Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 14, 2007
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்: இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் கோரிக்கை


கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகப்படுத் திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இராமநாத புரத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொரு ளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

ராமநாதபுரம் சின்னக் கடைத் தெரு, காயிதெமில்லத் திடலில், மாவட்டத் தலைவர வருசை முஹம்மது தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகரத் தலைவர் கே. ஷேக் தாவூதி எம்.சி., கீழக்கரை நகர் தலைவர் சீனி சதக் இப்ரா ஹீம், வாணி பிரைமரி தலைவர் லியகத் அலி, பரமக்குடி நகர் பொருளாளர் கமருஸ்ஸமான், மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் முஹம்மது இக்பால், கடலாடி ஒன்றிய அமைப்பாளர் அப்துல் லத்தீப், நகரப்பொருளாளர் அமீர்தீன், ஏர்வாடி பிரைமரி தலைவர் இஸ்மாயில் ஆலிம், கீழக்கரை நகரச் செயலாளர் லெப்பை தம்பி வேதாளை செயலாளர் சாகுல் ஹமீது ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான் கலந்து கொண்டு சிறப் புரையாற்றினர்.

எம்.எஸ்.ஏ. ஷாஜஹான்

எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பேசும் போது குறிப் பிட்டதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய சமுதாயத்தில் 100 ஆண்டுகள் பயணித்து தடம் பதித்த பேரியக்கம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனித்துறையே கிடையாது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் பேராசிரியர் அவர்கள் நாடாளுமன்றத்தில் முதல் முத லாக சென்றபோது, முஸ்லிம் எம்.பி.க்களி டம் சமுதாய முன் னேற்றத்திற்கு பாடுபடுங்கள் என்று சொன்னார். மேலும், 38 எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு பிரதமரைப் பார்க்கச் சென்றபோது 15 கோரிக் கைகளை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கைகளில் ஒன்றுதான் சிறு பான்மை சமுதாயத்திற்கு தனித்துறை வேண்டும் என்பது. தனி அமைச் சரும் வேண்டும் என்றார். அதன் பலன்தான் இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் களின் நிலைப்பாட்டை அறிய சச்சார் கமிஷன், மிஸ்ரா கமி ஷன் அமைத்தார்கள்.

இதற்கு முன்பாக மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு பரிந் துரைகளை மத்திய அரசு வெளி யிட்டது. மிஸ்ரா கமிஷன் சிறு பான்மையினருக்கு 15 சதவீ தம் ஒதுக்க வேண்டும். அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் கொடுக்கச் சொன்னது. டெல்லியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்திலும் இதையே கோரிக்கையாக வைத்தோம்.

மதுரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழுவிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்காது. இதை உயர்த்தி தரும்வரை குரல் கொடுப்போம்.

இவ்வாறு எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் குறிப்பிட்டார்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசுகை யில் குறிப்பிட்டதாவது:

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் கூட்டம் இது. முஸ்லிம்களின் உரிமை நிலைத் திருக்க வேண்டும். இடஒதுக்கீட் டைப் பற்றி பல்வேறு கோரிக்கை களை வைத்தார்கள்.

பாரத நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எல்லா வகை யிலும் உரிமை வேண்டும். பெற்ற உரிமைகளை நழுவ விட்டு விடக்கூடாது. சுதந்திர போராட்டம் முடிவுக்கு வந்து நாடு இரண் டாக பிரிக்கப்பட்டது. முஸ்லிம் களுக்கு ஒரு நாட்டை உரு வாக்கி கொடுத்தால் பிரச் சினை தீர்ந்து விடும் என்று நேருவும், படேலும் நினைத்தார் கள்.

சில முஸ்லிம்கள் வடநாட் டிற்கு சென்று விட்டாலும்கூட, நாங்களும் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் என்று 1948ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக பிறந்தது. முஸ்லிம்களின் தனி உரிமைகளை பாதுகாப்பதி லும், விட்டு கொடுக்காமல் காயிதெ மில்லத் தலைமையில் தோன்றியது.

முஸ்லிம்லீக் ஜாதி இயக்க மல்ல, மதவெறி பிடித்த இயக்க மல்ல. இந்த நாட்டில் ஒட்டு மொத்த மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்று கூறும் இயக்கம். முஸ்லிம் லீகின் லட்சியங்கள் மூன்று.

தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாத் தல்.

இடஒதுக்கீடு என்பது நமது மூலாதாரக் கொள்கை. 1906லி ருந்தே இது தொடர்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு இல்லாமல் போனது. ஆனாலும், தொடர்ந்து சொல்லி, நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்கள்.

இன்று சிலர் எங்களால் தான் இடஒதுக்கீடு என்று பேசி வரு கிறார்கள். முஸ்லிம் லீக் மாநாட் டில் அப்போதைய முதல்வர் கலைஞரின் முன்பாக 3.5 சதவீ தம் கோரிககை வைக்கப்பட் டது. குறைந்தபட்சம் 5 சதவீதம் வேண்டும், அவரும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பரிசீலிப்போம் என்றார்.

இன்றைய முதல்வர் ஜெயல லிதாவும் உயர்த்தித் தருகி றோம் என்று தேர்தல் நேரத்தில் கூறினார். இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர் சொன்னதை நிறைவேற்றித் தரவேண்டும்.

மத்திய அரசு இன்று 4.5 சதவீத இட ஒதுக்கீடு சிறுபான் மையினருக்கு வழங்கியுள்ளது. இது போதாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளவை உயர்த்தித் தரவேண்டும்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., கூறினார்.

முன்னதாக மாவட்டப் பொருளாளர் ஏ.பி. சீனி அலியார் துவக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் மண்டபம் லியாகத் அலிகான், மாவட்ட உதவிச் செயலாளர் ஹஸன் ஆலிம், மாவட்ட உதவிச் செய லாளர் யாக்கூப், மாவட்ட செயற் குழு உறுப்பினர் அப்துல் அ ஜீஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் கமருஸ்ஸமான், முஹம்மது அப்துல் ரஹ்மான், மாவட்ட உதவிச்செயலாளர் அபு முஹம் மது ஆகியோர் உயாற்றினர்.

கவுரவ ஆலோசகர் சௌகத் அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மௌலவி ஸதானா முஹம்மது அரூஸி, மௌலவி முஹம்மது யாஸீன் யூசுபி, மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் முஹம்மது யூனூஸ் ஆலிம், மாணவரணி அமைப்பாளர் சிராஜ்தீன் ஆகியோரும் உரையாற்றினார்.

முன்னதாக சமுதாயப்பாட கர் முகவை சீனி முஹம்மது இயக்கப் பாடல்களை பாடினார். உலமாக்கள் அணி அமைப்பாளர் அன்வர் அலி ஆலிம் உலூமி நன்றியுரை கூறினார். பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

ரயில் நிலைய வரவேற்பு

சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இராமநாதபுரம் வந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.க்கு மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்டத் தலைவர் வருசை முஹம்மது நகரச் செயலாளர் சாதுல்லா கான், மாணவரணி சிராஜ்தீன், காட்பாடி ஒன்றிய அமைப்பாளர் அப்துல் லத்தீப் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்லீகினர் திரளாக கலந்து கொண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்