Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 25, 2007
ஜன.29-ல் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இலவச மருத்துவ முகாம் முதலுதவி பயிற்சி வகுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு


கரூர் மாவட்டம் பள்ள பட்டியில் பொது மக்களுக்கான இலவச மருத்துவமுகாம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு வரும் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறு கிறது. பள்ளப்பட்டி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில முஸ்லிம் யூத் லீக், ஈரோடு சிட்டி மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இலவச மருத்துவ முகாம்

வரும் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பள்ளபட்டி யூசுப் திருமண மஹாலில் இலவச மருத்துவ முகாம் நடைபெறு கிறது. குடல் மற்றும் வயிறு சம்பந்தமான சோதனை, இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை கள் அளிக்கப்படுகின்றன. ஈரோடு சிட்டி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எம். அபுல்ஹசன் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையை அளிப்பதோடு மருத்துவ ஆலோசனைகளையும் அளிக் கின்றனர். கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இம் முகாமை தொடங்கி வைக்கி றார்.

முதலுதவி பயிற்சி வகுப்பு

பிற்பகல் 3 மணிக்கு ஹாஜி ஹபீப் திருமண மஹாலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியருக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மவ்லவி பி.எம். ஹபீப் முஹம்மது நத்வீ தலைமையேற்கிறார். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் வாப்பு வி.ஏ. அபுதா ஹீர் வரவேற்று பேசுகிறார். இந்திய மருத்துவ கவுன்சில் சிறப்பு மருத்துவத் துறையின் மாநில செயலாளர் டாக்டர் கே.எம். அபுல் ஹசன், முதலு தவிப் பயிற்சி வகுப்பை நடத்து கிறார். அரவக்குறிற்சி காவல் துறை உதவிக் கண்காணிப் பாளர் ஜியாவுல் ஹக் ஐ.பி.எஸ். நினைவுப் பரிசு வழங்குகிறார். கம்பத்து கே.ஏ. கமால் பாஷா நன்றி கூறுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

முன்னதாக மாவட்ட முஸ்லிம் லீக் தலைமையகத்தில் பள்ளபட்டி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் கரூர் மாவட்டசெயலாளர் எம்.ஏ. மகபூப் அலி தலைமையில் நடை பெற்றது.

முஸ்லிம் யூத் லீக் மாநிலச் செயலாளர் எம்.கே. முஹம்மது யூனுஸ், நகரத் தலைவர் கம்பத்து கமால் பாட்ஷா, செயலாளர் வாப்பு தாஹீர், மாவட்ட துணைத் தலைவர் மோத்தி முபாரக் அலி, கோரையூத்து ஹாஜி சக்கரை முஹம்மது, மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை முஹம் மது சலீம், ஹுசேன் லெவ்வை காஜாமுகைதீன், கோரையூத்து முஹம்மது சகீல், மோத்தி அஹமதுல்லா, மஞ்சுவள்ளி அமீன் ரஷீத், கம்பத்து முஹம்மது பாரூக், லிம்ரா அஸ்ரப் அலி, மூக்கரா முஹம் மது இப்ராஹீம், வேடச்சந்தூரி ரபீக் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்