Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 9, 2007
திமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி


திமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி தி.மு...க. தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லமான கோபாலபுரத்தில் இன்று (9-1-15) காலை 11 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏஎம். முஹம்மதுஅபூபக்கர், மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ ஆகி யோர் சந்தித்து பேசினார்கள். அப்போது தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதா வது-

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நானும், நிர்வாகிகளும் சந்தித் தோம். இன்று, நேற்றல்ல. 1961ம் ஆண்டு முதல் நட்புடன் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டா லும் மாதந்தோறும் சந்தித்து அளவளாவுவோம் மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.

கடந்த மூன்று மாதங்களாக சந்திக்க முடியாமல் போய் விட்டது. இப்போது சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித் துக் கொண்டதோடு, உடல் நலம் நலமாக இருக்க வாழ்த்தி னேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 69 ஆண்டுகள் கிறது. மார்ச் 10 -ல் தொடங்கப் பட்டது.

தமிழகத்தில் 11 ஆயிரம் பள்ளிவாசல்களை உள்ளடக் கிய மஹல்லா ஜமாஅத்கள் உள்ளன.

மார்ச் 10ந் தேதி விழுப்புரத் தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு ஏற்பாடு செய்துள் ளோம். கடந்த முறை தாம்பரத்தில் நடத்தினோம். முதல்வராக இருந்த கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

விழுப்புரத்தில் நடை பெறும் மாநாட்டில் கலைஞரை பங்கேற்க கேட்டுக் கொண்டோம். தளபதி ஸ்டாலினையும் அனுப்புமாறு கேட்டோம்.

தளபதி ஸ்டாலினை அனுப்பி வைப்ப தாக கூறினார். முடிந்தால் தானும் வருவதாக கூறினார். உடல்நிலையை பற்றி சொன்னார். நீங்கள் நல்ல முறையில் இருப்பீர்கள். கட்டாயம் பங்கேற்பீர்கள் என தெரிவித் தோம்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும் வருமாறு-

கேள்வி: கூட்டணி பற்றி பேசினீர்களா?

பதில்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணி யில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு 3 காரணங்கள். அவை, தி.மு.க. திராவிட வளர்ச்சிக் காக பாடுபட்டு வருகிறது.

தமிழர்களின் வாழ்வுக்கும், அவர்களின் பண்பாட்டுக்கும் துணை நிற்கிறது.

சாதி, மதத்துக்கு அப்பாற் பட்டு மதச்சார்பின்மை கடை பிடித்து வருகிறது.

இவைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் தான் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்.

கடந்த காலத்தில் தி.மு.க. தலைமையில் சமயசார்பற்ற அனைத்து அரசியல் கட்சி களையும் ஒருங்கிணைத்து தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத் தோம்.

அதேபோன்று தற்போது சமயசார்பற்ற அனைவரும் தி.மு.க. தலைமையில் ஒருங் கிணைய வேண்டும். அதற்கான முயற்சியையும் நாங்கள் ஈடுபடு வோம்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க அனைத்து தரப்பு மக்களும் தயாராகி விட்டனர்.

மூன்றாவது அணி, நான்காவது அணி என்பதெல் லாம் நாடகம். அது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு தொய்வு இருந்தது. தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்கள் குறைகளையெல்லாம் கேட்ட றிந்தார். இதன் மூலம் 40 சத வீதத்திற்கும் மேலான மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை உறுதி செய்திருக்கி றார்கள்.

கேள்வி: எத்தனை தொகுதிகள் தி.மு.க.வில் கேட்பீர்கள்?

பதில்: தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைப்பு கள், தோழமை கட்சிகள் தி.மு.க. வினருக்கு சேர்த்து மொத்தம் 12 முஸ்லிம்கள் இடம் பெறும் அளவுக்கு தொகுதிகளை கேட் போம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதி களில் 4 தொகுதிகளை முஸ்லிம்களுக்கு தர வேண்டும் என்று கேட்டோம். கொடுத் தார்கள்.

மேலும், எங்களின் செயற் குழு கூட்டம் சென்னையில் வருகிற 20-ம் தேதி நடைபெறு கிறது. அக் கூட்டத்தில் எத்தனை தொகுதிகள் எந்தெந்த இடங்கள் என்பதை கூடி முடிவு செய்வோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டியின் போது கூறினார்.

- பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்