Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, August 19, 2018 7 Zul-Hijja 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 17, 2007
சைத்தானியத் நீங்கி இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ...? - கே.எம்.கே


உத்திர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 403 எம்.எல்.ஏ க்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. 2007 ஆம் தேர்தலில் தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

403 பேர் உள்ள உ.பி. சட்டமன்றத்தில் 56 முஸ்லிம்கள் உறுப் பினர்களானார்கள். இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

தற்போது உ.பி யில் 158 சிறுகட்சிகளும் ஜந்தாறு பெரிய கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலில் குதித்துள்ளன. உ.பி. முதல்வர் மாயாவதி, முஸ்லிம்களின் பெரும்பான்மை யான வாக்குகள் தனது கட்சிக்கே கிடைக்கும் என்று நம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்காக அவர் இருபெரும் திட்டங்களை மக்கள் முன்வைத்துள்ளார்.

ஒன்று, உ.பி. மாநிலத்தை ஐந்து சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அதில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள 19 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றை இணைத்து ஒரு தனி மாநிலமாக்க வேண்டும் என்று தெரிவித்து, அதற்கான மசோதாவையும் உ.பி. சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

இரண்டாவதாக, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலி யுறுத்தினார். இப்பொழுது பிற பிற்பட்டோர் வகுப்புகளுக்கு மத் திய அரசு ஒதுக்கியுள்ள 27 சதவீதத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை, அரசியல் சட்ட திருத்தம் செய்து முஸ்லிம்களுக்கென அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்க தனியே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி யுள்ளார்.

இவ்விரு கோரிக்கைகளையும் மத்திய அரசும் காங்கிரசும் நிராகரித்துவிட்டன. இடஒதுக்கீடு என்று 27 சதவீதத்திற்குள் 4.5 சதவீதம் எல்லாச் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினருக்கென்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு வரவேற்பைவிட எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் உ.பி தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் கட்சிகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பற்றிப் பலப்பல அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றன.

சற்றொப்ப 22 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள உ.பி யில் சுமார் நூறு தொகுதிகளைத் தீர்மானிக்கும் ஜனநாயக சக்தி முஸ்லிம்களிடம் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ கட்சிக்கு முன்பிருந்த நிலைமையில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றும் மாயாவதி கட்சிக்கே முதலிடம் கிடைக்கும் என்றும் பலவாறான அரசியல் ஆரூடங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

இந்தச் சூழலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பத்து இடங்களில் இதுவரை தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மொரதாபாத், முஜஸப்பராபாத், பிஜ்நூர், பரேலி, ஷஹரன்பூர், மீரட், ராம்பூர், பஹ்ராய்ச், காஜியாபாத், லக்னோ, பதாயூன், புலந்து ஷஹர், சித்தார்த்த நகர், ஜோதிபா பூலே நகர், பிலிபிட் சந்கபீர் நகர், ஸ்ராவஸ்தி, பாக்பாத் ஆகிய பதினொன்பது மாவட்டங் களில் வாழும் முஸ்லிம் வாக்களர்களின் கரத்தில் உ.பி யின் ஜனநாயக முடிவு இருக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தில் சுயநலக்கும்பல்கள் புகுந்து, மக்களைத் திசைதிருப்பி, சுரண்டிவாழும் சூழ்நிலை இன்றைக்கு அதிகரித்துவருகிறது. உ.பி ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் கொடியில் ஒன்றிணைந்து நின்ற வரலாறு உண்டு. அந்த வரலாறு திரும்பவும் வந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன.

முஸ்லிம்கள் முஸ்லிம் லீகில் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதில் பிறகட்சிகள் இருப்பதை விட அதிகமான கவனத்தை முஸ்லிம் பெயர் தாங்கிகள் செலுத்தி வருகின்றனர்.

உ.பி முஸ்லிம்களை அரசியலில் ஆட்டிப் படைக்கும் சைத்தா னியத் நீங்கி, அவர்களிடம் இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ?

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்