Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, January 20, 2007
மக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம்


மக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம் சென்னை, ஜன.20- மக்கள் விரோத அ.தி.மு.க. அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற் கான சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் என இன்று (20-01-2016) சென்னை தலைமை நிலையத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சென்னை தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸிலில் இன்று (20-01-2016) புதன் காலை நடை பெற்றது. தளபதி மவ்லானா ஷபீகுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார். மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். கூட்டத்தில் மறைந்தவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யப் பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானங்கள்

1. அதிமுக தலைமையிலான மாநில அரசு ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசாக தொடர்வதை நாடறியும். ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் தமிழக சட்டப் பேரவை வெறும் 190 நாட்கள் மட்டுமே கூட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையே அதற்கு சான்றாகும். குறைந்த நாட்களே கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டங்களும் கூட ஆளுங்கட்சி தலைவரின் புகழ்பாட மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மக்கள் பிரச்சினைகளைப் பற்றிய எந்த விதமான திட்டங் களோ, விவாதங்களோ இல்லாத துடன் அது குறித்து எதிர் கட்சியினர் பேச முற்படும் போதெல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் உச்சமாக எதிர் கட்சி தலைவரே அவை நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயகப் படுகொலைகள் அரங்கேறின.

இந்த ஜனநாயக விரோத அதிமுக ஆட்சியை அகற்றி ஒரு நல்லாட்சியை அமைத்திட எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை யாகும். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்ட ணியில் அணி திரளுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக் கும் இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

2. சென்னை உயர்நீதி மன்றத் தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆக உயர்த்தப்பட்டிருப்பதை மகிழ்வுடன் வரவேற்கும் அதே வேளையில், இன்று அதில் ஒருவர் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இல்லை என்ற கசப்பான உண் மையையும் உணர்ந் திருக்கிறோம். 40 நீதிபதிகள் இருந்த சமயத்திலே கூட 4 நீதிபதிகள் முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இருந்த நிலையில் இன்று நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் குறைந்த பட்சம் 5 நீதிபதிகள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவராக நியமனம் செய் யப்பட வேண்டுமென இச் செயற்குழு மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.

3. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாளி லிருந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் கூர்மைப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் அடையாளங்களையும், தனித்தன் மைகளையும் அழிப்பதில் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்’ பெயரிலி ருந்து ‘முஸ்லிம்’ என்ற வார்த் தையை நீக்கவும், அதற்கு வழங்கப் பட்டுள்ள சிறுபான்மை நிறுவ னம் என்ற அந்தஸ்தை நீக்கவு மான நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இந்த மதவாத நடவடிக்கைக்கு எதிராக ஒரு நாடு தழுவிய போராட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது.

அதன் தொடர்பாக டெல்லி யில் வருகிற 2016 ஜனவரி 28-ந் தேதி கூட இருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய ஆலோசனைக் கூட்டம் வெற்றிய டைய இச்செயற்குழு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர்கள் அதிரை நஸ்ருதீன், எஸ்.எம். கனி சிஷ்தி,எஸ்.எம். கோதர் மைதீன், சேலம் காதர் ஹுசைன், மதுரை டாக்டர் மொய்தீன், மாநிலச் செயலா ளர்கள் நெல்லை அப்துல் மஜீத், ஆம்பூர் எச். அப்துல் பாஸித், வழக்கறி ஞர் வி. ஜீவகிரிதரன், திருச்சி ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் திண்டுக்கல் ஷபீர் அஹமது, ஆப்பனூர் ஜபருல்லாஹ், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மேட்டுப் பாளையம் அக்பர் அலி, வாணியம்பாடி எஸ்.டி. நிஸார் அஹமது, கோவை முஹம்மது பஷீர், விழுப்புரம் அமீர் அப்பாஸ், கம்பம் சாகுல் ஹமீது, திருப்பூர் முஸ்தபா,

மேல்விஷாரம் எம்.ஆர். அப்துல் அஜீஸ், தாம்பரம் முஸ்தபா, திருச்சி கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், பாலவாக்கம் ஹசன், விருதாசலம் சுக்கூர், திருக்கோவிலும் அப்துல் ஜப்பார், நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லாஹ், செங்கம் சுலைமான், காஞ்சி கே. தாவூத், கன்னியாகுமரி ஜுபைர்,

பெரம்பலூர் சர்புதீன், ஆலங்காயம் உபைதுர் ரஹ்மான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி. பாரூக், காயிதெ மில்லத் பேரவை கத்தர் தலைவர் கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது, அமீரக பொருளாளர் எஸ்கே. எஸ். ஹமீதுர் ரஹ்மான் உள் ளிட்டோர் கருத்து தெரிவித்த னர். இக்கூட்டத்தில் மத்திய சென்னை யூசுப் குலாம் முஹம்மது, பிலால் ஹுசைன், வடசென்னை ஜெய்னுல் ஆபிதீன், தென்சென்னை பூவை முஸ்தபா, மேத்தப்பிள்ளை மரைக்காயர், திருவள்ளூர் கிழக்கு சையத் இப்றாஹீம், சிக்கந்தர் பாஷா, திருவள்ளூர் மேற்கு காயல் அஹமது சாலிஹ், ரஹ்மத்துல் லாஹ், திருவள்ளூர் தெற்கு அல்லாபக்ஷ், காஞ்சிபுரம் வடக்கு தாம்பரம் ஷேக் அப்துல் காதர், விழுப்புரம் கிழக்கு செஞ்சி செய்யது கலீல், விழுப்புரம் மேற்கு திருக்கோவி லூர் அப்துல் ஜப்பார், சங்கரா புரம் ரஷீத்கான்,

திருவண்ணாமலை தெற்கு இ. முஹம்மது அலி, திருவண் ணாமலை வடக்கு அப்துல் காதர் ஷரீப், அப்துல் ஹமீது, வேலூர் கிழக்கு சான்பாஷா, கிருஷ் ணகிரி ஜாபர், சித்தீக் பாஷா, தருமபுரி செய்யது அன்வர் பாஷா நிஜாமுதீன், கடலூர் தெற்கு லால் பேட்டை அமானுல்லாஹ், கடலூர் வடக்கு முஹம்மது இஸ்மாயில், சேலம் நஸீர் பாஷா, அன்வர் பாஷா, ஈரோடு வடக்கு அஸ்கர் அலி, சான் பாஷா, ஈரோடு தெற்கு நூர் முஹம்மது சேட், நீலகிரி சி. எச். எம். ஹனீபா, கோவை தெற்கு அப்துல் கபூர், அப்துல் ரஹீம், ஸசூடி திருப்பூர் வடக்கு மங்கலம் இப்றாஹீம், திருப்பூர் தெற்கு ஹபீபுர் ரஹ்மான், அப்துல் காதர், நாகை தெற்கு செய்யது அலி மரைக்காயர், முஹம்மது சஹாபுதீன், கரூர் மஹ்பூப் அலி, திருச்சி தெற்கு வி.எம். பாரூக், திருச்சி வடக்கு அப்துல் வஹாப், முஹம்மது நிஜாமுதீன், தஞ்சை வடக்கு முஹம்மது சுல்தான், அப்துல் காஸிம் ராஜாஜி, தஞ்சை தெற்கு பி.எஸ். ஹமீது, ஜெய்னுலாப்தீன், திண்டுக்கல் கிழக்கு அல்தாப் ஹுசைன், தௌபீப் ஹுசைன்,

திண்டுக்கல் மேற்கு ஆயக்குடி பாரூக், தேனி அப்துல் நஸீர், மதுரை தெற்கு இக்பால் பாஷா, இராமநாதபுரம் வருசை முஹம்மது,

திருநெல்வேலி மேற்கு சி.எஸ். சுலைமான், முஹம்மது இக்பால், கன்னியா குமரி ஷாஜஹான், சாகுல் ஹமீது, நாமக்கல் வழக்கறிஞர் முஹம்மது முபீன், தமிழக வக்ஃபு வாரிய உறுப்பினர் புரசை முஹம்மது சிக்கந்தர்,

இளைஞர் அணி பள்ளபட்டி முஹம்மது யூனுஸ், ஊடகப் பிரிவு ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்றாஹீம், கோம்பை நிஜாமுதீன், மாணவர் பேரவை பழவேற் காடு அன்சாரி, லால் பேட்டை ஏ.எஸ். அஹமது, அஹமதுல்லாஹ்,

திருச்சி அன்சர், வழுத்தூர் ஜுல்பிகார், தருமபுரி இளம் பிறை சுலைமான், வந்தவாசி கமாலுதீன், திருவண்ணாமலை நவாப்ஜான், கோட்டகுப்பம் முஹம்மது இப்றாஹீம், தாங்கள் கலீலுர் ரஹ்மான், விருத்தாசலம் ஹபீபுர் ரஹ்மான்,

பெரம்பலூர் முஹம்மது அலி, பண்ருட்டி அப்துல் ரஷீத், கோவை முஹம்மது யூசுப், துறையூர் லியாகத் அலி, சென்னை முஸ்தபா, மடுவை பீர் முஹம்மது,

சேலம் சாதிக் பாஷா, ஓசூர் காதர் பாஷா, ஆம்பூர் அப்துல் அஸீஸ், நாமக்கல் முஹம்மது அலி, வந்தவாசி பீர் முஹம்மது, புதுப்பேட்டை முஹம்மது ஆரிப், அறமுரசு அப்துல் காதர், லால்பேட்டை ஏ.ஆர். அப்துல் ரஷீத், கவிஞர் ஷேக் மதார், குடியாத்தம் வாஹித், முஹம்மது பந்தர் முஹம்மது பாரூக், வழுத்தூர் அப்துல் ரவூப்,

மண்ணடி இஸ்மாயில், மதுராந்தகம் அஸதுல்லால்லா, விழுப்புரம் சுல்மான் மொய்தீன், பல்லாவரம் முஹம்மது பேக்,

மற்றும் மாவட்டப் பொருளாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 186 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முடிவில் நன்றி துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது. (மற்ற தீர்மானங்கள் நாளை இடம் பெறும்...)

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்