Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 8, 2007
கல்விக் கண் திறப்பவர்கள் காலமெல்லாம் சிறப்பவர்கள் -பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்


கல்வித் தந்தை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழ கத்தின் முதல் பட்டமளிப்பு விழா 09-01-2012 இல் நடைபெறுகிறது என்பதையும், அந்த விழாவில் இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பேருரை ஆற்றுகிறார் என்பதையும் அதோடு அவருக்கு பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறது என்பதையும், இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க விழாவுக்கு பி.எஸ்.ஏ.அவர்களின் செல்வர் அப்துல் காதிர் புகாரி தலைமை ஏற்கிறார் என்பதையும் அறிந்த போது உள்ளம் பூரித்தது.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பல்கலைகழகம் உருவாக்கிய பெருமை பி.எஸ்.ஏ அவர்களுக்கே உரியதாகும். அவரின் பெயரையே பல்கலைக் கழகத்திற்கும் சூட்டியிருப்பது மிகமிகப் பொருத்தமாகும்.

தமிழகப் பல்கலைக் கழ கங்களில் ஓரிரண்டைத் தவிர, மற்ற பல்கலைக் கழகங்கள் எல்லாமே, பல்கலைக் கழகத் தில் சென்று படிக்காதவர்களின் பெயர்களில்தாம் அமைந் துள்ளன.

திருவள்ளுவர், பெரியார், பாரதியார், பாரதிதாசன், காமராசர், எம்.ஜி.ஆர், ஆகியோர் பட்டதாரிகளோ, பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களோ அல்லர்.

ஆனால் அவர்களின் பெயர்களில் பல்கலைக் கழகங்கள் தோன்றியதோடு, அதே பல்கலைக்கழகங்களில் அவர்களைப் பற்றிய பாடங்களும் பட்டங்களும் ஆய்வுகளும் நடக்கின்றன என்பதையும் பார்க்கிறோம்.

அந்த வரிசையில் பல்கலைக் கழகத்தில் பாடமாகப் படிப்பதற்குரிய சிறப்புகளையும் தகுதிகளையும் பெற்றவர் பி.எஸ்.ஏ அவர்கள்.

சாதாரண குடும்பத்தில் தோன்றி, மார்க்க அறிஞரின் மகனாகப் பிறந்து சுய உழைப்பால் உயர்ந்து, உலகம் சுற்றி, கண்ணில் பட்டதையும் கல்பை(இதயத்தைத்) தொட்டதையும் கொண்டுவந்து தமிழகத்திற்குப் சேர்த்தவர் பி.எஸ்.ஏ. அமெரிக்காவிலோ, ஆசிய நாடுகளிலோ, ஐரோப்பிய நாடு களிலோ, அர புலகத்திலோ புதிதாக ஒன்றைப் பார்த்துவிட்டால், அதைப்போல தமிழகத்தில் செய்ய வேண்டும் என்பதிலும், அதை தமிழக மக்களுக்குத் தந்துவிட வேண் டும் என்பதிலும் எப்பொழுதும் அக்கறை கொண்டவராக விளங்கியவர் அவர். சமுதாய மக்களுக்கு வாழ்வு முறையில் ஆதரவாகவும் நலமாகவும், வளமாகவும், அமையும் எதையும் அவர் விட்டு விடுவதில்லை. பொறியியல் கல்லூரி துவங்கி அதை எல்லா கல்லூரிகளுக்கும் ஒரு முன்மாதிரி கல்லூரியாக மாற்றுவதற்கு பெரிதும் பாடுபட்டுள்ளார். அவர் பெயரில் உருவாகியுள்ள பல்கலைக் கழகமும் எல்லாவற்றுற்கும் முன் மாதிரியான கலைக்கூடமாக வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு துபை, அபுதாபி ஆகிய இடங் களில் மீலாது விழாவுக்காகச் சென்றிருந்தேன். துபையில் பி.எஸ்.ஏ இருந்தார். அவரின் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் மீலாது விழாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி என்னை பேச வைத்தார். அதோடு ஒரு விழாவைக் கூட விட்டுவிடாமல் அவர் பங்கேற்றார். என் பேச்சில் இழையோடிய திருக்குர்ஆன் வசனங்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றை மிக உன்னிப்பாக கேட்டு, அவற்றுக்கு அதுவரை நான் படித்திராத சில அரிய பொருளை அவர் கூறிய போதுதான், அவரின் ஆர்வமும், நுட்பமான அறிவும் அனுபவ ஞானமும் எத்தகையது என்பதைப் புரிய முடிந்தது.

புதிதாக எதுவரினும் அது பற்றிப் புரிவதற்கும் அதைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதற்கும் அவர் காட்டிய துடிப்பு அலாதியானது. அக்பர் சக்கரவர்த்திதான் எப்பொழுதும் அறிஞர் குழாத்துடனும், மார்க்க மேதைகளுடனும் பல்கலை நிபுணர்களுடனும் இருப்பார் என்று வரலாற்றில் படித் திருக்கிறோம். அதைப்போல அறிஞர்களும், வணிக நிபுணர்களும், நிர்வாக வல்லுநர்களும், வேதாந்த சித்தாந்த வித்தகர்களும் தன்னுடன் உறவாடுவதையும் உரையாடு வதையும் மிகுந்த பேறாகக் கருதி வாழ்ந்து, இப்பொழுது உடல் நலம் குன்றியிருக்கும் அப்துர் ரஹ்மான் அந்தக் கொள்ளைக்குன்று என்றும் பேருடனும், புகழுடனும் திகழும் என்பதற்கு பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகம் அரியதொரு அத்தாட்சியாகும்.

தமிழக முஸ்லிம் சமுதாயம் பி.எஸ்.ஏ அவர்களை `கல்வித் தந்தை’ என்று சிறப்பித்து அழைத்து வருகிறது. பி.எஸ்.ஏ பல்கலைக் கழகம் அவரின் சிறப்பை பாருலகறியச் செய்யும்!

பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறும் பட்ட தாரிகள், காலாகாலத்திற்கும் பி.எஸ்.ஏ அவர்களின் சிந்தனையில் விளைந்த முத்துக்களாக உலகம் நெடுகிலும் பல்கிப் பெருகுவர், பி.எஸ்.ஏ. அவர்களின் பெயரையும் ஒளியைப்போல கல்வியுலகில் பரவிடச் செய்வார்கள். கல்விக் கண்களைத் திறப்பவர்கள்

காலமெல்லாம் சிறப்பவர்கள்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்