Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 21, 2007
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா? - கே.எம்.கே


தி.மு.க. ஆட்சியின்போது முதல்வர் டாக்டர்கலைஞர் தனது கற்பனைத் திட்டமாக மட்டும் அல்லாமல் தமிழக மக்களின் கனவுத் திட்டமும், இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அன்றைக்கு முதல்வராக இருந்தபோது விரும்பி, அதற்காகப் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகவும் இருந்த, தமிழக அரசின் எல்லாத் துறைகளும் இயங்கும் வகையில் ஒரு புதிய தலைமைச் செயலகம்வேண்டும் என்னும் பல்லாண்டுத் திட்டம், சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினத் தோட்டத்தில் நனவாயிற்று.

தமிழகச் சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் சிறப்பாக இயங்கும் வகையில் பல்லடுக்கு மாளிகைக்குரிய அடிக்கல் நாட்டுவிழா 2008ல் நடந்தது; ஜெர்மனி தேசத்து கட்டக் கலை நிபுணத்துவ நிறுவனத்தாரிடமிருந்து கட்டடத்தின் வரைபடம் தயாரானது; ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் அண்டு இண்டஸ்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எழில் மிகுந்த தலைமைச்b சயலகம் எழுப்பும் பணி தரப்பட்டது; பல்லடக்குக் கட்டடத்தின் ஒரு பகுதியாக சட்டப் பேரவை நடக்கும் இடமும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அறைகளும், சிலபல அரசுத் துறைகளின் தலங்களும் பூர்த்தியடைந்தன; பல்லடுக்குக் கட்டடம் முழுவதும் நிறைவேறவில்லை. இருந்தாலும் எழில்மேவிய தமிழகத் தலைமைச் செயலகத்தை உருவாக் கியாகிவிட்டது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் 2010 மார்ச் 13ல் திறப்பு விழா நடந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பத்திரிகை வாயிலாகவும், ஊடகங்கள் மூலமும் இந்த விழாவைக் கண்டும் படித்தும் களித்திருக்கிறது. அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையில் நடந்த விழாவில், பாரதப் பிரதமர் உலகப் பெரும் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங், தியாகத்தின் திருவிளக்கு என்று போற்றப்படும் சோனியா காந்தி அம்மையார் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழகத்துக்கு விரும்பிய தலைமைச் செயலகம் எழுந்துவிட்டது என்று எல்லோரும் பெருமை கொண்டோம். அந்தத் திறப்புவிழாவில் அ.இ.அ.தி.மு.க. கலந்து கொள்ள வில்லை.

2011 பிப்ரவரியில் தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இடம் பெற்ற சட்டப்பேரவைக் கூட்டம் புதிய சட்டமன்றத்தில்தான் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பங்கேற்றுச் சிறப்பித்தது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் இலக்கணம் அதுதான் என்று எல்லோரும் கருதி மகிழ்ந்தனர்.

2011 மே மாதத்தில் தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்தல் வந்தது. அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிய சட்டமன்றக் கட்டம் பற்றியோ, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்தப் புதிய தலைமைச் செயலகத்தை இப்பொழுது சொல்வதுபோல ஒரு உயர்மட்ட `ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி’ ஆக்குவோம் என்றோ கூற வில்லை. ஏதோ ஒரு கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா, தான் ஆட் சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணிப்போம் என்று கூறிய செய்தி ஒரு நாள் பத்திரிக்கையில் வந்தது.

நேற்று (20.1.2012) சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சு, புதிய தலைமைச் செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்று வதற்குத் தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்புவரும்வரை அரசுபுதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் ஒரு செங்கல்லைக் கூட மாற்றக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தும் இருக்கிறது.

இன்றைய தி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேடு (21.1.2012) ‘டுநபயட சநஎநசளநள பயடடிசந கடிச தயலயடயடiவாய படிஎவ’ `ஜெயலலிதா அரசுக்கு வரிசையாக வரும் சட்டப் பின்னடைவுகள்’ என்னும் தலைப்பில் ஏ. சுப்ரமணி எழுதிய செய்திக் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

அதில், சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், முத்தமிழ் பேரவைக்கு நிலம் வழங்கியது, மக்கள் நலப் பணியாளர் விவகாரம், இப்பொழுது தலைமைச் செயலக மாற்றல் விவகாரம் ஆகியவற்றில் ஜெயலலிதா அரசின் முடிவுகள் எல்லாமும் நீதிமன்றத்தால் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்று அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

ஒரு சீனியர் வக்கீல் `ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே இந்த அளவுக்கு நீதிமன்றத்தால் புறந்தள்ளப்பட்ட வழக்குகள் ஜெயலலிதா ஆட்சியில் நடந்துள்ளதுபோல எப்பொழுதும் நடக்கவில்லை. என்னுடைய நீண்ட அனுபவத்தில் இது போன்றதை நான் பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார். இதுவே இன்றைக்கு நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது.

ஓமந்தூரார் அரசின் தோட்டத்து தலைமைச் செயலகம் பற்றி மட்டும் குறிப்பிட வேண்டுமானால், இதனை அரசின் கவனத்துக்குத் தெரிவிக்கிறோம்.

புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பியிருந்தார்; அதைக் கலைஞர் நிறைவேற்றி தமிழக மக்கள் கனவை நனவாக்கினார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு முன்பே, இது கூடாது என்று அ.இ.அதி.மு.க. அறிவிக்க வில்லை; நீதிமன்றத் துக்குச் சென்ற தங்களின் கருத்தை வலியுறுத்தவில்லை.

தேர்தல் அறிக்கையில் தலைமைச் செயலகம் பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது, நீதிமன்றமும் தமிழக அரசின் தவறான போக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

2011ல் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க. இன்றைக்கு தலைமைச் செயலகம் பற்றிக் கூறு வதும், செய்வதும் முற்றிலும் முரண்பாடான போக்காகும்; இது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டங்களை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செல்வி ஜெயலலிதா நடத்திக் கொள்ளட்டும். அரசுத் துறைகளுக்காகக் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தில் எல்லாஅரசுத் துறைகளும் இடம் பெறட்டும்.

அதற்கு முதல் படியாக, எழிலகத்தில் இயங்கிய துறைகள் எல்லாவற்றையும் புதிய தலைமைச் செயலகத்துள் கொண்டுவர வேண்டும். எழிலகத்தில் தீ பிடித்ததால், அங்குள்ள அரசுத்துறைகளுக்கு இடம் தேடி அலைய வேண்டுமா? இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா?

முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அடுத்தவர்கள் தரும் அவசர ஆலோசனைகளை ஒதுக்கிவைத்து விட்டு, ஆர அமர ஆலோ சித்தால், இதில் உள்ள நியாயம் புரியும்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்