Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 18, 2007
சே பாக்’ அரண்மனையை புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் - கே.எம்.கே


சென்னை மெரீனா கடற்கரையில் எழில்மிகுந்து நிமிர்ந்து நின்ற புராதன எழிலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி 15-1-2012 இரவில் தீக்கிரையாகியுள்ளது.

தமிழக அரசுத்துறைகளின் ஆவணங்கள் தீயுண்டுள்ளன; அதோடு, சேப்பாக்க அரண்மனையாகிய எழிலகப் பகுதியும் சிதைந்துள்ளது. தமிழகத்தில் 18-ம் நூற்றாண்டில் கர்நாடக நவாபு களின் ஆட்சி நடந்தது. முதலில் நவாபுகளின் தலைநகர் ஆற்காடு; பின்னர், திருச்சி இணைத் தலைநகர் - தாருல் உமாரா; நவாபு முஹம்மது அலி காலத்தில் தலைநகர் சென்னைக்கு வந்தது.

நவாபுகளில் மக்கள் செல்வாக்கும், பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்தவர்களில் முதன்மையானவர் நவாபு வாலாஜா ஆவார். வாலாஜா நவாபு காலத்தில் - சற்றொப்ப 245 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட எழில் மாளிகை தான் இன்றைய தமிழக அரசின் எழிலகம். நவாபின் அரண்மனையைச் சுற்றிலும் ஆறு பூங்காக்கள் அணி செய்தன; அதனால்தான், `சே பாக்’ என்று பெயர் வந்தது. அது இன்றைக்கு சேப்பாக்கம் ஆகி விட்டது.

நவாபு வாலாஜாவின் அரண்மனையை பிரிட்டிஷ் அரசு ஏற்றது; பின்னர் தமிழக அரசுக்குரியதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. `சேப்பாக்கம் அரண்மனை’ இந்திய - இஸ்லாமிய கட்டடக் கலையின் சின்னமாகும். சென்னைக்கு அழகு சேர்க்கும் பழமையான கட்டடங்களில் சேப்பாக்க அரண்மனை - எழிலகம் தலைமையானது என்றால் அது மிகையல்ல.

எழிலகத்தில் எழுந்த திடீர் தீயால் அதன் ஒரு பகுதி மிகவும் சிதலமடைந்திருப்பது உண்மையே. சிதலமடைந்ததைச் சீர் செய்து, திருத்திச் செப்பனிட்டுப் புதுப்பித்து மீண்டும் எழிலகத்தின் எழிலார்ந்த கட்டடத்தை உருவாக்குவதுதான் நியாயமான ஒன்றாகும். பொதுப் பணித்துறை அமைச்சர் கூற்றை ஏற்று அரசு அதிகாரிகள், எழிலகத்தை இடித்து விட வேண்டும் என்று யோசனை கூறியுள்ளனர்; அதனடிப்படையில் அரண்மனை விரைவில் இடிக்கப்படும் என்றும் அறிவிக் கப்படுகிறது.

சேப்பாக்க அரண்மனையை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சரித்திர வல்லுநர்கள், தொல்பொருள் பாதுகாப்பு சங்கத்தினர் கருத்துத் தெரிவித்திருக்கிறார் கள்.

ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

``நவாபு வாலாஜா நிர்மாணித்த அரண்மனை தீக்கிரையாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கும் செய்தியாகும். ஆனால், தீயைக் காரணங்கூறி, அரண்மனையை இடித்துவிட முடிவு எடுப்பது நியாயமற்றது. அதன் பழம்பெருமையை நினைவிற் கொண்டு, அந்தப் புராதன கட்டடத்தைப் புதுப்பித்து பழைய எழிலார்ந்த நிலைக்கு எழுப்ப வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நவாபும் நாட்டில் உள்ள பழம் கட்டடப் பிரியர்களும் பாதுகாப்புச் சங்கத்தினரும் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் `தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (18-1-2012) தலையங்கம் எழுதியிருந்தது. சென்னையில் 600-க்கும் மேற்பட்ட புராதன சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டடங்க ளின்சிறப்புகளைக் கூறி, அவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமையென்று தலையங்கம் எடுத்துக் காட்டி யிருக்கிறது. சென்னைப் பல்கலைக் கழக சென்டினெரி ஹால் இடிக்கப்படவில்லை; புதுப்பிக்கப்பட்டது.

சென்னை ஐ.ஜி. அலுவலகம் இடிக்கப்படவில்லை; புதுப்பிக்கப்பட்டது.

அண்ணாசாலையில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் கட்டடம் தீக்கிரையாகியது; அது இடிக்கப்படவில்லை; புதுப்பிக்கப்பட் டது. சென்னை கோகலே ஹால் இடிக்கப்படவில்லை; புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை கார்ப்பரேசன் பராமரிப்பில் உள்ள விக்டோரியா ஹால் இடிக்கப்படவில்லை; புதுப்பிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் நவாபுகளின் ஆட்சி இருந்தது என்பதற்கு இன்றுள்ள அடையாளங்களில் ஒன்றாக எழிலகம் என்னும் சேப்பாக்கம் அரண்மனை விளங்குகிறது.

சென்னை திருவல்லிக்கேணி நவாப் பள்ளி, திருச்சி கோட்டை நவாப் பள்ளிகளோடு சேப்பாக்கம் அரண்மனை முந்திய வரலாற்றை நினைவுப்படுத்துவன வாகும்.

நவாப் வாழும் அமீர் மகால் மற்றும் அந்தப் பகுதிகள் யாவும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நவாபுகளின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவை என்பதைக் கண்கூடாக காண்பதற்குரிய சின்னம் அது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய - சாரசெனிக், அதாவது, இந்திய - இஸ்லாமிய கட்டடக் கலையின் மகத்துவத்துக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு இந்த அரண்மனை.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் சேப்பாக்கம் சாலையின் பெயர் மாற்றம் செய்ய முனைந்தபோது, அந்த சாலையின் பெயர் வாலாஜா சாலை என்றிருப்பது தொடர வேண்டும் என்னும் கோரிக்கையை தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் அரசுக்கு முன் வைத்தார். பெயர் மாற்றம் நிறுத்தப்பட்டு, அது இப்பொழுதும் வாலாஜா சாலை என்றே வழங்குகிறது.

இன்றைய அரசுக்கும் கோரிக்கை வைப்போம். சிங்கார சென்னையில் பழம்பெருமையைப் பாதுகாக்கும் அடையாளச் சின்னமாக விளங்கும் சேப்பாக்கம் அரண்மனையை, அதன் இந்திய - இஸ்லாமிய கட்டடக் கலை வடிவிலேயே திருத்திச் செப்பனிட்டுப் புதுப்பித்து நிர்மாணிக்க வேண்டுகிறோம்.

இதே மெரீனா கடற்கரைச் சாலையில் உள்ள குயின் மேரீஸ் கல்லூரி கட்டடம், பழமை வாய்ந்தது என்பதற் காகவே பாதுகாப்புப் பெற்றது. பழையனதைப் பாதுகாப்பது நிகழ்காலத்துக்கு பெருமை சேர்க்கும்; இத்தகைய நிகழ்காலமே வளமான எதிர்காலத்துக்கு வழிகாட்டும். நூறாண்டைக் கடந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவிட மாட்டோம் என்று குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் நுட்பமும், நூதனமும் நிறைந்த வரலாற்றுச் சின்னமான சேப்பாக்கம் அரண்மனையை இடிக்கக் கூடாது என்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டாமா?

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்