Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, August 19, 2018 7 Zul-Hijja 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 29, 2007
விண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் தமிழக அரசு வழங்க வேண்டும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்


விண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியு றுத்தி சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மா னம் நிறைவேற்றியுள்ளது.

சேலம் மாவட்டம் சூர மங்கலம் பகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஜங்ஷன் அம்மாபாளையம் மெயின் ரோட்டில் உத்தமதூதர் உதய தினம் - குடியரசு தினம் - இடஒதுக் கீடு கோரிக்கை குறித்து மாபெரும் பொதுக் கூட்டம் 26-1-2012 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ. அஜ்மல் பாஷா தலைமை யில் நடைபெற்றது. எம். சம்ஷுத்தீன் தாவூதி இறை வசனம் வாசித்தார். பகுதி செயலாளர் ஏ.எல். அப்துல் ஹமீது வர வேற்புரையாற்றினார். எஸ்.டி.எ. உமர் பாரூக், ஏ.சி.எம். ஷேக் முஹம்மது, எம். அப்துல் கறீம் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

மாவட்டச் செய லாளர் ஏ. அன்சர் பாஷா முன்னுரையாற்றி னார். மாவட்டத் தலைவர் கே.எம். முஹம்மது ரபீக், மாவட்டப் பொருளாளர் ஹன்னு (எ) சாதிக் பாஷா, மாவட்ட துணைத் தலைவர் ஏ. நஜீர் பாஷா ஆகி யோர் வாழ்த் துரை வழங்கினர்.

பிறகு சொற்பொழிவு செம்மல் மவ்லானா ஏ.எஸ். எம். முஹம்மது ஹாரூன் தாவூதி வாழ்வில் நலம் பெற நபி வழியை பின்பற்றுபோம் என்ற தலைப்பில் மீலாது விழா சொற்பொழிவாற்றி னார். பிறகு மாநில துணைத் தலைவர் ஆன்மீகப் பேரொளி ஷெய்குத் தரீகத் இ. ஷாஹுல் ஹமீது ஜமாலி இனாம்குளத்தூர் முஸ்லிம் லீக் வரலாறு, அக்காலத்தில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமை, தலித்துக்களுக்கும், முஸ்லிம் களுக்கும் உள்ள உறவு, டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக்கு முஸ்லிம் லீக் அனுப்பிய வரலாறு மேலும் முஸ்லிம்க ளுக்கு இட ஒதுக்கீட்டின் அவசியம் ஆகிய வற்றை பற்றி சிறப்புரை யாற்றினர். பிறகு மாவட்ட துணைத் தலைவர் ஏ. நஜீர்பாஷா கூட்ட தீர்மானங் களை வாசித்தார்.

இக் கூட்டத்தில் மாவட்ட உலமாக்கள் அணி அமைப் பாளர் எஸ்.எம் ரபீக் அஹமது பாகவி, முத்தவல்லி, பஸுதீன், இந்தி லீஸ், ஷாகீர், முஹம்மது அலி, சூரமங்கலம் பகுதி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண் டனர். சூரமங்கலம் பகுதி இளைஞரணி எஸ். ஜமால் முஹம்மது நன்றி கூறினார். பி. ஷாஹுல் ஹமீது ஜமாலி நன்றி கூறினார்.

முன்னதாக ஸ்டார் ஏ. அஷ்ரப் அலி குழுவினர் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க இன்னிசை நிகழ்ச்சி நடைபெற் றது.

பொதுக்கூட்ட தீர்மானங்கள்

1. உலமாக்களுக்கு ஓய் வூதியம் உயர்த்தி, ஆணை யிட்ட தமிழக அரசுக்கு நன்றி

2. கல்வி, வேலைவாய்ப் புகளில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி தனி இடஒதுக்கீடு சிறு பான்மை முஸ்லிம் மக்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.

3. தமிழகத்தில் 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்திடவும், மேலும் அதனை முழுமையாக அமுல்படுத்திடவும் கேட்டுக் கொள்கிறோம். 4. அத்தியாவசியப் பொருட் களின் விலை ஏற்றத்தால் பாதிப்படைந் துள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உத் தேசித்துள்ள மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண் டும்.

5. தொடர் மின் வெட்டை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. சேலம் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும்.

7. ஓய்வூதியம் கோரி விண்ணப்பம் செய்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் விரைவாக வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள் கிறோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்