Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 31, 2007
அண்ணல் நபி (ஸல்) அவதாரம் அல்ல! `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை! கே.எம்.கே.


`டைம்ஸ் ஆஃப் இண்டியா’ ஆங்கில நாளிதழ் சமய, தத்துவ, ஆன்மீகக் கருத்துக்களைத் தினந்தோறும் `தி ஸ்பீக் கிங் ட்ரீ’ - பேசும் மரம்’ என்னும் தலைப்பில் வெளியிட்டு வருகிறது. ஆன்மீகத் தேட்டம் உள்ளவர்களுக்கு இது அனுதினமும் அமுதை வழங்கும் பகுதி என்றால் அது மிகையன்று.

இன்றைய (31-1-2012) இதழில், `தி ஸ்பீக்கிங் ட்ரீ’ பகுதியில் `ஸ்பிரிங் டைட் ஆஃப் கிரியேஷன்’ என்னும் கட்டுரை வெளிவந் துள்ளது.

இன்றைக்கு `அவதார் மெஹர்பாபா’ என்னும் ஆன்மீகப் பெரியவரின் 53-வது நினைவு நாள் என்பதால் அவர் வழங்கிய கருத்துக்கள் உள்ளடக்கிய கட்டுரையாக `ஸ்பிரிங் ஆஃப் கிரியேஷன்’ வெளியிடப்பட் டிருக்கிறது.

அவதார் மெஹரபாபா அவர்கள், அவதாரம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தந்திருக்கிறார்.

`ழுடின’ள னநளஉநவே டிn நயசவா யள படின - அயn டிச யஎயவயச யவ யீநசiடினiஉ iவேநசஎயடள’ - ஒவ்வோர் கால இடைவெளிகளின் போது பூவுலகில் கடவுள், மனிதக்கடவுளாக - அவதாரமாக இறங்குதல் என்பதுதான் அவதாரம் என்று பாபா கூறியிருக்கிறார். இந்தத் தத்துவத்தை அநேகம் பேர் ஒப்புக் கொள்வதுமில்லை; சுலபமாகப் புரிந்து கொள்வதும் இல்லை என்றும் அந்தப் பெரியவர் கூறுகிறார். இதில் நமக்கு எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை; ஏனெனில், பாபா அவர்களின் தத்துவார்த்த விசாரணையில் கடவுளையும், கடவுள் அவதாரத்தையும் அவர் உணர்ந்து கொண்டுள்ளவாறு விளக்கியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பாபா கூறுவதுதான் முஸ்லிம்கள் ஏற்கக் கூடியதாக இல்லை.

‘Zoraster was an avtar, as were Rama, Krishna, Buddha, Jesus and Muhammad, Meher Baba who dropped, his body in 1969, proclaimed himself to be the avatar of this age - - ஜொராஸ்டர் ஓர் அவதார புருஷர்; அதேபோல், இராமன், கிருஷ்ணன், புத்தர், ஏசுநாதர் மற்றும் முஹம்மது ஆகியோரும் அவதார புருடர்கள். மெஹர்பாபா தனது பூதவுடலை 1969-ல் உதறிவிட்டு, தன்னை இந்த யுகத்தின் அவதாரம்’ என்று பிரகடனப்படுத்தினார்’ -

இதில் கூறப்பட்டுள்ளதுதான் முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாத கருத்தாக இருக்கிறது.

கடவுள், பூமியில், மனித உருவில் அவதரிப்பதை அவதாரம் என்கிறார்கள். இதை இஸ்லாமிய மார்க்கம் ஏற்கவில்லை. கடவுள், படைப்பாளன்; அவனே படைக்கப்படுபொருளாக முடியாது. அந்தக் கடவுள் தன்னிலே தானானவன்! எவருக்கும் பிறக்காதவன்! யாரையும் (தாயாகவோ தந்தையாகவோ இருந்து) பெறாதவன்! அவனுக்கு ஒப்போ, உவமையோ, ஈடோ, இணையோ எதுவும் இல்லை! அவன் என்பதால் கடவுள் ஆணல்லன்! அவள் என்பதால் கடவுள் பெண்ணாகாள்! அது என்பதால் கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள எதுவாகவும் ஆகிவிட மாட்டான்.

எல்லாவற்றையும் ஆக்குபவன்! யாராலும் எதாலும் ஆக்கப்படாதவன்! - இதுதான் இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கையாகும். அவதாரக் கொள்கை இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கைக்கு முரண்பட்டது! எதிரானது! இஸ்லாமிய நெறியில் அதற்கு ஒப்புதல் கிடையாது.

முஹம்மது (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர்; நபி; தீர்க்கத்தரிசி, மனித சமுதாயத்தில், மனிதர்களுக்குப் பிறந்து, மனிதர்களுடன் வாழ்ந்து, மனிதர்கள் மத்தியில், இறைவன் ஒருவன் என்பதையும், நல்லதைச் செய்வதற்கும், தீயதை விலக்குவதற்கும் பிரச்சாரம் செய்து, நரகிற்குச் செல்லும் வழியை அடைத்து, சுவர்க்கத்தின் வழியின் பக்கம் மனிதகுலத்தைத் திருப்புவதற்கு வந்தவர்கள்தாம் நபிமார்கள் - தீர்க்கதரிசிகள்! உலகம் தோன்றிய காலந்தொட்டு 1,24,000 தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். முதல் தீர்க்கதரிசி ஆதம் (அலைஹி) தீர்க்கதரிசனம் நிறைவு பெற்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலாகும். அண்ணல் நபியோடு தீர்க்கதரிசிகள் எல்லோரும் போதித்த போதனைகளின் தொகுப்பாக திருக்குர்ஆன் வந்திருக் கிறது; நபிகளின் போதனைகள் அமைந்துள்ளன. இந்த யுகத்திற்கும் இனிவரும் எந்த யுகத்திற்கும் ஞானவெளிச்சம் ஊட்டும் வேதமாகத் திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் - வாக்கும் இருக்கின்றன என்று முஸ்லிம்கள் நம்பி வாழ்கின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இஸ்லாமிய நெறி விளக்கம் கடந்த ஆயிரத்து நானூறு ஆண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களை `அவதாரம்’ என்று சொல்வதன் மூலம், கடந்த ஆயிரத்து நானூறு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நம்பப்பட்டும், அதன்படி நடத்தப்பட்டும் வரும் ஓர் ஆன்மீக உண்மை அடியோடு மாற்றப்படுகிறது ஆகவேதான், அண்ணல் நபி (ஸல்) அவர்களை `அவதார புருடர்’ என்பதற்கு மறுப்புரை கூற வேண்டியதாகியுள்ளது.

தீர்க்கதரிசிகள் என்னும் நபிமார்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் தோன்றியிருக்கிறார்கள். முதல் தீர்க்கதரிசி - நபி ஆதம் (அலை) இலங்கை தமிழகத்தோடு பூபாகத்தில் இணைந்திருந்த காலத்தில் இங்கே தோன்றியவர் என்னும் கருத்து வலிமையாகப் பேசப்படுவதாகும். திருக்குர்ஆனில் ஆதம் (அலை) பற்றி 25 இடங்களில் பேசப்படுகிறது; அதுபோலவே, முஹம்மது நபி (ஸல்) ஈறாக 25 நபிமார்களைப் பற்றி அது குறிப்பிடு கிறது. திருக்குர்ஆனில் குறிப்பிடப்படாத பேர்களில் எண்ணற்றோர் உலகின் எல்லாப் பகுதிகளிலும் தோன்றியுள் ளனர் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அந்த அடிப் படையில், இராமர், கிருஷ்ணர், புத்தர், ஜொராஸ்டர், தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் யாவரும் தீர்க்கதரிசி களாக இருந்திருக்கலாம் என்ற வாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் 313 தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளனர். என முன்னாள் ஜனாதிபதி இராஜேந்திர பாபு கூறியுள்ளதை ஷபியா நூர் தனது மறுபக்கத்தில் மேற்கோள் காட்டியிருக் கிறார். நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய எவரையும் தீர்க்கதரிசியாக இருக்கலாம் என்று யூகிப்பதும் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு முரண்பட்டதாகும்.

இறைவன், தன் புறத்தில் இருந்து, ஞான வெளிப்பாட்டை வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை) மூலம் தீர்க்கதரிசியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் இதயத்தில் இறக்கி வைக்கிறான். அதுவே `வஹீ’ எனப்படுகிறது.

`வஹீ’ என்னும் ஞானவெளிப்பாட்டை ஏற்று, இறைவனின் கட்டளைப்படி, தன்னை தீர்க்கதரிசி என்று பிரகடனப் படுத்துபவரே இறைத்தூதர் எனப்படுகிறார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மேலோர் எவரும் தன்னை தீர்க்கதரிசி என்று பிரகடனப்படுத்தியிருப்பதற்கு ஆதாரம் இருக்குமெனில், அத்தகையவரையும் தீர்க்கதரிசி - நபி என்று முஸ்லிம் உலகம் ஏற்கும். ஆனால், அது போன்ற வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லை. ஆகவே, இஸ்லாமிய கொள்கையின்படி, உலகில் 1,24,000 நபிமார்கள் தோன்றியுள்ளனர்; முதல் நபி ஆதம் (அலை), இறுதி நபி முஹம்மது (ஸல்) அவருக்குப் பிறகு நபி கிடையாது என்பதே அடிப்படையாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாகக் கூறப்படும், எழுதப்படும், யூகிக்கப்படும், கற்பிக்கப்படும் எந்தவொரு புதிய தத்துவத்திற்கும் இஸ்லாமிய நெறியில் இடமில்லை என்பது தெளிவாகும்.

ஆகவேதான் கூறுகிறோம்: அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதருள் இறுதியானவர்! அவர் அவதார புருஷர் அல்லர்! இதை திருக்கலிமா விளக்கிக் கொண்டி ருக்கிறது -

`லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு (எவரும் எதுவும்) இல்லை; முஹம்மது நபி (ஸல்) அந்த அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்! முஹம்மது நபி (ஸல்) மனிதர்; ஆனால், இறைத்தூதர்! அவர் இறைவன் அல்லர்! இறைவன் உட்புகுந்துள்ள அவதாரமும் அல்லர்! இதைத் தெரிவிக்கவே திருக்கலிமாவில் அவரின் திருப்பெயர் இடம் பெற்றிருக்கிறது என்று மௌலானா முஹம்மதலி ஜவ்ஹர் கூறிய விளக்கம் இங்கே நினைவிற் கொள்வோம்!

அல்லாஹ், இறைவன்! அண்ணல் நபி (ஸல்) அவ்விறைத் தூதர்! இதை உலகிற்குச்சொல்வோம்!.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்