Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 28, 2007
‘’முஸ்லிம் லீக் பெயரை தவறாக பயன்படுத்தும் பசீர் அஹமது, பாத்திமா முஸப்பர் போலிகளே`` விலகிய உ.பி.ஷகீல் மியான், வேட்பாளர் புர்கான் குற்றச்சாட்டு!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் டாக்டர் பஷீர் அஹமதுகான், தேசியப் பொதுச் செயலாளர் எனக் கூறிக் கொள்ளும் ஃபாத்திமா முஸப்பர் `போலிகள்’ என்றும், அவர்கள் உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர் தலில் நிறுத்திய வேட்பாளர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அம் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததோடு மட்டுமின்றி, இ.அஹமது சாஹிப் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பா ளர்களை அங்கீகரித்து `ஏணி’ சின்னமும் வழங்கியுள்ளதின் மூலம் `போலிகள்’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் பஷீர் அஹமதுகான் நிறுத்திய ஒரு வேட்பாளரான முஹம்மது புர்கான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நான் உத்தரகாண்ட் சட்ட சபைக்கு நடக்கும் பொதுத் தேர்தலில் பிராங்கலியா தொகுதியில் போட்டியிடுகி றேன். அதற்காக பஷீர் அஹமதுகான், அவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று கூறிக் கொண்டு எனக்கு வழங்கிய வேட்பாளர் கடிதத்தை உத்தரகாண்ட் தேர்தல் ஆணை யம் ஏற்றுக் கொள்ளவில்லை. என் உள்பட அவரால் நிறுத் தப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் சுயேச்சை வேட்பாளர்கள் என்று அறிவித்து விட்டது.

நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இ.அஹமதை ஏற்றுக் கொள்கிறேன்.

டாக்டர் பஷீர் அஹமதுகான் கும்பல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பிரைமரி உறுப்பினர்கூட கிடையாது. அவர்கள் தில்லுமுல்லு வேலைக ளாலும், தரம் குறைந்த பிரச்சார உத்திகளாலும் தங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் என்று வேஷமிடுகின் றனர். தங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று கூறிக் கொண்டு உத்தரகாண்ட் மாநிலத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முயற்சித்தார். அதற் காக மோசடியான வகையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தினார்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த விஷயத்தை தேர்தல் கமிஷனுக்கு தெரியப் படுத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில், பஷீர் அஹமதின் முயற்சி தோற்கடிக் கப்பட்டு அவரால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் சுயேச்சைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நானும் ஒருவன்.

உத்தரகாண்ட் தேர்தலில் போட்டியிடும் பஷீரின் வேட்பாளர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொடியை கூட பிரச்சாரத்தின் போது பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்ததோடு சுயேச்சைகளாக வும் தேர்தல் ஆணையம் அறி வித்து விட்டது.

இ.அஹமது தலைமையி லான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் `ஏணி’ச் சின் னத்தை ஒதுக்கியுள்ளது. இ.அஹமது சாஹிப் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் என்னை இணைத்துக் கொள்கி றேன்.

இவ்வாறு தனது அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

ஷகீல் மியான் போர்க்கொடி

டாக்டர் பஷீர் அஹமத் கான் கும்பலால் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவராகவும், தேசியப் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்த ஷகீல் மியான் வெளியிட்டுள்ள அறிக் கையில் அவர்களை மோசடிக் காரர்கள் என்று குறிப் பிட் டுள்ளார்.

ஷகீல்மியான் மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவருமான இ.அஹமதை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவர் டாக்டர் பஷீர் அஹமதுகான் கும்பலின் போலியான நிலைப்பாட்டுக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்