Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, January 27, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 63-வது குடியரசு தின விழாக்கள்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடெங்கும் 63-வது இந்திய குடியரசு தின விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் தலைமை நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில்

திருப்பூர் பெரிய கடைவீதி யில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத் தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவாப்பா (எ) அப்துல் ரஹ்மான், தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர் ஜெய்லாப்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் முஹம்மது பாருக், இளம்பிறை ஜஹாங்கீர், மாவட்ட துணைச் செயலாளர் இஸ்மா யில், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்டத் தலைவர் மார்க்கட் ஜெய்லாப்தீன், துணைத் தலைவர் பக்கீர் முஹம் மது, எம்.எஸ்.எஃப் முஹம்மது உவைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அல்-அமீன் பள்ளிகூடம்

பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் அல்-அமீன் நடுநிலைப்பள்ளி யில் குடியரசு தின விழா நடை பெற்றது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் யேமர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையர், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புளியங்குடி முகைதீன் ஆண்டவர் கமிட்டி பள்ளி

புளியங்குடி, ஜன. 27- புளியங்குடி முகைதீன் ஆண்டவர் கமிட்டி துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.கமருன்னிஸா தலைமையில் குடியரசு தின விழா நடந்தது.

கமிட்டி பொருளாளர் மைதீன் பிச்சை கமிட்டி உறுப்பினர்கள் ஆஸாத், ஷாகுல் கமீது, மைதீன் பிச்சை, முஸ்தபா, மைதீன் பிச்சை, ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

கமிட்டிச் செயலாளர் செய்யது ஹாஜா மியான் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளியின் செயலாளரும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவருமான மு.அலா வுதீன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

பள்ளிவாசல் இமாம் தி. மீராஷா ஆலிம் குடியரசுதின உரையாற்றினார்.

முடிவில் ஆசிரியர் எம்.அப் துல் ரகுமான் நன்றி கூறினார்.

புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா

புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தினவிழா காதிமுல் இஸ்லாம் சங்க ஹாலில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மைதீன் பிச்சை தலைமையில் நடந்தது.

மாவட்ட பொருளாளர் எம்.காதர் முகைதீன், நகர பொருளாளர் எம்.ஹாஜா முகை தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் ஏ.அப்துல் வகாப் அனைவரையும் வரவேற் றார். நகரத் தலைவர் எம்.செய்யது சுலைமான் தேசியக் கொயை ஏற்றி வைத்தார்.

நகர செயலாளர் வழக் கறிஞர் எஸ்.ஜாகிர் அப்பாஸ் நன்றி கூறினார்.

புளியங்குடி நியூ கிரஸன்ட் ஆங்கிலப் பள்ளியின் செய லாளர் எம்.செய்யது சுலைமான், புளியங்குடி காயிதெ மில்லத் துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியியல் பள்ளியின் செய லாளர் எம்.முகம்மது இஸ்மாயில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்

சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் 63-வது குடியரசு தின விழா மாவட்ட செயலாளர் கே.இஸட். இனா யத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

காரைக்குடி நகர தலைவர் காரை பாவா கிராஅத் ஓதினார். மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எச்.ஹைதர்அலி அம்பலம் தேசியக் கொயை ஏற்றி வைத்து உரை நிகத்தினார். நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகர அவைத் தலைவர் எம்.பிஸ்மி சர்புதீன், நகர பொருளாளர் ஏ.நத்தர் முகம்மது, நகர துணைத் தலைவர் என்.ராஜா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித் தனர். நகர தலைவர் ஏ.சையது இப்ராகிம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே துவங்க வேண்டும், இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர் கள் தாக்கப்படுவது நிறுத்தப் பட வேண்டும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை யில் தக்க தீர்வை மத்திய-மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்பன போன்ற தேச ஒற்றுமைக்கான கோரிக்கை களை வலியுறுத்தி உரை நிகழ்த்தப்பட்டது. முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. லால்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் லால்பேட்டை, ஜன. 27-

லால்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற 63 வது குடியரசு தின விழாவுக்கு லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ஏ.ஆர்.சபி யுல்லா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் முருகு மாறன் கலந்துக்கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவ மாணவியர் களுக்கு பரிசுகளை வழங்கி னார்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் சிறப்புரை யாற்றினார். முன்னதாக பள்ளியின் முதல்வர் மங்கையர் திலகம் அனைவரையும் வர வேற்றார். இந்நிகழ்வில் பள்ளி யின் கல்விக்குழு தலைவர் ஏ.ஆர்.எஸ்.நஜீர் அஹமத், லால்பேட்டை பேரூராட்சி முஸ்லிம் லீக் உறுப்பினர் ஜெ.ஷேக் தாவூத் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களான ஜாக்கீர் ஹுசைன், ஒ.பி.அப்துர் ரஹீம், ஜெயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் திருஞான சம்பந்தம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்பூரில் மாவட்ட நிர்வா கம் சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

சார்பில்...

திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாண தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் முன்னிலை யில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

விழாவில் சிறந்த விளை யாட்டு வீரர்கள், போலீ சார் 18 பேருக்கு பரிசுகளும், முதல் அமைச்சர் பதக்கமும் வழங் கப்பட்டது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்