Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 28, 2007
நீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதா? கே.எம்.கே.


உத்திரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. 403 தொகுதிகளில் பெரும்பான்மையைக் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு `பகீரதப் பிரயத்தனம்’ என்று சொல்வார்களே, அந்தப் பெரும் முயற்சியில் எல்லா அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கை திட்டங்களைத் தங்களின் தேர்தல் அறிக்கைகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கின்றன. இருபது ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் தெரிவித்துள்ள திட்டங்கள், சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ள அறிவிப்புகள், பகுஜன் சமாஜ் வெளியிட்டுள்ள திட்டங்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்துவதாக அமைந்துள்ளது. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு 9 சதவீதம் இடஒதுக்கீடு தருவோம் என்கிறது; சமாஜ்வாதி கட்சி 18 சதவீதம் அளிப்போம் என்கின்றது. காங்கிரஸ் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு பன்னிரண்டு ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவோம் என்கிறது; சமாஜ்வாதி கட்சி இதை பதினெட்டு ஆயிரம் ஆக்குவோம் என்று கூறுகிறது.

இவற்றுக்கெல்லாம் மாற்றமாக பாரதீய ஜனதா கட்சி, முஸ்லிம்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 27 சதவீதத்தில் உள்ஒதுக்கீடு 4.5 சதவீதத்தை நிறுத்துவோம்; மதரீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடுவோம் என்று அறிவித்து தேர்தல் களத்தில் குதிக்கிறது. அதோடு, `இந்துத்துவ’ தத்துவத்தில் நாட்டை வழிநடத்திட வும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இருந்த இடத்தில் வையகம் வியக்கும் வண்ணம் உலகப் பிரசித்தி பெற்ற இராமர் கோவில் எழுப்புவோம் என்றும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்திலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளிலும், இந்தியா உலக அரங்கில் பேசி வரும் சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றிலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதை அதன் உ.பி. தேர்தல் அறிக்கை தெளிவாக்கி யிருக்கிறது.

`இந்துத்துவம்’ என்பதற்கு அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் என்ன தெரியுமா?

`இந்துஸ்தான் என்பது இந்துக்களின் தேசம் என்பது மட்டுமல்ல, தங்களின் முன்னோர்கள் இந்துக்கள் என்ற பெருமையோடு ஏற்றுக் கொள்பவர்களின் தேசம். இந்த வகையில் இந்தியத் தன்மை என்றால் அது `இந்துத்துவா’ என்ற இரண்டு தூண்களின் மீது அமைகிறது’ (இடஒதுக்கீடு இந்துக்களுக்கு அநீதி - பக்.41 - விஜயபாரதம் பதிப்பகம் வெளியீடு).

இந்தக் கொள்கையைத் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. பிரகடனப்படுத்தியிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்தது; சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. கூட்டணியில் இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சியாகவும் விளங்குகிறது.

ஆனால், இந்திய அரசியல் மரபுகள் எதற்கும் உடன்படாமலும், `தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்னும் பாணியில் அரசியல் நடத்தும் கட்சியாகவும் அது தொடர்கிறது.

இந்திய சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக் கும் - கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சியாகத் தன்னை இனங் காட்டி வளரத் துடிக்கிறது; பல சமயங்களில் சந்தர்ப்பங் களுக்கு ஏற்றபடி நடிக்கவும் செய்கிறது.

இப்படியொரு கட்சி, உ.பி. போன்ற பெரிய மாநிலத்தில் ஆட்சியில் ஏறினால், அது இந்திய ஜனநாயகத்துக்கு புதைகுழி தோண்டியதாகவே அமையும். தொன்மையும், பாரம்பரியப் பண்பும், மாண்பார்ந்த மரபுகளும் நிறைந்த இந்தியாவில் - ஸாரே ஜஹான்ஸே அச்சா; இந்துஸ்தான் ஹமாரா - உலக நாடுகளில் சிறந்தது இந்தியா என்னும் இந்தத் திருநாட்டில் கண்ணைக் கெடுத்து சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற நிலையாகி விடும்.

நீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதாகாது.

ஔவைப்பிராட்டி அருந்தமிழ் மூதாட்டி பாடியுள்ள `நல்வழி’ பாடல்தான் இங்கே நினைவுக்கு வருகிறது.

வேதாளம் சேருமே; வெள்ளெருக்கம் பூக்குமே;

பாதாள மூலி படருமே; மூதேவி சென்றிருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை

நீதியில் நடுநிலை தவறி பாரபட்சம் காட்டுவோர் இல்லத்தில் பேய்கள் குடிபுகும்; வெள்ளை எருக்கம் செடி வளர்ந்து பூக்கும்; பாதாள மூலிக்கொடி படர்ந்து விடும்; பாம்புகள் குடிபுகும், தரித்திர தேவதையான மூதேவி அங்கு வந்து வசிப்பாள் - இப்படி, நீதி தவறுகிறவர்களைப் பற்றி ஔவை பாடியிருக்கிறார். மூத்தோர் மொழி இது! உ.பி. மக்கள் இதனை மனதில் கொண்டு தேர்தல் நடத்திட வேண்டும்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்