நிலையங்களை அமைதிக்கும், ஆக்கப் பணி களுக்கும் பயன்படுத்துவதாகக் கூறும் ஈரானின் சொல்லை இந்த மேற்கத்திய நாடுகள் நம்புவதாக இல்லை. தாங்கள் சொல்வதைத்தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்ற ஆதிக்க வெறியில், ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளைவிதித்து, இப்பொழுது, எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதாகப் பயமுறுத்தி வருகின்றன.

அதோடு, டுனீஷியா, எகிப்து, லிபியா, சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக அங்குள்ள அரசுகளை போராட்டங்கள் மூலம் வெருட்டியடித்து, இப்பொழுது அந்த நாடுகளில் ஒரே கலகமும், களேபரமும் தொடருவதற்கு வழிகாட்டி யும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் நாடுகளில் இத்தனையும் செய்து வரும் மேற்கத்திய நாடுகள், தங்களின் நாடுகளிலும் இஸ்லாமிய எதிர்ப்புச் சட்டங்களையும், திட்டங்களையும் அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளன.

சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல் கட்டுவதற்குத் தடை; இருக்கும் பள்ளிவாசலில்மினராஎழுப்புவதற்குத்

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்