Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 22, 2007
இராமநாதபுரத்தில் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு கூடுதல் ரயில் சேவை, வசதிகள் செய்து தர வேண்டுகோள்


தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தீபக் கிருஷன் ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்தார். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பாலம் உள்ளிட்டவை களை பார்வையிட்ட அவர் ராமநாதபுரம் ரிங் ரோட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளையும், கட்டப்பட உள்ள பாலத்திற்கான இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் மானாமதுரை புறப்பட்டுச் சென்றார்.

எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் தலைமையில் கோரிக்கை மனு

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் தலைமையில் மாவட்ட உதவிச் செயலாளர்கள் லியாகத் அலி, யாக்கூப், பனைக்குளம் அபு முஹம்மது, நகரச் செயலாளர் சாதுல்லா கான், மாணவர் அணியின் சிராஜுதீன், பனைக்குளம் சீமான் சாகுல் ஹமீது, ராமநாத புரம் நாசர் அலிகான் உள்ளிட் டோர் சந்தித்து கோரிக்கை மனுக் களை அளித்தனர்.

ராமேஸ்வரம், மதுரை இடையே தற்போது இயக்கப் பட்டு வரும் ரயிலின் நெருக்க டியைத் தவிர்க்க கூடுதல் பெட்டியை இணைக்கப்பட வேண்டும். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி பகுதிகளின் மாணவர்களின் வசதிக்காகவும், அரசுப் பணி யாளர்களின் வசதிக்காகவும், ராமேஸ்வரத்திலிருந்து 8 மணிக்கு புறப்பட்டு மதுரைக் கும், மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு ராமேஸ் வரம் செல்லும் வகையிலும் ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும்,

ராமேஸ்வரம் - மதுரை இடையே இண்டர்சிட்டி எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்படவும், மீட்டர்கேஜ் பாதையில் இயங்கிய ரயில்களை அகல ரயில் பாதையில் இயங்கவும்,

திண்டுக்கல் - மதுரை, திண்டுக்கல் - செங்கோட்டை, மதுரை - செங்கோட்டை, கொல் லம் - மதுரை, மானாமதுரை - திருச்சி ஆகிய ரயில்களை ராமேஸ்வரம் வரை நீடித்து இயக்கவும்,

சென்னை விரைவு ரயில் நேரத்தை மாற்றியமைக்க...

சென்னையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் 16,713 எண் விரைவு ரயிலை இரவு 7 மணிக்குப் பிறகு சென்னை யிலிருந்து மாற்றியமைக்கவும், ராமேஸ்வரம் - சென்னை இடையிலே சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கவும்,

மதுரையிலிருந்து இயக்கப் படும் வைகை, குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் களில் இணைக்கப்படும் பெட்டி களை ராமேஸ்வரத்திலிருந்து புறப்படச்செய்யவும், மதுரையி லிருந்து புறப்படும் குருவாயூர் - சம்பர்கிராந்தி, திருச்சியிலி ருந்து புறப்படும் ஹவுரா ஆகியவற்றை ராமேஸ்வரத்தி லிருந்து புறப்படச் செய்யவும்,

இந்து - முஸ்லிம் - கிறிஸ் தவர்களின் புனிதத்தலங் களான ராமேஸ்வரம் - நாகூர் - வேளாங்கன்னி இணைத்து தினசரி ரயில் இணைக்கவும், வாராந்திர ரயில்களாக இணைக்கப்படும் ராமேஸ்வரம் - புவனேஸ்வர், ராமேஸ்வரம் - வாரணாசி, ராமேஸ்வரம் - ஓகா, ரயில்களை வாரம் 3 முறை இயக்கவும், பண்டிகை காலங் களில் ராமேஸ்வரத்திற்கு பாரபட்சமின்றி சிறப்பு ரயில் இயக்கவும்,

முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ள ராமேஸ்வரம் - மைசூர், ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவைகளை மீண்டும் இயக்கவும்,

ராமநாதபுரத்தில் தொடு திரை வசதி தேவை

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு கட்டண விவரம் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள வசதியாக தொடுதிரை வசதி ஏற்படுத் தித்தரவும், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்ககூடுதல் கவுண்டர்கள், பணியாளர்கள் நியமிக்கவும், உச்சிப்புளி - மண்டபம் ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் ரிசர்வேஷன் வசதிசெய்து தரவும், கன்னியாகுமரி - புவனேஸ்வர் - வாரணாசி செல்லும் விரைவு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் வசதிகள் செய்து தர வேண்டும் என அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட் டிருந்தது.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை உள்ளிட்ட ஊர்களின் வர்த்தகச் சங்கத் தினரும் தென்னக ரயில்வேயின் பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித் தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்