Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 9, 2007
மேற்கத்திய நாடுகளில் விரைவில் நன்றிகெட்டவர்கள் குறைவார்கள்! நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்! கே.எம்.கே.


முஸ்லிம் விரோதத்திலும் இஸ்லாம் எதிர்ப்பிலும் முனைப்புக் காட்டிவரும் மேற்கத்திய நாடுகள், அவைகளுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நன்கொடைகளை - அருட் கொடைகளை - நிரந்தரமான பலன்களை எண்ணிப் பார்க்க மறந்து விட்டன!

மேற்கத்தியவாதி, ஒவ்வொரு நாளையும் பார்க்கும்போது, பலஸ்தீனில் - ஜெருசலத்தில் உதித்த ஈசா நபி - ஏசுபெருமான் அவர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள வருடக் கணக்கில் வரும் நாளைத்தான் பார்க்கிறான்.

மாதம், வாரம், நாள், மணி என்று கணக்கிடும் காலண்டரை உலகிற்கு வழங்கியவர்கள் எகிப்தியரும், பாபிலோனியரும் தான்: இந்தச் சூரிய காலண்டர் கணக்கை முழுமையாக்கிய பெருமை ஈரானியருக்கே உண்டு.

ஒவ்வொன்றையும் எண்ணுவதற்கு இந்தியாவில் இருந்து போன அராபிய எண்களை - அராபிக் நியூமரல்களைத் தான் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுகிறான்.

ஒவ்வொரு நாளும் மேற்கத்தியவாசி `பாத்’ குளியலில் சுகங்காண்கிறான்; இதை அவனுக்கு வழங்கியவர்கள் துருக்கியர்களே. குளித்து விட்டு தலையைத் துவட்டுவதற்கு `துருக்கி டவல்’தான் பயன்படுகிறது.

காலை சிற்றுண்டியின் போது அருந்தும் காப்பி, அரபு நாட்டு `கஹ்வா’வில் இருந்து வந்ததுதான். சைக்கிளில் வேலைக்குச் செல்கிறவன், அந்த சைக்கிளை கண்டு பிடித்தவன் மத்திய தரைக்கடல் பிரதேசவாசி என்பதை நினைப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் `அல்ஜிப்ரா’ கணக்குப் படிக்கும்போது, மேற்கத்தியவாசிக்கு இது `அல்ஜப்ர்’ என்னும் அரபி மொழிச் சொல்லில் இருந்து பிறந்து மேலைநாட்டுக்கு வந்தது என்பது தெரிவதில்லை.

`கள்’ என்னும் தமிழ்ச் சொல்லை, `அல்- கஹ்லி’ என்று அரபிகள் தங்கள் மொழியாக்கி, மேற்கு நாடுகளில் `அல்கஹால்’ என்று பரப்பினர் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

`டாரிஃப்’ என்னும் வார்த்தையை வைத்து கணக்குப் பார்க்கிற மேலை நாட்டினன், அரபியரின் `தஹ்ரீஃப்’ என்பதி லிருந்து வந்தது என்பதைத் தெரிவதில்லை.

`பிப்லோஸ்’ என்னும் சொல்லில் இருந்து பிறந்ததுதான் பைபிள், பிப்லியோ கிராஃபி! லெபனானில் உள்ள ஒரு நகரில்தான் `புக்’ என்னும் புத்தகம் பற்றிய கருத்தே பிறந்தது. அதுவே பிப்லோஸ் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

வீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பது ஸோபா அல்லது தீவான் என்பவை அரபு நாட்டில் இருந்தும் ஈரானில் இருந்தும் மேற்கே வந்தவை என்பதை அவர்கள் கருதிப் பார்ப்பதில்லை.

அஞ்சல் அலுவலகம் உலகில் முதன் முதலில் உருவாக் கப்பட்டது ஈரானில் என்று சரித்திர ஞானி ஹெரடாட்டஸ் கூறியதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஸோபாவில் சுகமாக இருந்து கொண்டு `மெகஜின்’ (சஞ்சிகை) படிக்கும்போது, அது அரபி `மக்ஜன்’ என்பதன் மரூஉ என்பதை நினைப்பதில்லை.

`பைஜாமா’ அணிந்து குதூகலிக்கும் மேலை நாட்டின், அது `பா-ஜாமா’ என்னும் பாரசீக வார்த்தை என்பதை ஒதுக்கி விடுகிறான். மேட்ரஸ் என்னும் பாயில் படுக்கும்போது, அந்த விரிப்பு பாயை அரபிகள் வழங்கிய `மத்ரஹ்’தான் அது என்பதை அவர்கள் பார்ப்பதில்லை. ஒருநாளில் மேலை நாட்டான் அனுபவிக்கும் இஸ்லாமிய பங்களிப்புகள் இவை! இதைப் போன்று அரசியல், அறிவியல், அன்மீகம், தத்துவம், இயற்பியல், இரசாயனம், வானநூல், பூமி நூல், மருத்துவ நூல் என்று உள்ள ஒவ்வொரு துறையிலும் உலகத்தவருக்கு இஸ்லாம் வழங்கியுள்ளவற்றை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

இவற்றை அடுக்கடுக்காக - ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் வரலாற்று ஆசிரியர்- ஈரானியர் - யஹ்யா அர்மஜானி நமது வாழ்த்துக்குரியவர். அவரின் `மிடில் ஈஸ்ட் - பாஸ்ட் அண்டு பிரஸெண்ட்’ என்னும் அற்புதமான சரித்திரப் பெட்டகம் படிக்கப் படிக்க, இஸ்லாம் பற்றியும் முந்தைய முஸ்லிம்கள் பற்றியும் பாமாலை தொடுக்கத் தோன்றும்.

இஸ்லாம் மூலம் அதை இதயத்தில் ஏந்தி வாழ்ந்த அந்தக் காலத்து முஸ்லிம்கள் அகிலத்தை எவ்வாறெல்லாம் அலங்காரப் படுத்தியுள்ளார்கள் என்று படிக்கும்போது, இன்றைய முஸ்லிம்கள் அன்றைய முஸ்லிம்களின் கால்தூசுக்கு கூடச் சமம் ஆக மாட்டார்கள் என்ற எண்ணமே துளிர்த்தது.

எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரச குடும்பத்தில் உள்ளவர்கள் பல்துலக்கக் கற்கவில்லை; எழுதப் படிக்கத் தெரியவில்லை; ஆனால் முஸ்லிம்கள் அதே ஐரோப்பாவில் பல்கலைக்கழகங்களை உருவாக்கி, வானநூல் கற்பித்து, விண்ணில் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் நீந்துவதையும் அதனுடன் பூமியும் சுற்றுவதையும் பற்றி பாடம் போதித்துக் கொண்டிருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது! ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்திற்கு ஆரம்ப விழா நடத்தியது இஸ்லாம்தான்! முஸ்லிம்கள்தாம்!

ஆனால், இஸ்லாத்தின் மூலமும் அதை உலகிற்கு எடுத்துச் சென்ற முஸ்லிம்கள் மூலமும் பயனை அடைந்து - அறிவியல் பாதையில் சிறந்து - இன்று மேற்கத்திய நாகரீகம் என்று ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் உலகத்தை ஆட்டிப் படைக்க நினைக்கும் மேற்கத்தியர் உண்மையில் நன்றி கொன்றவர்களாகவே இருக்கிறார்கள்.!

ஏற உதவிய ஏணியை எடுத்தெறிய நினைக்கிறார்கள்! இதயத்துக்கு ஒளியைத் தந்த இஸ்லாத்தை அழிக்க நினைக்கி றார்கள்! முஸ்லிம் நாடுகளை ஒழிக்க எண்ணுகிறார்கள்!

`எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு’ - என்றார் திருவள்ளுவர்.

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி கூறியவன் ஆகான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். திருக்குர்ஆன் கூறுகிறது:

இன்னல் இன்ஸான லிரப்பிஹி லகநூத் வஇன்னஹு அலா ஃதாலிக் லஷஹீத் -

உண்மையில் மனித சமுதாயம் தன் இறை வனுக்கு நன்றி கெட்டதாகவே இருக்கிறது;

அந்த நன்றி கெட்ட தன்மைக்கு அதுவே சாட்சியமாகவும் இருக்கிறது (100:6-7)

மேற்கத்திய நாடுகள், தங்களின் நன்றி கெட்ட தன்மைக்கு இன்றைக்கு தாங்களே சாட்சியங்களாக இருக்கின்றன! பெர்னார்ட்ஷா ஒரு முறை சொன்னார்:

ஐரோப்பா விரும்பும் வளர்ச்சியும், அமைதியும் முழுமையாக கிடைப்பதற்கு முஹம்மது (ஸல்-அம்) அவர்களின் வழியை அது ஏற்க வேண்டும்! - என்றார். அது இன்று நிகழ்கிறது! தொடரும்! விரைவில், நிச்சயமாக, நன்றி கெட்டவர்கள் குறைவார்கள்! நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்