Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 24, 2007
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினர் 11 பேர் பொறுப்பேற்பு


திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவில் 11 பேர் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் முன்னிலையில் பொறுப்பேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத் லீகிற்கு தமிழகம் முழுவதும் அமைப்பு குழு தேர்வு செய்யும் பணி மநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவுரைப்படி நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் முஸ்லிம் யூத் அமைப்புகுழு கூட்டம் திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் சிராஜுதீன் குடோனில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு எம்.ஒய். எல்.மாவட்டத் தலைவர் மன்சூர் அஹமது தலைமை வகித்தார். செயலாளர் ஹபீபுர்ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். பொரு ளாளர் முஹம்மது பாருக் திரு மறை வசனம் ஓதி தமிழில் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் முன்னி லையில் திருப்பூர் மாநகர மாவட்ட முஸ்லிம் யூத் லீகிற்கு தேர்வு செய்யப்பட்ட மன்சூர் அஹமது, ஹபீபுர் ரஹ்மான், முஹம்மது பாரூக், சதக்கத் துல்லா, உமர் பாரூக், இஸ் மாயில், முஹம்மது ஷரீப், நிஜா முதீன், சுலைமான் சேட், அபுதாஹிர, ஷேக் அஸன் அலி ஆகிய 11 பேருக்கும், முஸ்லிம் யூத் லீக் மாநிலச் செயலாளர் முஹம்மது யூனூஸ் உறுதி மொழி ஏற்க வைத்தார்.

புதிதாக பொறுப்பேற்ற முஸ்லிம் யூத் லீக் நிர்வாகிகளை வாழ்த்தி, முஸ்லிம் யூத் லீக் மாநில துணைச் செயலாளர் ஈரோடு ஆரிப், அமைப்பு குழு உறுப்பினர்கள் மங்கலம் இப்ராஹீம், மேட்டுப்பாளையம் அப்துல் ஹக்கீம், திண்டுக்கல் மாவட்ட யூத் லீக் செயலாளர் நெஹமத்துல்லா, பீர் முஹம்மது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திருப்பூர் மாநகர் மாவட்டத் தலைவர் சிராஜுதீன், செயலாளர் என். சையத் முஸ்தபா, புறநகர் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹம்சா ஹாஜியார், செயலாளர் மங்கலம் அக்பர் அலி, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் முத்து பாவா, புறநகர் மாவட்ட தலைவர் சத்தியமங்கலம் அஸ்கர் அலி, கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரபீக், புறநகர் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் எஸ்.எம். காசீம்,

மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் அப்துல் சத்தார், பட்டி முஹம்மது முஸ்தபா, இளம்பிறை ஜஹாங்கீர், திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் இம்தாதுல்லா, புறநகர் மாவட்டப் பொருளாளர் சாதுல்லா, மேட்டுப்பாளையம் நகர பிரைமரி தலைவர் அக்பர் அலி, மங்கலம் ஊராட்சி கவுன்சிலர் ரபிதீன், சுதந்திரத் தொழிலாளர் யூனி யன் திருப்பூர் மாநகர் மாவட்டத் தலைவர் ஜெய்லாப்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதனைக் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்பு ரையாற்றியபோது, யூத் லீக் செய்ய வேண்டிய சேவைப் பணிகள் குறித்து விளக்கம ளித்தார்.

இக் கூட்டத்தில் கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட் டங்களில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் ஜவஹர் அலி துஆ ஓதினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்