Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 21, 2007
கர்நாடக மாநிலத்தில் முழுவீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு பணிகளை முறைப்படுத்திடும் வகையில் உறுப்பினர் சேர்ப்புப் பணி பிரைமரி, மாவட்ட, மாநில தேர்தலை 2012 மார்ச் மாதத்திற்குள் நிறைவுச் செய்திட முடிவு செய்யப்பட்டது.

இப்பணிகளை ஒருங்கிணைத்திட அனைத்து மாநிலங்களுக்கும் அமைப்புப் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கான மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 2012 ஜனவரி 8 முதல் 11 ந் தேதி வரை ஹைதராபாத், குல்பர்கா, தார்வார்டு, பெல்காம், கோவா ஆகிய இடங்களுக்குச் சென்று உறுப்பினர் சேர்ப்புப் பணியை துவங்கி வைத்து பிரைமரி தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் நியமித்தார். இரண்டாம் கட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 2012 ஜனவரி 13 ந் தேதி காசர்கோடு, உல்லால் ஆகிய ஊர்களுக்கு சென்று விட்டு மங்களுர் சென்றார்.

மங்களூர்
13.01.2012 மாலை மங்களுர் முஸ்லிம் மத்திய குழு அலுவலகத்தில் மாவட்ட முஸ்லிம் லீகின் ஊழியர் கூட்டம் மாவட்ட தலைவர் சி. அஹமது ஜமால் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எச். முஹம்மது இஸ்மாயில் வரவேற்றார்.

இக்கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி மேலிட பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விளக்கி பேசி உறுப்பினர் படிவத்தை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

உல்லால் இப்ராஹிம் இலியாஸ், பி.சி. ரோடு தலைவர் ஷரீப் நியாஜ், யாகூப், பெங்கரா தலைவர் ஆதம் பாவா, அப்துர் ரஹ்மான் பாவா, செய்யது அஹமது பாஷா தங்ஙள், நௌஷாத், கே. இப்ராஹிம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மேலிட பார்வையாளர் காசர்கோடு என்.ஏ. அபூபக்கர் இறுதியாக பேசினார். பிரைமரி பொறுப்பாளர்களாக பெங்கரா பகுதிக்கு அப்துல் சாலி, இப்ராஹிம், பி.சி. ரோடு பகுதிக்கு ஏ.எஸ். ஷரீப், உல்லால் பகுதிக்கு இப்ராஹிம் இலியாஸ், முஹம்மது ஜமால், ஹரக்கலா பகுதிக்கு இலியாஸ், ஜாய்கட்டா பகுதிக்கு ஹாஜி ஷரீப், மங்களுர் பந்தர் பகுதிக்கு வி. அப்துல் காதர், பாஷா தங்ஙள், முஹம்மது இஸ்மாயில், பண்டுவால் பகுதிக்கு கே. இபுராஹிம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

சிமோகா
மேலிட பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பட்கல் வழியாக சிமோகா சென்றார். 14-01-2012 சிமோகா மாவட்ட ஊழியர் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிமோகா மாவட்ட சொந்த அலுவலகமான காயிதெ மில்லத் லீக் ஹவுஸ் கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கட்டிடத்தில் அல்ஹிலால் ஆங்கில பள்ளி 8ம் வகுப்பு வரை முஸ்லிம் லீக் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தலைவர் செய்யது ஆலம்ஷா தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவன் முஹம்மது அத்னான் கிராஅத் ஓதினார். மாணவி தன்ஷியா நபி புகழ் நாத் பாடினார். மாவட்ட செயலாளர் அப்துல் ரஹிம் வரவேற்றார்.

இக்கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி மேலிட பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விளக்கி பேசி உறுப்பினர் படிவத்தை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

பள்ளி தாளாளர் பர்வேஸ் அஹமது சாகர் கிளை தலைவர் எஸ்.எம். தங்ஙள், செயலாளர் செய்யது முனவ்வர், சிமோகா தாலுகா தலைவர் சல்மான், செயலாளர் இப்திகார் சலீம், சரபா பகுதி தலைவர் அப்துல் ஹலீம், ஜபருல்லாஹ் கான், நசீம் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பிரைமரி தேர்தல் பொறுப்பாளர்களாக சாகர் பகுதிக்கு எஸ்.எம். தங்ஙள், முனவ்வர், பத்தாவாதி பகுதிக்கு அப்துல் ரஹிம், சிமோக நகரத்திற்கு பர்வேஸ் இஸ்திகார் அலி, சல்மான் அலி, சராப் பகுதிக்கு ஹாபிஸ் அப்துல் ஹலீம், சிக்காபூர் பகுதிக்கு அப்துல் ஹமீது, சிரலகுப்பா பகுதிக்கு அப்துல் மஜீத் ஆகியோரும் நியமிக்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டன.

பெல்லாரி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெல்லாரி மாவட்ட ஊரியர் கூட்டம் 14-01-2012 மாலை பெல்லாரி , பண்டிமோடு இந்துஸ்தான் அரங்கில் மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சமீர் சேட் வரவேற்றார். இக்கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி மேலிட பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விளக்கி பேசி உறுப்பினர் படிவத்தை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

அகில இந்திய திப்பு சுல்தான் பேரவை தலைவர் கப்பாக்கல் ரசூல் சாப் மன்சூரி, பன்டிமோடு மஹல்லா முஹம்மது பாரூக், எஸ்.பி. சர்கில் முஹம்மது அல்தாப் ஹுசைன், பெல்லார்பெட் செய்யது அஹமது, லாலா கமர் நாசிர் பாஷா உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

வார்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பெங்களூரு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெங்களூரு மாவட்ட ஊழியர் கூட்டம் மேலிட பார்வையாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமையில் 15-01-2012 பெங்களுரு ஹோட்டல் ஜியோ அரங்கில் நடைபெற்றது.

கர்நாடக மாநில செயலாளர் நௌஷாத் வரவேற்றார். சிராஜ் இப்ராஹிம் சேட், கேரள முஸ்லிம் கலாச்சார மைய தலைவரும், பெங்களுரு மாநகராட்சி உறுப்பினருமான ஏ.பி. காதர் ஹாஜி, மூத்த தலைவர் மீர் சைபுல்லாஹ் நயீம், ஹாஜி அப்ரோஸ் சேட், கர்நாடக முஸ்லிம் முத்தஹிதா மகஸ் பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது இக்பால், ஏ.பி. அப்துல்லாஹ் குன்னி, கே.வி.பி. சுலைமான், வாணியம்பாடி எஸ்.டி. நியமத்துல்லாஹ் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.

பெங்களுரு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்புப் பணி மற்றும் பிரைமரி அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு சிராஜ் இப்ராஹிம் சேட் சாஹிபை ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுவினர்களாக ஆசிம் அப்ரோஸ் சேட், மீர் சைபுல்லாஹ் நயீம், ஏ.பி. காதர் ஹாஜி, டி.சி. சிராஜ், நௌஷாத், டி. முஹம்மது ரபீ, அப்துல் ரஹ்மான், சி. முஹம்மது நயீம், ஷம்சுதீன், எஸ்.டி. நியமத்துல்லாஹ், இப்ராஹிம் ஜியோடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அமைப்புத் தேர்தல்
கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்களிலுள்ள அனைத்து பிரைமரி தேர்தல் 2012 பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடித்து நிர்வாகிகள் விவரத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு பிரைமரி தேர்தல் பொறுப்பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட தேர்தலும் 2012 பிப்ரவரி 29ம் தேதிக்குள் மாநில தேர்தல் பார்வையாளர் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பொறுப்பாளர் முன்னிலையில் அறிவிக்கப்படும் தேதிகளில் நடத்தப்பட்டு அதன் விவரத்தை தேசிய தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, மண்ணடி, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும் என்றும், மாவட்ட தேர்தல் நடைபெறும் விபரம் பிரைமரி நிர்வாகிகளின் பட்டியல் கிடைக்கப்பெற்ற உடன் மாநில தேர்தல் பார்வையாளரால் அறிவிக்கப்படும்.

கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்களின் நடைபெற்ற அனைத்து மாவட்ட கூட்டங்களிலும் குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 10 பிரைமரி அமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அமைப்புக்களிலும் இயக்கத்தின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அணிகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, வனிதா லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகியவைகளுக்கு பொறுப்பாளர் களை தேர்வு செய்ய வேண்டும். குறைந்தது 10 மாவட்டங்களிலாவது மாநில தேர்தலுக்கு முன்பாக முறையாக அமைப்பை ஏற்படுத்திட கர்நாடக மற்றும் ஆந்திரா மாநில நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் 2012 மார்ச் 17 ம் தேதி சனிக்கிழமை காலை பெங்களுரிலும் ஆந்திரா மாநில தேர்தல் 2012 மார்ச் 18 ம் தேதி ஞாயிற்றுக்கிழலை காலை ஹைதாராபாத்திலும் தேசிய தலைவர் மத்திய இணை யமைச்சர் மாண்புமிகு இ. அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் ஆகியோர் முன்னிலையில் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்பு ஊழியர் மத்தியில் புதிய உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. முறையான தகவல் பரிமாற்றம் ஒருங்கிணைப்புப் பணிகள் அவசியம் குறித்து ஊழியர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் தேசிய - மாநில தலைமையிடம் இருந்து அவ்வப்போது வழிகாட்டும் நெறிமுறைகள் பெற்று இயக்கத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றிட ஊழியர்கள் உறுதியுடன் கூறியது மேலிட பார்வையாள ருக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக அமைந்தது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்