Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 14, 2007
உறுப்பினர் சேர்ப்பு-பொறுப்பாளர்கள் நியமனம் கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் தீவிரம் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு முடிவைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் மேலிடப் பார்வையாளராக தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைப்பு தேர்தல் கேரள, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்று நவம்பர் 26ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு வில் அங்கீகாரம் அளிக்கப்பட் டது. மற்ற மாநிலங்களில் 2012 மார்ச் க்குள் உறுப்பினர் சேர்ப்பு பணி, பிரைமரி, மாவட்ட தேர்தல் கள் நடத்திடவும் மாநில தேர்தல் களை மார்ச் இறுதிக்குள் நடத் திடவும் காலக்கெடு நிர்ணயிக் கப்படுகிறது.

2012 ஏப்ரல் மாதம் கேரளா வில் நடைபெறக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளை ஞர் அணியின் தேசிய மாநாட் டிற்கு முந்தைய தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூடி தேசிய நிர் வாகிகள் தேர்தலையும் நடத் திடவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. அனைத்து மாநிலத் தேர்தல் களையும் முறைப்படி நடத்திட தேர்தல் பார்வையாளர்கள் தேசிய செயற்குழுவில் நியமிக் கப்பட்டனர். ஆந்திர பிரதேசம் மற்றும் கர்னாடக மாநிலங்களுக் கான தேர்தல் பார்வையாளராக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் நியமிக்கப்பட்டு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்ப்புப் பணியை துவங்கி வைத்து 2012 மார்ச் க்குள் அம்மாநிலங்களில் அமைப்பு தேர்தல்களை முடித் திட நடவடிக்கை எடுத்து வரு கின்றார். அவருடைய சுற்றுப் பயண விவரம் வருமாறு:

ஆந்திர பிரதேஷ் மாநில செயற்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆந்திர பிரதேஷ் மாநில செயற்குழு கூட்டம் 08-01-2012 காலை ஹைதராபாத் தோஹா ஹோட்டலில் ஆந்திர மாநிலத் தலைவர் மஹ்பூப் நகர் காலித் ஜுபைதி தலைமையில் நடை பெற்றது. முஹம்மது அன்வர் ரப்பானி கிராஅத் ஓதினார், ஆந்திர மாநில பொதுச் செயலா ளர் செய்யது ஆஜம் மொய்னு தீன் வரவேற்றார்.

ஆந்திரா மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தேசிய செயற்குழுவில் எடுக்கப் பட்ட முடிவுகளுக்கும் கேரளா வில் நடைபெற விருக்கும் இளைஞர் லீக் தேசிய மாநாடு நடைபெறுவது குறித்தும் ஆந் திராவில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை துரிதபடுத்துவது குறித்தும் விளக்கி பேசி அனை வர்களுடைய கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மஹ்பூப் நகர் மாவட்ட தலைவர் எம். அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் முஹம் மது ஹுனைத் ராஜா, முஹம் மது சிராஜுதீன், இளைஞர் லீக் அமைப்பாளர் அப்துல் முனாப், ஹைதராபாத் மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் ஆஷியா பேகம், ஹைதராபாத் பெருநகர தலைவர், முஹம்மது அப்துல் அஜீஸ், செயலாளர் வழக்கறிஞர் செய்யது அலி முர்துஜா,

முஸ்லிம் மாணவர் பேரவை தலைவர் முஹம்மது இஸ்தி காக், செயலாளர் முஹம்மது ஜஹாங்கீர், பொருளாளர் ஷேக் கலீல், குத்துபுல்லாபூர் தொகுதி அமைப்பாளர் முஹம்மது அக்ரம், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வழக் கறிஞர் முஹம்மது அர்ஷத் பாஷா, செய்யது அஹ்மது மொய்னுதீன், மாநில செயலாளர் வழக்கறிஞர் செய்யது ஷாநவாஸ், மாநில துணைத் தலைவர் மிர்ஜா யூசுப் பேக், மாணவர் அணி ஹைதராபாத் பெருநகர துணை செயலாளர் முஹம்மது சமீர், மஹபூப் நகர் செயலாளர் முஹம்மது சாதிக் ஆகியோர் கருத்துரை வழங்கி னர். உறுப்பினர் சேர்ப்பு பணி மற்றும் பிரைமரி தேர்தல்களை நடத்திட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஹைதரா பாத் பெருநகரத்திற்கு வழக்கறி ஞர் செய்யது ஷாநவாஸ், மஹபூப் நகருக்கு முஹம்மது அப்துல் காதர் மற்றும் ஜாஹிர் ஜுபைதி, விஜயவாடா மற்றும் விசாகபட்டினம் ஆகிய மாவட் டங்களுக்கு முஹம்மது அன்வர் ரப்பாணி, நல்கோண்டா, ஆதி லாபாத், நிஜாமாபாத், கரீம்நகர் மற்றும் மெடாக், ஆகிய மாவட் ங்களுக்கு செய்யது ஆஜம் மொய்னுதீன், மிர்தா யூசுப் பேக் ஆகியோரும் கர்நூல், அனந்த பூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு காலித் ஜுபைதி, முஹம்மது அப்துல் காதர் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர்.

குன்டூர் மாவட்டததிற்கு ஆரிப் உசேன் காதிரி, நெல்லூர் மாவட்டத்திற்கு இக்பாலும் பொருப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

பிரைமரி தேர்தல் பொறுப்பா ளர்கள் அந்தந்த மாவட்டங்களில் பிப்ரவரி 15ம் தேதிக்குள் தேர் தல் முடித்து மாநில தேர்தல் பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் அனைத்து மாவட்ட தேர்தல் களும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் மாநில தேர்தல் பார்வையாளர் கள் முன்னிலையில் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆந்திரா மாநில புதிய பொதுக்குழு கூட்டத்தை 2012 மார்ச் 18ம் தேதி ஹைதராபாத் தில் தேசிய தலைவர், மாண்புமிகு இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகி யோர் முன்னிலையில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்ஷிப் தொலைக்காட்சியில் சிறப்பு பேட்டி

ஹைதராபாத் சென்ற தமிழ்நாடு மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பிரபல உருது தொலைக்காட்சியான முன்ஷிப் டி.வி யில் சிறப்பு பேட்டி அளித் தார். இந்திய அரசியல் முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் மத்திய மாநில அரசுகள் குறித்தும் பல் வேறு கேள்விகளை எழுப்பினர். இதன் பேட்டி 08-01-2012 இரவு சிறப்பு பேட்டியாக ஒலிபரப்பட் டது.

கர்நாடக மாநிலம் குல்பர்கா

ஆந்திர பிரதேஷ் மாநில செயற்குழு கூட்டத்தில் பங் கேற்றுவிட்டு இந்திய யூன்யன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 09-01-2012 கர்நாடக மாநிலம் குல்பர்கா சென்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கர்நாடக மாநிலத் குல்பர்கா மாவட்ட ஊழியர் கூட்டம் 09-01-2012 மாவட்ட அலுவலக வளாகத்தில் குல் பர்கா மாநகராட்சி மாமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் மொளலானா முஹம் மது நூஹ் தலைமையில் நடை பெற்றது.

மஹாராஷ்டிரா மாநிலம் நான்தாட், மாவட்ட தலைவர் இபுராஹிம் அபூ தமிழ்நாடு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எச். அப்துல் பாசித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேர் தல் பார்வையாளரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைத்து வார்டு பொறுப்பாளர் கள் இடத்திலும் உறுப்பினர் படிவத்தை வழங்கி உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை தீவிரப் படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.

குல்பர்கா வார்டு பொறுப் பாளர்களாக 1வது வார்டு அமீன் படேல், 2வது வார்டு முஹம்மது ஜாஹித், 4வது வார்டு அப்துல் கய்யூம், 5வது வார்டு ஆபிஸ் முஹம்மது இக்பால், 9வது வார்டு மின்ஜாவுதீன் படேல், 10வது வார்டு மன்சூர் படேல், 11வது வார்டு முஹம்மது அதீக், 13வது வார்டு சாதிக் இஷாக், 15வது வார்டு முஹம்மது அஜா ருதீன், 16வது வார்டு காஜா சத் ருதீன், 20வது வார்டு முஹம்மது காலித், 25வது வார்டு முஹம் மது ரஷீத் லுன்ஜி, 26வது வார்டு அப்துல் சலாம் ரவுஜ்ரி, 27வது வார்டு ஆசிக் ஜனதன், 32வது வார்டு முஹம்மது ஆசிப் கான், 34வது வார்டு காஜா அமீருதீன், 48வது வார்டு மௌலானா அப்துல் அமீது, 54வது வார்டு இலியாஸ் அஹமது. கூட்டம் நன்றி துஆவுடன் நிறைவுப் பெற்றது.

குல்பர்கா நிகழ்ச்சியை முடித்து கொண்டு தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நான்தாட் மாவட்ட தலைவர் இப்ராஹிம் அலி அபூ, குல்பல்கா மாமன்ற உறுப்பினர் மௌலானா முஹம்மது நூஹ் ஆகியோர் ஜனவரி 9ம் தேதி இரவு மஹா ராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் சென்றனர். அங்கு மாவட்ட தலைவர் உஸ்மான் அப்துல் கனி கலாடி வரவேற்று இயக்க சம்மந்தமாக கலந்துரையாடி னார்.

தார்வாடு

இக்குழுவினர் சோலாப்பூரில் இருந்து 10-01-2012 அன்று காலை கர்நாடக மாநிலத் தார்வாடு சென்றடைந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தார்வாட் மாவட்ட ஊழியர் கூட் டம் வித்யா வர்பிக்சிங் அரங்கில் மாவட்ட தலைவர் அஸ்லாம் தேகூர், தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலாளர் மௌ லானா முஹம்மது இலியாஸ் சிராட்டி வரவேற்றார்,

ஆபிஸ் பையாஜ் அஹ்மது கிராஅத் ஓதினார், கர்நாடகா மாநில சிறுபான்மை கமிஷன் முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கரீம் கல்லூரி பேராசிரி யர் அப்துல் கரீம், பிரபல வழக் கறிஞர் மீரல்கீரி, எக்ஸ்சைஸ் கமிஷன் ஓய்வு பெற்ற அதிகாரி ரியாஜ் அஹ்மது காஜி ஆகி யோர் கோபால்சிங் குழு, சர்ச் சார்குழு மற்றம் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கி பேசியதோடு அரசாங்கங்களின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அரசி யல் ரீதியாக ஒற்றுமை அவசியம் அதற்கு புதிய இயக்கங்களின் செல்வதைவிட இந்திய முஸ் லிம்களின் வரலாற்று தொடர்ச் சியாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைவதே சிறந்தது என்று பேசினர்.

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் நான்தாட் மாவட்ட தலைவர் இப்ராஹிம் அலி அபூ, குல்பல்கா மாமன்ற உறுப்பினர் மௌலானா முஹம் மது நூஹ் ஆகியோர் முஸ்லிம் லீகில் அனைவரும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்த னர். பகுதி வாரியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு உறுப் பினர் படிவம் வழங்கப்பட்டது. தார்வார்டு மாவட்டம் சந்தன் மட்டி பகுதிக்கு ராஜா சாப் சிக் காரி, கமருதீன் பீஜபூரி ஆகி யோரும் கல்கட்டி தாலுக்கா வுக்கு கொல்கொப்பா ராஜா சாக் கல்கரியும், கம்சங்வீ முஹம்மது இஸ்மாயிலும் அரு வத்கீ பகுதிக்கு பயாஜ் பட்டா னும், அம்பல்லி பதவிக்கு பக்ரு சாஹிப் முல்லாவு, குல்கொப்பா பகுதிக்கு பாஷா சாப் கல்கேரி யும், கோவன்கொப்ப பகுதிக்கு மஹ்பூல் தஸ்தகீர் சாஹிபும், சந்தன்மண்டி பகுதிக்கு முஹம் மது கவுஸ் ஜாஹிர்தார், முஸ்லிம் இளைஞர் லீகுக்கு உமர் பாரும் இனாம்தாரும், முஸ்லிம் மாண வர் பேரவைக்கு ஜலாலுதீன் ஜகாதியும் நியமிக்கப்பட்டனர். இறுதியாக கர்நாடக மாநிலத் தலைவர் மீர் மஹ்மூத் இனாம்தார் நன்றி தெரிவித் தார். துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது. பெல்காம்

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் நான்தாட் மாவட்ட தலைவர் இப்ராஹிம் அலி அபூ, குல்பல்கா மாமன்ற உறுப்பினர் மௌலானா முஹம் மது நூஹ் ஆகியோரை கொண்ட குழுவினர் தார்வார்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு 10.01.2012 மாலை பெல்காம் நகருக்கு சென்றனர்.

அங்கு அம்மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் தேசிய பொருளாளர் தஸ்தகீர் இபுராஹிம் ஆகா தலைமையில் நடைபெற்றது.

முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இபுராஹிம் ஷம்ஷீர் வரவேற்றார். கர்நாடக மாநில துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிம் லோடி கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். நான்தாட் மாவட்ட தலைவர் இப்ராஹிம் அலி அபூ, குல்பல்கா மாமன்ற உறுப்பினர் மௌலானா முஹம்மது நூஹ், கர்நாடக மாநில சுதந்திர தொழி லாளர் யூனியன் அமைப்பாளர் டாக்டர் ரஜ்பீர்சிங், மாவட்ட தலைவர் பந்தே நவாஸ், மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா, துணை அமைப்பாளர் சுதந்திரா தேவி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைத்து பகுதி பொறுப் பாளர்களுக்கும் உறுப்பினர் படிவத்தை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

கோவா

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் , ஹைதராபாத் குல்பர்கா, சோலாபூர், தார்வாத், பெல்காம், ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை துவக்கி வைத்து விட்டு 11.01.2012 கோவா மாநிலம் சென்றார். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவா மாநில அமைப்பாளர் ஷேக் வாஷிம், கோவா முஸ்லிம் முன் னனி அமைப்பாளர் அப்துல் மத்தீன் ஆகியோரை சந்தித்து நடைபெற விருக்கும் கோவ மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ரா ஹிம் ஆகா, நான்தாட் மாவட்ட தலைவர் இபுராஹிம் அபூ உடன் இருந்தனர்.

மங்களுர், சிமோகா, பெல்லாரி, பெங்களுர் ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம்

2012 ஜனவரி 13, 14, 15, ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில தர்தல் பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் காசர் கோடு, மங்களுர், சிமோகா, பெல்லாரி, பெங்களுர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் உறுப்பினர் சேர்ப்புப் பணியை துவங்கி வைக்கிறார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்