Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 23, 2007
உண்மை சொல்வோம்- நன்மை செய்வோம் கே.எம்.கே.


தமிழகத்தில் காலையிலும், மாலையிலும் பல நாளேடுகள் வெளிவருகின்றன. `மணிச்சுடர் மாலையில் பிரசுரமாகும் நாளேடு! ஒவ்வொரு தினசரியின் தலைப்பையும், அதனுடன் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களையும் படித்துப் பார்த்தால் ஒவ்வொரு பத்திரிகையும் எந்த இலட்சியத்துக்காக நடத்தப் பெறுகிறது என்பதை உணரலாம்.

`முரசொலி’யில் `இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பதுடன், `வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் இலச்சி னையாக, ஒரு காளையை ஒரு மல்லன் மடக்கி அடக்குவது போல பொறிக்கப்பட்டிருக்கிறது. `விடுதலை’ `வாழ்க பெரியார்’ வளர்க அவர்தம் கொள்கை!’ என்னும் முழக்கத்தோடு நடந்து வருகிறது.

`நமது எம்.ஜி.ஆர்.’ ஏடு, அ.இ.அ.தி.மு.க. கொடியுடனும், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களுடன் வெளிவந்து கொண்டி ருக்கிறது.

`தினத்தந்தி’யில் கலங்கரை விளக்கம் வரையப்பட்டு, அதன் கீழே `வெல்க தமிழ்’ என்று வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

`தினகரன்’ தலைப்பில், `ஒரு புதிய அனுபவம்’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

`தினமணி’ தலைப்பு இருவண்ணக் கொடிகளை இரு சிங்கங்கள் தூக்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே `சர்வத்ர விஜயம்’ என்னும் சமஸ்கிருதச் சொற்றொடர் ஆங்கில எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. `தி நீயூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில ஏட்டிலும் தினமணியில் உள்ள தலைப்பைப் போலவே இருக்கிறது. தினமணி தலையங்கப் பக்க உச்சியில் `நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை’ நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ என்னும் பாரதியாரின் பாடல் வரிகள் இடம் பெற்று, அந்த ஏட்டின் நோக்கத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

`தினமலர்’ தனது தலைப்பில் `தடாகத்தில் உள்ள தாமரை’ யைப் பொறித்திருக்கிறது. கல்விக்குக் கலைமகள் என்பது இந்து சமுதாய வழக்காகும். கலைமகளின் உறைவிடம் தாமரை என்பது ஐதீகம். இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியின் சின்னமும் தாமரைப்பூ தான். `தி ஹிண்டு’ நாளிதழ் தலைப்பில் இந்திய வரைபடம்; அதில் வலம்புரி சங்கு; அதற்கு மேலே உதயசூரியன்; அதன் இரு பக்கத்திலும் பட்டத்து யானையும் காமதேனு பசு உருவில் இரு இறக்கைகள் உடைய அழகிய பெண்முக உருவமும் வரையப்பட்டுள்ளன. அதன் கீழே ‘ஐனேயை’ள சூயவiடியேட நேறளயீயயீநச ளinஉந 1878"" (1878 முதல் வெளிவரும் இந்தியாவின் தேசிய நாளிதழ்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`டெக்கான் கிரானிகல்’ ஆங்கில நாளிதழ் தலைப்புக்குக் கீழே, ‘கூhந டுயசபநளவ உசைஉரடயவநன நுபேடiளா னுயடைல in ளடிரவா ஐனேயை’ (தென்னிந்தியாவில் அதிகமாக விநியோகமாகும் ஆங்கில நாளேடு) என்று வரையப்பட்டிருக்கிறது.

`தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ ஆங்கில நாளேடு, ஒருகேடயத்தை இரு களிறுகள் சுமந்துள்ளன போல இலச்சினை பொறித்து, அதனடியில் ‘டுநவ கூசரவா ஞசநஎயடை"" (உண்மை ஓங்கட்டும்) என்று குறிப்பிட்டுள்ளது.

`ஜனசக்தி’ நாளிதழ் தலைப்பில், `பார்த்தால் காகிதம்! படித்தால் ஆயுதம்!’ என்று கூறப்பட்டிருக்கிறது.

`மாலை மலர்’ தன்னை `இந்தியாவின் சூடி. 1 மாலை நாளிதழ்’ என்று கூறி வருகிறது.

`மாலை முரசு’ தன்னை `படம் நிறைந்த பத்திரிகை’ என்று வருணித்து வருகிறது.

`தமிழ் முரசு’ தன்னை `நம்பர் 1 மாலை நாளிதழ்’ என்று பறை சாற்றி வெளிவருகிறது .

இதைப் போல, காலையிலும், மாலையிலும் வெளிவரும் இன்னும் பிற ஏடுகளும், வாராந்திரிகள், மாதமிருமுறை ஏடுகள், மாதாந்திரிகள், சஞ்சிகைகள் என்றுள்ளவைகளும் தத்தமது இலட்சியத்தை வார்த்தையிலோ, வரியிலோ, இலச்சினை யிலோ தெரிவித்துத்தான் வெளிவருகின்றன.

இங்கே கூறப்பட்டுள்ள எந்தவொரு ஏட்டிலும் காணாத ஒர் இலட்சியத்தை மணிச்சுடரில் பார்க்கலாம்.

`மணிச்சுடர், சமுதாயத்தின் இதயக்குரல்! சன்மார்க்கத்தின் சங்கநாதம்! சமூக நல்லிணக்கத்தின் ஒளிக்காற்று!

கடந்த இருபத்து இரண்டு வருடங்களாகப் பல நெருப்பாறு களை கடந்து, இன்றைக்கு தமிழ்கூறும் நல்லுலகின் ஒரே முஸ்லிம் நாளேடாக வலம் வருகிறது; இதய இருள் அகற்றும் வெளிச்சமாக நலம் தருகிறது!

இந்த ஏட்டின் தலைப்பில் `உண்மை சொல்வோம்! நன்மை செய்வோம்!’ என்று பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களில் மனித வாழ்வின் இலட்சியமே அடங்கியி ருக்கிறது.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் `மனிதம்’ இருக்கிறதா? என்பதை அறிவது எப்படி?

அவன் பேசுவதையும், அவன் செய்வதையும் கொண்டே `மனிதம்’ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

க்ஷந படிடின! னுடி படிடின! லடிரச டகைந றடைட நெ படிடின!

நல்லவனாய் இரு! நல்லதைச் செய்! உன் வாழ்க்கை நல்லதாக அமையும் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறுவர். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறுவதெனில், ‘க்ஷந படிடின வடி லடிரசளநடக"" - உனக்கு நீ நல்லவனாக இருந்திடுக! என்பதே ஆகும். தனக்குத்தானே ஒருவன் நல்லவனாக இருப்பானாகில் அவனிடத்தில் உண்மையைத் தவிர வேறெதுவும் உதயமாகாது! உண்மையைப் பின்பற்றுகிறவன் வாழ்வில் நன்மையைத் தவிர வேறு எதுவும் நடக்காது!

`தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச்சுடும்’

`உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்து எல்லாம் தலை’

`மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ் செய் வாரின் தலை’

இம் மூன்று திருக்குறள்களுக்குரிய பொருளை இங்கே பாருங்கள்:

`மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்’.

`மனத்தால் கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்’

`உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களா வார் கள்’.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அகிலத்தில் தோன்றிய அண்ணல் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளினால் ஈர்க்கப்பட்ட ஆடு, ஒட்டகம் மேய்த்தவர்கள், அறியாமையில் மூழ்கியிருந்தவர்கள், பஞ்சமா பாதகங்களை எவ்வித குற்றவுணர்வுமின்றி பண்ணி வாழ்ந்த பரம்பரையினர் எல்லோரும் மனிதப் புனிதர்களாக, உலகப் பெரும் அறிஞர்களாக, மானிடருக்கு நேர்வழி காட்டும் மகான்களாக மாறினார்கள். இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கக் காரணமாய் இருந்தது எது? திருக்குர்ஆன், திருநபி போதம், அவர்தம் வாழ்வுமுறை தாம்!

அதில் அடங்கியிருந்த போதனைகளின் சாரம் எதுவெனில், `உண்மை சொல்வதும் நன்மை செய்வதும்’தான்!

உண்மையும் நன்மையும் ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் இரண்டறக் கலந்திருத்தல் வேண்டும்!

உண்மையும் நன்மையும் சமுதாய வாழ்விலும் அதன் ஒவ்வொர் அம்சத்திலும் பரிணமிக்க வேண்டும். உண்மையும் நன்மையும் நாடு முழுவதிலும் நானிலமெங் கிலும் ஒளியாகப் பரவி, எல்லோருக்கும் இன்பம் ஊட்ட வேண்டும்!

இதுவே `மணிச்சுடர்’ ஏற்றுள்ள இலட்சியம்! இந்தப் பயணப் பாதையில் செல்வோம்! வெல்வோம்! இதற்கு எல்லோரும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு சொல்வோம்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்