Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 26, 2007
இப்போதே திட்டமிடு; திட்ட நிகழ்வுகளை பட்டியலிடு! - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி


பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

2012 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கிறோம். ஒரு ஆண்டு முடிவுற்று மறு ஆண்டு தொடக்கம் பெறுகிறபோது கடந்த நாட்களில் செய்திட்ட நம்முடைய பல்வேறு பணிகளை சற்று பின்னோக்கிப் பார்த்து தொடங்கிவிட்ட இந்த புதிய ஆண்டில் நம்முடைய தவறுகளைத் திருத்திக் கொள்வதிலும், நல்ல செயல்பாடுகளை இன்னும் விரிவாக்கம் செய்வதிலும் முனைப்பு காட்டுவது ஓர் ஆரோக்கியமான திட்டமிடல்; நம்முடைய ஹிஜ்ரி ஆண்டுதான் நமக்குரியது என்றாலும் வழக்கத்தில் கணக்கிடுவதற்கு எல்லோராலும் எடுத்துக் கொள்ளப்படுவது ஆங்கில ஆண்டைத்தானே.

சரி. இந்த ஆண்டில் நாம் செய்யப் போகிற செயல்பாடுகளில் குடும்பம் சம்பந்தமானவை; வணிகம் சம்பந்தமானவை; விவசாயம் சம்பந்தமானவை என நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான துறைகளைப் பற்றி சிந்திக்கும் அதே வேளையில் சமூகப் பணி சம்பந்தமானவை என்றெடுத்துக் கொண்டு எப்படி செயலாற்றப் போகிறோம்? இந்த சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான கோணத்தில் எடுத்துக் கொண்டு நம்முடைய இலக்கினை அடைவதுதான் சிறந்ததாக இருக்க முடியும்.

சமுதாய நீரோட்டத்தில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டித் தந்த, கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம். நாம் நம்முடைய கடமைகளைச் செவ்வனே ஆற்றி எந்தெந்த வகைகளில் நமது இயக்கப் பணிகளை விரிவுபடுத்தி, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் எப்படி செயலாற்றவிருக்கிறோம் என்கிற திட்டமிடல் மிக, மிக அவசியம். திட்டமிட்டு செயல்படவில்லையானால் நம்முடைய முன்னேற்றப் பாதை என்பது எட்டாக் கனியாகிவிடும் என்ற உணர்வில் செயல்பட வேண்டும்.

முஸ்லிம் லீகின் தூர நோக்குப் பார்வை, அதன் அடிப்படைக் கொள்கைக் குறிப்புகள், தலைவர்கள் காட்டித் தந்த அற்புதப் பணிகள், சங்கைமிகு உலமாப் பெருந்தகைகளுடன் அறவழி ஈடுபாடு, முஸ்லிம் லீக் பிரைமரிகளை அதிகரித்தல், உறுப்பினர்களை அதிகமாகச் சேர்த்தல், முஸ்லிம் லீக் ஊழியர்களை மிகுதியாக்குதல், ஊழியர் கூட்டம் நடத்துதல், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், வரவிருக்கிற பொதுத் தேர்தல்களுக்குத் தயாராகுதல் என்று பலதரப்பட்ட பணிகளில் முறையான திட்டமிடல் மிக மிக அவசியம். இவைகளை நாம் எப்படி செய்யப் போகிறோம்? சிந்தனையில் ஏற்றுவது கவனத்தின் அவசியம். இவைகளையெல்லாம் தாண்டி, நமது மாணவ, மாணவியர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகளைப் பெறச் செய்தல், அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கான வழிவகைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டுதல், ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்துதல் என்று பல்வேறு மக்கள் நற்பணிகள் ஆற்ற வேண்டும். இவைகளையெல்லாம் மிகவும் உத்வேகத்தோடு, நமது தாய்ச்சபை பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து ஆங்காங்கே இருக்கிற ஜமாஅத் நிர்வாகிகளோடு கலந்துரையாடி நமது பணிகளைப் பட்டியலிட்டு, திட்டமிட்டு செயல்படுத்தினால் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் வளர்ச்சி என்பது எளிதாகிவிடும்; உறுதியாகிவிடும்.

இப்படி நம் பணிகளை எடுத்துக் கொண்டு செயலாற்றி, நம் ஒவ்வொருவரின் பகுதிகளிலும் முஸ்லிம் லீக் வலிமை பெற்றால் அந்த வலிமை சமுதாயத்தின் வலிமையாகி, நமது இயக்கப் பொறுப்பாளர்களின் மரியாதையும் அதிகரித்துவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவ்வாண்டின் திட்டமிட்ட பணிகளில் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று பொதுக் கூட்டங்களில் பங்கு பெற்று, ஜமாஅத் சந்திப்புகளை நடத்தி நமது இயக்கப் பணிகளுக்கு விரிவாக்கம் தரவேண்டும் என்றெண்ணி ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப் பயணத்தை ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் ஏற்பாடுகள் செய்து முனைப்புடன் ஈடுபட்டுள்ளேன். பொதுக்கூட்டம், ஜமாஅத் சந்திப்புகள் என மிக அருமையான ஏற்பாடுகளை மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அவர்களும், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளும் செய்து இன்று மாவட்டமே களைகட்டியிருக்கிறது. செல்லுகிற இடங்களிலெல்லாம் மக்கள் ஆரவாரம், மகிழ்ச்சிப் பெருக்கு, உத்வேக உணர்வுகள் என பிரமிப்பூட்டும் சமுதாய அலைகளைப் பார்க்க முடிகிறது. பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த மக்களின் வெள்ளம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, நீண்டிருந்த காட்சி மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்து என்னைப் போன்றவர்களை அழைத்தால், நாங்கள் எக்காலத்திலும் வரத் தயாராக இருக்கிறோம்.

இதற்கிடையில் தென்மாநிலங்களில் நிர்வாகத் தேர்தல் நடத்தி நமது அமைப்புகளைச் செவ்வனே சீர்படுத்தி புதிய நிர்வாகிகளை உருவாக்க நமது பொதுச் செயலாளர் இப்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிறை நெஞ்சே!
உனது ஊரின் நிலை என்ன? பெரியோர்களை அரவணைத்து, வாலிப இளைஞர்களை நல்வழிப்படுத்தி, எப்படிச் செயலாற்றினால் தாய்ச்சபை முஸ்லிம் லீகில் சங்கமிக்கச் செய்ய முடியும்? மக்கள் நல்வாழ்வுப் பணிகளில் எத்தகைய அளவில் எல்லோரையும் ஈடுபடுத்துவது?

திடமான உள்ள உறுதியுடன் செயலாற்ற இப்போதே திட்டமிடு, உனது திட்ட நிகழ்வுகளைப் பட்டியலிடு! பட்டியலிட்டுவிட்டு முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தோடு தொடர்பு கொள். உன்னைச் சந்திக்கஆவலாய் இருக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்