Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 23, 2007
இடஒதுக்கீட்டுக்கு முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக் கேரளாவைப் போல் இந்தியா முழுவதும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம் பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள்


அரசியல்ரீதியாக நாம் சக்தி பெறவில்லையென் றால் எதையும் சாதிக்க முடியாது. கேரளவைப் போல் எல்லா உரிமை களையும் பெற அரசியல் ரீதியாக முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பணி யினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ள வேண்டும் என பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டு கோள் விடுத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில முன்னாள் தலைவர் பானக்காடு சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙளின் புதல்வரும், ஷைன் மனித வள மேம்பாடு ஆய்வு மையத் தலைவரும், எம்.இ.ஏ. பொருளியல் கல்லூரியின் பொருளாளருமான பானக்காடு செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் நேற்று சென்னை வருகை தந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெமில்லத் மன்ஸிலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் இளைஞர் லீக் ஆகியவற்றின் சார்பில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை உயர்த் தித் தர மத்திய -மாநில அரசு களை வலியுறுத்தி நடைபெற்ற கருத்தரங்கில் அவர் சிறப்புரை யாற்றினார்.

அப்போது பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது-

எனக்கு இவ்வளவு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரவேற்பின் மூலம் என் தந்தையின் மீது தமிழக முஸ்லிம்கள் வைத்துள்ள மரி யாதையும், பாசமும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் தந்தை நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மாவட் டங்களுக்கு வருகை தருகின்ற போதெல்லாம் முன்னுரிமை கொடுத்து வரவேற்றதையும், அவர்கள் மீது காட்டிய அளப் பரிய பாசத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

எங்களின் முன்னோர் செய்யது ஹுசைன் ஷிஹாப் தங்ஙள் ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வேலூரிலேயே காலமாகி அங்கேயே நல்ல டக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில் பார்த் தாலும் தமிழகத்தோடு நாங்கள் நெருக்கமுள்ளவர்கள்.

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர் களும், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும் என்னோடு நீண்ட நாட்களாக நட்பும், பாசமும் மிக்கவர்கள். நான் மலேசியா வில் மல்டிமீடியா படித்துக் கொண்டிருந்தபோது, பேராசிரி யர் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை யகமான காயிதெ மில்லத் மன்ஸில் கட்டுமானப் பணிக்கு மலேசியா வருகை தந்தார்கள். அவர்களுக்கு கே.எம்.சி.சி. சார்பில் வரவேற்பளித்து ஒத்து ழைப்பும் கொடுத்தோம்.

மலேசியாவில் நான் படிக்கச் செல்லும்போது எனக்கு உதவியாக இருக்க டத்தோ இக்பால் அவர்களுக்கு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் கடிதம் தந்து உதவினார்கள். இப்படி என் குடும்பத்தோடு தமிழக முஸ்லிம் லீகர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். அந்த அடிப்படையில்தான் இன்று ஒரு முக்கியமான திருமணம் இருந்தும் அதை விட்டு விட்டு நான் இங்கே வருகை தந்திருக்கிறேன்.

கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்பாடு உங்கள் அனை வருக்கும் நன்றாகத்தெரியும். தமிழகத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியாலும், பொதுச் செயலாளரின் ஒத்துழைப்பாலும் முஸ்லிம் லீக் புதிய எழுச்சி பெற்ற வருகிறது.நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 123 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. எதுவும் நடக்கும் என்று நினைத்தால் நடக்கும். நடக்காது என்றால் நடக்காது. திட்டமிட்டு செயல் பட்டால் எந்தகாரியத்தையும் சாதிக்கலாம்.

காயிதெ மில்லத் தொலைநோக்குப் பார்வை

சுதந்திரத்திற்கு பின் - இந்திய முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாக இருந் தது ஆனால், காயிதெமில்லத் அவர்களின் தொலை நோக்குப் பார்வையும், வழிகாட்டு நெறியும் இன்று இந்திய முஸ்லிம் களுக்கு மிகப் பெரும் வெற்றியை தந்து கொண்டி ருக்கிறது. அரசியல் பிரதிநிதித் துவத்திற்கு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் காட்டிய வழி மகத்தானது.

இந்தியா ஜனநாயக நாடு. இதில் எல்லாநிலைகளிலும் உள்ள செயல்பாடுகளிலும் நம்முடைய பங்களிப்பு தேவை எனவே அரசியலை புறக் கணிக்க முடியாது. சீதி சாஹிப், போக்கர் சாஹிப், பூக்கோயா தங்ஙள் உள்ளிட்ட தலைவர்கள் எடுத்த தெளிவான முடிவு கேரள முஸ்லிம்களை ஓரணி யில் திரட்டியது.

அரசியல்ரீதியாக நாம் சக்தி பெறவில்லையென்றால் முடிவெ டுக்கக்கூடிய அந்தஸ் தில் இல்லாதிருந்தால் கல்வி, பொருளாதாரத்தில் நாம் எப்படி முன்னேற முடியும்? சச்சார் குழு அறிக்கை மிக தெளிவாக சொல்லியுள்ளது. தலித்களை விட முஸ்லிம்கள் பின்தங்கி யிருக்கிறார்கள் என்று.

கேரளாவில் 60 வருடங் களுக்கு முன்பு மற்றவர்க ளுக்கு அடிபணியக் கூடிய நிலைமை இருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக் கப்பட்ட போது, அதில் உறுப்பி னராக இருந்தால் பஞ்சாயத்து உறுப்பினராக கூடி வர முடியாது என்று சொல்லப்பட்டது. ஆனால், முஸ்லிம் லீக் எடுத்த முயற்சி மகத்தான வரலாறை உருவாக்கியது.

சி.எச். முஹம்மது கோயா கேரள முதலமைச்சராக ஏற்றம் பெற்றார். இ.அஹமது சாஹிப் கண்ணணூர் நகராட்சியின் தலைவராக பதவி வகித்து எம்.எல்.ஏ., எம்.பி.யாகி இன்று மத்திய அமைச்சராக ஏற்றம் பெற்றுள்ளார். தொடர்ந்து 6 முறை ஐ.நா. சபைக்கு இந்தியப் பிரதிநிதியாக சென்ற பெருமை அவரையே சாரும். நீண்ட காலம் பதவியில் உள்ள காங்கிரஸ் அமைச்சருக்கு கூட இந்த வாய்ப்பு கிட்டவில்லை. பலஸ் தீனத்திற்கு ஐ.நா. சபை அங் கீகாரம் அளிப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

இன்று 1800 பஞ்சாயத்து உறுப்பினர்களும், 20 சட்டமன்ற உறுப்பினர்களும், 4 மந்திரிக ளும், இரண்டு எம்.பி.க்களும் முஸ்லிம் லீகர்களாக கேரளா வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கின்றனர்.

கேரளாவில் இன்று முஸ்லிம்கள் கல்வியில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு காலத்தில் சி.எச். முஹம் மது கோயா வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை படியுங்கள் என்றார். செல்வந்தர்கள் கல்வி நிலையங்களை தொடங்க வலியுறுத்தினார். அதன் விளைவாக இன்று முஸ்லிம்கள் 5 பல்கலைக்கழகங்கள் நடத் தக்கூடிய வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. மீண்டும் அரபிப் பல்கலைக்கழகம் உருவாக்கும் முயற்சி அங்கு நடைபெற்று வருகிறது. இந்த சாதனைகள் அனைத்தும் கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் காட்டிய நெறிமுறைகள் என் பதை கேரள முஸ்லிம்கள் இன்றும் நன்றியோடு நினைவு படுத்துகின்றனர்.

இடஒதுக்கீடு பற்றி அரசியல் நிர்ணய சபையில் முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக். போக்கர் சாஹிப் அதற்கான கருத்துக்களை எடுத்து வைத்தார். கேரளாவில் 1957-ல் பிற்பட்ட சமுதாயத்திற்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு வழங் கப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. அத னால், 10 சதவீதம் ஒதுக்கீடு கிடைத்தது. தொடர்ந்து நம்மு டைய முயற்சியால் 12 சதவீதம் இப்போது கிடைக் கிறது.

இன்று மத்தியில் 4.5 சதவீதம் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3.5 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படு கிறது. கர்நாடகாத்திலும், ஆந்தி ராவிலும் முஸ்லிம்க ளுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட் டுள்ளது. ஆனால், இவையெல் லாம் போதாது என உயர்த்தித் தர வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து முயற்சி செய்வோம். நிச்சயம் அதில் வெற்றி பெறு வோம். வேறு சிந்தனைகளை விட்டு இதில் கவனத்தை செலுத்துவோம்.

இவ்வாறு முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் தனது உரையில் குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பனையூர் யூனுஸ் கிராஅத் ஒதினார். டி.கே ஷாநவாஸ் அறிமுகவுரையாற்றினார். இளைஞர் லீக் மாநிலச் செயலாளர் பள்ளபட்டி யூனுஸ் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளா ளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், துணைத் தலைவர்கள் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, டாக்டர் முகைதீன், செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமு தீன், பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.

எம்.எஸ்.எஃப். மாநிலச் செயலாளர் பாம்புக்கோவில் சந்தை செய்யது பட்டாணி நன்றி கூறினார். புளியங்குடி முஹம் மது அல்அமீன் நிகழ்ச்சியை நெறிபடுத்தினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்