Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 3, 2007
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள்


நாகர்கோவில், ஜன.3- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குலசேகரம் காவல் ஸ்தலம் சந்திப்பில் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார்.

பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசியதா வது-

தமிழக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்ற எதிர் பார்ப்பில் காத்திருக்கின்ற னர். ஆளும் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் மவுனப் புரட்சி தேர்தலில் நிச்சயம் எதிரொ லிக்கும். அ.தி.மு.க. மீதான அதிருப்தி அலை வேகமாக வீசி வருகிறது. இது சுனாமி யாக மாறும். ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு எத்தகைய முன்னெச்சரிக்கை நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்த மழை, வெள்ளம் போதாது என்று செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது தலைநகரை மூழ்கடித்து மக்களை நிலைகுலையச் செய்து விட் டது.

நீர்நிலைகளின் ஓரத்தில் வசித்தவர்களும், ஆக்கிர மித்து வீடுகளை கட்டியவர் களும் பெரும் துன்பங் களுக்கு ஆளாகி இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றனர். லட்சக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு செயல் பாடின்றி ஸ்தம்பித்து போய் விட்டது. இதனால்தான் வெள்ள சேதத்தின் போது அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை.

தேர்தல் களத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.. என்ற இரண்டு கட்சிகள் தலைமையிலான அணிகள் மட்டும்தான் களத்தில் இருக்கும். மூன்றா வது அணி, நான்காவது அணி என்பதெல்லாம் அ.தி.மு.க. வெற்றிக்கே துணை புரிவதாக உதவும் பினாமிஅணிகளாகவே அமையும். எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர் கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை தி.மு.க. தலைமை யிலான அணி மட்டுமே தர முடியும்.

எனவே, மாற்றத்தை விரும்பும் அனைத்து கட்சி களும் தி.மு.க. தலைமையில் ஒரே அணியில் இணைய வேண்டும். இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும்.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சிறுபான்iமையின ருக்கு எதிரான செயல்பாடு களை கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால், கலவர சூழ்நிலையே ஏற்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற மோடி இன்று நாட்டு மக்களை மறந்து பெருமுதலாளி களின் பிரதமராக செயல் படுகிறார்.

இந்திய பொருளாதார நிலை மோசமாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை அந்த அளவிற்கு குறையவில்லை.

மானியங்கள் நிறுத்தப் படுகின்றன - கட்ட ணங்கள் மறைமுகமாக உயர்த்தப்படுகின்றன.

எனவே மோடி தலைமை யிலான பா.ஜ.க. அரசு மக்க ளின் நம்பிக்கையை பொய்க்க செய்து விட்டது.

இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் குறிப் பிட்டார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்