Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 19, 2007
பா.ஜ.க.வின் இந்து மதவாத அரசியல்: தி ஹிண்டு’’ நாளேடு சாடல்- கே.எம்.கே


வட இந்திய மாநிலங்களான உத்திர பிரதேசம், உத்தரகாண்டம், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகியவற்றில் பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இப்பொழுது எல்லோரும் அறிந்ததே.

உத்திர பிரதேசத்திலும், உத்தரகாண்டத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் செய்யும் தேர்தல் பிரச்சாரம், இந்திய ஒற்றுமை-ஒருமைப் பாட்டுக்கும், சமூக நல்லிணகத்துக்கும் சமதர்ம சமூக நீதிக் கொள்கைக்கும் எதிரானதாக இருந்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி லக்னோவில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதை `தி நியு இந்தியன் எக்ஸ் பிரஸ்’ (18.1.2012) ஆங்கில நாளேடு பிரசுரித்திருக்கிறது.

``பாரதீய ஜனதா கட்சி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைச் சகித்துக் கொள்ளாது. இது முழுவதும் சட்டவிரோதமானது; இந்திய அரசியல் சட்டத்துக்கு முரண்பட்டது. ஆகவே, இதை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டம் நடத்துவோம். ஜனவரி 23ல் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த நாள்-அன்றைய தினம், மத்திய அரசு மைனாரிடிகளுக்கு, முக்கியமாக முஸ்லிம்களுக்கு, அரசு அலுவல்களிலும், கல்விக் கூடங்களிலும் இட ஒதுக்கீடு தரும் அரசாணையைத் தீயிட்டுக் கொழுத்துவோம் (இதை கட்காரியுடன் இருந்த உ.பி. பா.ஜ.க. மாநிலத் தலைவர் சூரியா பிரதாப் ஷாஹி அறிவித்தார்.) மத்தியஅரசின் இந்த அரசாணையை திரும்பப் பெறாவிட்டால், நாட்டில், நாட்டுப் பிரிவினையின் போதிருந்த நிலைமை உருவாகி, தேசத்தில் வகுப்புக் கலவரங்கள் மூளும். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்துப் பேசி காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சியும் முஸ்லிம்களை முட்டாளாக்கி வருகின்றன. உ.பி. தேர்தலில், பிற்பட்ட வகுப்பினரிடம் பிரச்சாரம் செய்யும் போது, அவர்களுக்குரிய 27 சதவீதத்தில் இருந்து திருடி, காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு 4.5 சதவீதம் அளித்திருக் கிறது என்று கூறுவோம்’’.

இப்படிப்பட்ட பொய்யான, முன்னுக்குப் பின் முரணான, சட்ட விரோதமான, கலவரத்தை தூண்டக் கூடிய கருத்துக்களை பா.ஜ.க. தலைவர் உ.பி.யில் தூவி வருகிறார்.

மாலை முரசு (18.1.2012) இதழில் பின்வரும் செய்தி பிரசுரமாகியிருக்கிறது: ``உத்தகாண்டில் பசு சிறுநீரை சேகரித்து மருந்து தயாரிக்க பயன்படுத்துவோம்-பாரதீய ஜனதா தேர்தல் வாக்குறுதி’’ என்னும் தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளதாவது:

``இந்துக்கள் புனிதமாக கருதும் விலங்கு பசு. உத்தரகாண்டில் பாரதீய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் பசுவின் சிறுநீரை அதிக அளவில் சேகரித்து அதில் இருந்து பல்வேறு மருந்துகள் தயாரிப்போம். பசுவை வளர்க்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்படும். பசு சிறுநீரில் இருந்து `ஆர்க்’ என்ற ஜூஸ் தயாரித்து அதை புற்றுநோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பசு சிறுநீரில் இருந்து காது, கண் நோய்களுக்கான மருந்து தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது. தினமலர் (19.1.2012) கோமியத்தின் மகாத் மியம் பற்றி வந்த செய்தியை இன்றைக்கு வெளியிட்டிருக்கிறது.

உ.பியில் வகுப்புக் கலவரம் பற்றிய பிரச்சாரம் துவங்கியிருக் கிறது; உத்தரகாண்டில் மாட்டு மூத்திரத்தை எல்லோரும் குடித்தாக வேண்டும் என்னும் பரிச்சாரம் ஆரம்பமாகியிருக்கிறது.

உ.பி., உத்தரகாண்டத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் என்ன செய்யும் என்பதற்கு மேலே சொன்னவை ஒரு சில உதாரணங்களாகும். மத்திய பிரதேசத்தில் இப்பொழுது பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது; குஜராத்தில் பா.ஜ.க., மோடி ஆட்சி நடக்கிறது. குஜராத்தில் சிறுபான்மைக்கு எதிராக, மனிதவர்க்கத்துக்கு எதிராக எதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தினமும் பத்திரிகையிலும் நீதிமன்ற விசாரணையிலும் வந்த வண்ணமுள்ளன.

மத்திய பிரதேசத்தில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியில் சமீபத்தில் மாடறுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு இதை முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமாக்கி, முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் துவங்கியுள்ளன.

அதோடு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் `யோகா’ பற்றிய பாடம் கட்டாயமாக்கி, அதன் ஒரு பகுதியாக `சூரிய நமஸ்காரம்’ செய்யு மாறு மாணவ-மாணவியர் வற்புறுத்தப்பட்டுள்ளனர். சூரியனைத் தெய்வமாகக் கும்பிடுவதை முஸ்லிம்கள் எப்படி ஏற்க முடியும்? வந்தே மாதரம்- பாரத மாதாவை வணங்குவோம் என்பதை எதிர்த்து இந்த நாட்டில் எவ்வளவு காலமாகப் போராடும் நிலை நீடிக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

`தி ஹிண்டு’ (19.1.2012) ஆங்கில நாளேடு இன்று முதல் திரு ராம் இருந்த ஆசிரியர் பொறுப்பை திரு சித்தார்த் வரதராஜன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. புதிய ஆசிரியர் பொறுப்பேற்ற இன்றைய தினத்தில் `பிளேயிங் தி கம்யூனல் கார்டு’ என்னும் தலையங்கம் வந்திருக்கிறது. காய்தல் உவத்தல் இன்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரையாகத் தலையங்கம் தரமிகுந்து அலங்கரிக்கிறது. அதில் பா.ஜ.கட்சி பற்றி வரும் வாசகம் அந்தக் கட்சிக்குப் பாடமாகும்.`Clearly. a stint in power and more that a decade of coalitional leadership have not changed the BJP. whose single preoccupation is Hindu sectarian politics தெளிவாகக் கூறுவதனால், ஆட்சியில் இருப்பதாலும், பத்தாண்டுக்கு மேலாக கூட்டணி ஆட்சித் தலைமை வகுத்த காலத்தாலும் பா.ஜ.க. மாறவில்லை; அதன் ஒரே நோக்கம், இந்து மதவாத அரசியல்தான்’’-இவ்வாறு இந்து தலையைங்கம் கூறுகிறது.

நாட்டு மக்கள் இதை நன்றாகப் புரிந்திருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்கள் இதைத் தெரிந்திருக்கிறார்களா? உ.பி. மற்றும் உத்தரகாண்டத் தேர்தல் முடிவுகள் இதற்குப் பதில் அளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்