Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, August 19, 2018 7 Zul-Hijja 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 28, 2007
இந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


இந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு சென்னை, ஜன.28- இந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்ல. இந் நாட்டில் சிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயற்சி செய்தால் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவல கமான சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் குடியரசு தின விழா நடை பெற்றது.
விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைவர் பேராசிரியர் பேசிய தாவது:-
சுதந்திரம் பெற்ற இந்தியா எந்த சட்டத்தின்படி ஆள வேண்டும் என்பதை நிர்ணயிப் பதற்காக இந்திய அரசியல் சாசன சபை உருவாக்கப் பட்டது.
இந்திய அரசியல் சாசன சபை 1947 டிசம்பர் மாத கடைசியில் வரைவு சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தலைமையிலான டிராப்ட் கமிட்டி கான்ஸ்டிடியூசன் அசெம்பிளியில் வைத்தார்கள்.
1947 டிசம்பரிலிருந்து 1949 வரை முன்மொழியப்பட்ட அரசியல் சாசன சபை உறுப்பி னர்களால் விவாதிக்கப்பட்டு 1949 நவம்பர் 26-ல் அரசியல் சாசனம் ஒப்புக்கொள்ளப்பட் டது.
இந்திய அரசியல் சாசனம் இந்தியா முழுமைக்கும் நடை முறைப்படுத்தப்பட்டது 1950 ஜனவரி 26 ஆகும்.
அரசியல் சாசனம் நடை முறைப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில்தான் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ஆகஸ்ட் 15. இந்தியா குடியரசு ஆனது 1950-ம் ஆண்டு ஜனவரி 26. அதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியில்தான் இருந்து வந்தது.
குடியரசு என்றால் என்ன என்று தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் மணிவிளக்கு பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்கள். ‘குருதி கொடுத்தேனும் குடியரசை காப்போம்‘ என எழுதினார்கள். குருதி என்றால் இரத்தம். இரத்தம் சிந்தியேனும் நம் குடியரசை காப்போம் என்று எழுதினார். குடியரசை காப்போம் என்று சொன்னால் மக்கள் மக்களுக்காக ஆளப்படக்கூடிய அரசுக்கு பெயர்தான் குடியரசு என்பது ஆகும். குடியரசு என்பது மன்னராட்சியோ, ஜமீன்தார் ஆட்சியோ, நவாப் ஆட்சியோ அல்ல. இந்த நாட்டிலுள்ள ஆட்சி மக்கள் ஆட்சி. அதற்குத்தான் குடியரசு என்று பெயர்.
குடி என்றால் மக்கள். அதனால்தான் தமிழில் குடியரசு என்று வைத்தார்கள். மக்கள் ஆட்சி என்று சொன்னால் என்ன? நம் நாட்டின் ஜனநாயக முறை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவது. அந்த காலத்தில் முடியரசு என்று சொன்னால் மன்னர் சொல்வதை மக்கள் கேட்க வேண்டும். குடியரசு என்று சொன்னால் மக்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம்.
இந்திய குடியரசு என்பது நான்கு அடுக்கு நிலைகளை கொண்டது. ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதிமன்றம், பத்திரிகை துறை ஆகியவை கொண்டுதான் நாடு இயங்கி கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக் கிறதோ, அதன்படி ஜனாதிபதி யும் மற்றும் மூன்று அமைப் புகளும் இயங்க வேண்டும். அதை மீறுபவர்கள் அரசியல் சாசனத்தை மீறுபவர்கள் என்று நாம் கூறுகிறோம்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
இன்றைய தினத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா ஆகிய இரண்டு பல் கலைக்கழகங்கள் தான். இந்த இரண்டும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றார்கள். அரசு அங்கீகாரம் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்க முடியாது.
இப்போது நாம் மதரஸா நடத்துகிறோம். ஆரம்பப் பள்ளி, பின்னர் மேல்நிலப்பள்ளி, கல்லூரி என நடத்தும் போது அரசு அங்கீகாரம் பெற்று வருகிறோம். அப்படி பெற்றால் தான் கல்வி ஸ்தாபனங்களை நடத்த முடியும் என்பதற்காக அவ் வாறு செய்கிறோம். சிறுபான்மை மக்கள் நடத்துகிறார்கள் என்பதற்காக அரசு அங்கீகாரம் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. காரணம் என்ன வென்றால் அரசியல் சாசனம் சிறுபான்மைகளுக்கான உரிமைகளை தெளிவாக குறிப்பிட் டிருக்கிறது. சிறுபான்மை முஸ்லிம் களால் உருவாக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் இரண்டுக்கும் சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று தற்போது ஆளுகின்ற பா.ஜ.க. அரசு சொல்கிறது. அதோடு, இந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று வாதாடு கிறார்.
பா.ஜ.க. அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால் மதச் சார் பற்ற நாட்டில் சிறுபான்மை யினருக்கு என்று தனி அந்தஸ்து எதற்கு? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு நீதியரசர் இக்பால் கேட்டார். ‘அப்படியென்றால் இவ்வளவு காலம் இருந்து வந்திருக்கிறதே, அது எப்படி சாத்தியமாகிறதே, ஆட்சி மாறியதால் இப்படி சொல்கி றீர்களா?’ என்று கேட்டார்.
அரசியல் சாசனம் சிறு பான்மை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. அப்படி பறிக்க முயற்சிக்கிற போது அதை பாதுகாக்கக் கூடிய பொறுப்பு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. டெல்லியில் இ.யூ. முஸ்லிம் லீக் கூட்டம்
முஸ்லிம் சமூகத்தால் உரு வாக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமிஆ மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க வரும் ஜனவரி 28-ம் தேதி வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு புதுடெல்லியில் உள்ள புதுடெல்லி ரபி மார்க்கில் அமைந்துள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் கூட்டம் நடை பெறுகிறது.
இக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. நம் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத் தில் நானும் பங்கேற்க உள்ளேன். இக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவரை யும் அழைத்துள்ளோம்.
வக்ஃபு வாரியம்
நமக்கென்று வக்ஃப் வாரியம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உருவானதே வக்ஃப் வாரியம். அதில் உள்ளவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும்.
வக்ஃபு வாரிய நிலைமை என்ன? பள்ளிவாசல், ஜமாஅத்தை நிர்வகிப்பதுதான். பாராளுமன்றம் உருவாக்கிய சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு இப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்க முடியாது என்றால் வக்ஃபு வாரியத்தை எப்படி உருவாக்கி னீர்கள்? தமிழ்நாட்டில் இந் துக்களுக்கு இந்து அறநிலையத்துறை என்று வைத்திருக்கிறார்கள். அதை நிர்வகிப்பது இந்துக்கள்தான். அந்த சட்டத்தை கொண்டு வந்ததும் பாராளுமன்றம் தானே? அந்தந்த மத சம்பந்த மான சட்டங்களை கொண்டு வருவது அரசியல் சாசனத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
உயர்நீதிமன்றத்தில் இந்த அரசாங்கம் சொல்லக்கூடிய நோக்கம் என்னவென்றால், அவர்களுடைய கருத்தை இந்த நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே மதத்தவராக இருக்க வேண்டும் என்பதை சொல்லக்கூடிய கருத்துள்ள கொள்கையுடைய, தத்துவ முடைய ஆட்சி இன்றைய தினத்தில் நடைபெற்று வருகிற காரணத்தால்தான் இதுபோன்ற குதர்க்கங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை அந்நியப்படுத்தி அவர்களை தூண்டிவிட்டு அவர்களை ரோட்டில் இறக்கி துன்பப்ப டுத்தக்கூடிய நிலையை உருவாக்கி வருகிறார்கள். எனவே, அதனை நாம் சட்டரீதியாகத் தான் போராட முடியும். அதில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் நாம் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும். நமக்குள் இருக்கும் பிளவுகளை பெரி தாக்கி நாமே தாக்கி கொள்வோ மென்றால் வெற்றி பெற முடியாது. இந்தியா இந்து நாடு அல்ல நம் தேசியக்கொடி மூவர்ணம் உள்ளது. அந்த கொடியை இரு வர்ணக் கொடியாக மாற்ற சில பேர் முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டில் உள்ள அனைவரும் இந்துக்களாகி விடுங்கள் என்று சொன்னால் ஒரே சட்டத்தை பின்பற்றி ஒரே வர்ணக் கொடியாக்குவதற்காகத்தான் அர்த்தம். ஆனால், இந்த நாடு என்பது இந்து நாடும் கிடையாது; இந்தி நாடும் கிடையாது.
அரசியல் சாசனத்தில் குறிப் பிட்டுள்ளபடி இந்த நாடு மக்க ளுடைய நாடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை - இதுதான் இந்த நாட்டின் தத் துவம். 22 மொழிகள் இந்த நாட்டில் ஒப்புக்கொள்ளப் பட்ட மொழியாக இருக்கிறது. இந்தி மொழியை திணிக்க முடியாது.
மாநில அரசுக்கு இன்றைய மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் எல்லா தகவல்களையும் இந்தியில் தான் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அதற்கு காரணம் அவர்களின் கொள்கையை திணிக்கும் முயற்சி. அதேபோன்று, கர்வாப்ஸி என்று சொல்வதும் அவர்களின் கொள்கையை திணிக்கிறது முயற்சியே. அதனை முறியடிப்பதும் நமது கடமை.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையும் சரி; இந்தியாவையும் பொறுத்தவரையும் சரி. அனைத்து கட்சிகளை பொறுத்தவரையும் இந்திய அரசியல் சட்டம்தான் நமது வழிகாட்டி. அதன்படி தான் நடக்க வேண்டும். அதிலுள்ள சட்டங்கள் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது அதை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம். அரசியல் சாசனம் நூற்றுக்கு மேற்பட்ட முறை திருத்தப்பட்டிருக்கிறது. எனவே அதன்படிதான் இங்கு உரையாற்றிய மாநிலச் செயலா ளர் நிஜாமுதீன் குறிப்பிட்டது போல சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய 44-வது ஷரத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து வைத்து வருகி றோம். அந்த கோரிக்கை வைப்பது சட்டரீதியானது.
எனவேதான், அந்த சட் டத்தை வைத்துக் கொண்டு பாராளுமன்ற - சட்டமன்றங் களில் விவாதிப்பதை , அதில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதை தடுப்பதற்காகத் தான் நாம் ஒருகோடி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.
2006-ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது. அதில் சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், குறிப்பாக உர்தூ பேசும் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க நாம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அன்றைய தி.மு.க. அரசு உரிய அரசாணை பிறப் பித்தது. அதன் பின் வந்த அரசு அதை காற்றில் பறக்க விட்டது. அதன் விளைவு நேற்றைய தினம் உயர்நீதிமன்றமே அரசுக்கு கண்டனம் தெரிவித் திருக்கிறது.
ஏற்கனவே இந்த அரசு கொண்டு வந்த அரசாணையை மதிக்காமல் நடக்கிறது அரசு தான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இப்படி இருந்தால் குடி ஆட்சி முழுமை பெறாது. எனவே, குடியரசு என்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தில் வழங்கக்கூடிய மக்கள் சட்டத்தை நிலை நிறுத்த பாடுபடக்கூடிய கட்சி கள் என்ற உணர்வு நாளாகத் தான் இந்த நாளை நாம் பார்க்க வேண்டும். அதேபோன்று குடியரசை பேணுகின்ற நல்லாட்சி தமிழகத்தில் உருவாக நாம் குரல் கொடுத்து வருகிறோம். அதில் நாம் வெற்றி பெறுவோம். அல்லாஹ் அருள்வானாக! இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்