Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 31, 2007
சாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம்


சாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம் கோயம்புத்தூர், ஜன.31 12 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகள் அனைவரும் சாதி, மத, வழக்கு வேறு பாடின்றி விடுதலை செய்யப் பட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய மாநாடு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய மாநாடு 2016, ஜனவரி 30 சனிக்கிழமை கோயம்புத்தூர் ஆயிஷா மஹால் வளாக கே.எம். சீதி சாஹிப் திடலில் கோவை சி.ஐ. அல்லாபிச்சை நினைவரங்கில் நடை பெற்றது.

பிரதிநிதிகள் கருத்தரங்கம்

இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வு காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரார்த்தனைக்குப்பின் மாநாட்டு தலைவரை முன்மொழிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வழிமொழிந்து, தேசிய துணைத்தலைவர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா ஆகியோர் உரையாற்றினர்.

சுதந்திர தொழிலாளர் யூனியன் கேரள மாநில தலைவர் அஹமது குட்டி உன்னிக்குளம் தலைமை தாங்கினார். கேரள மாநில எஸ்.டி.யூ. பொதுசெயலாளர் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லா வரவேற்று பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிமுக உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,) மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மத்திய பிரதேச நயீம் அக்தர், அகில் ஆசாத், எஸ்.டி.யூ. தமிழ்நாடு மாநில செயலாளர் திருச்சி ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமு தீன், எம்.பி. அப்துல் வாஹித், மகாராஷ்டிரா ஏஜாஸ் பெய்க், ஜார்கண்ட் அம்ஜத் அலி, வண்டூர் ஹைதர் அலி, அஞ்சலி குமார் சின்ஹா, கேரள மும்தாஜ், பாண்டிச்சேரி மாஹே யூசுப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலா ளரும், எஸ்.டி.யூ. தேசிய ஒருங்கிணைப்பாளருமான இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தொடக்க உரை நிகழ்த்தினார்.

இதை தொடர்ந்து பிரதிநிதிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜார் கண்ட், மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள் கருத்துக்களை கூறினர்.

எஸ்.டி.யூ. தேசிய நிர்வாகிகள் தேர்வு:-

சுதந்திர தொழிலாளர் யூனியன் சட்டதிட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேசிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த செய்யத் அம்ஜத் அலி தேசிய தலைவராகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஹ்மத்துல்லா பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் ஜி.எம். ஹாஷிம், பொருளாள ராகவும் தேர்வு செய்யப்பட் டனர். வழக்கறிஞர் ஹனீபா (கேரளா), ரஷீத் அக்தர் (மகாராஷ்டிரா), குடியாத்தம் வாஹித் (தமிழ்நாடு), துணைத் தலைவர்களாகவும், அகீல் ஆசாத் (மத்தியபிரதேசம்), ரகு பனவேலி (கேரளா), அஞ்சலி குமார் சின்ஹா (ஜார்கண்ட்) ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர 32 தேசிய செயற்குழு உறுப்பினர் களும் இக்கூட்டத்தில் தேர்வாகினர்.

அவர்கள் விவரம் வருமாறு-

கேரளாவைச் சேர்ந்த அஹமதுகுட்டி - உன்னி குளம், வழக்கறிஞர் கோபி, வண்டூர் ஹைதர், உஸ்மான் கோயா, பி.பி.ஏ. கரீம், ஏ. அப்துல் ரஹ்மான், உம்மர் ஒட்டும்மள், எம்.ஏ. கரீம், கே.பி. குன்ஹன், எம்.பி.எம். சாலிஹ், சி. அப்துல் நாஸர், பி.ஏ. சாகுல் ஹமீது, பி.எஸ். அப்துல் ஜப்பார், வாலந்திரா மஜீத், யு.ஏ.கே. தங்ஙள், யு. போக்கர், கே.பி.அஷ்ரப், பாலக்காடு ஹமீது, வெலத்தில் அஹமது, கே.கே. ஹம்சா, சி.எச். ஜமீலா, ஏ. முனீரா, வயநாடு தேவகி, மாஹின் அபூபக்கர்,

தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் ஐ.எம். ஜெய்னுல் ஆபிதீன், அய்யம்பேட்டை பைஸல், குளச்சல் செய்யது அலி, குடியாத்தம் காதர் பாஷா, ஈரோடு ஷராபத் ராகிப்,

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது யூனுஸ், தெலங்கானாவை சேர்ந்த மிர்ஸா ஷாக்கீர் ஹுசைன், புதுச்சேரி மாஹே பி. யூசுப் உள் ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தேசிய மாநாடு

மாலை 4 மணிக்கு சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய மாநாடு நடைபெற்றது. எஸ்.டி.யு. தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை யாற்றினார்.

தேசிய பொதுச்செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (முன்னாள் எம்.பி.,) தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், கேரள அமைச்சர் மஞ்சளம்குழி அலி, எஸ்.டி.யு. தேசியத் தலைவர் ஜார்க்கண்ட் அம்ஜத் அலி, முஹம்மது குட்டி - உன்னிகுளம், தமிழ் நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தீர்மானங்கள்

பின்னர் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

1. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு விரோத மான ஒரு சார்பானவை என்பதால் அவை நமது நாட்டின் சாதாரண குடிமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மிக அதிகமான தீங்கு விளைவிக்கிறது. பெரும் முதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையே உள்ள மறைமுக ஒப்பந்தமே இவை என்பது தெளிவாக புரிகிறது. இச்சட்டங்களை இந்த மாநாடு கடுமையாக எதிர்க்கிறது என்பதோடு உழைப்பாளிகளுக்கு எதிரான அச்சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் என்று அரசு திரும்ப பெறுவதோடு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு அரசியல் சாசனம் தந்துள்ள பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. 2. அரசின் ஆதரவோடு தொடர்ந்து நடந்து வரக்கூடிய சமூக வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.டி.யூ. தேசிய மாநாடு ஆழ்ந்த கவலை வெளிப்படுத்துவதோடு, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலி யுறுத்துகிறது.

3. மீனாக்குமாரி கமிஷன் அறிக்கையும், சைதாரோ அறிக்கையும் மீனவர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதும் அவர்களை வேலையற்றவர்களாக மாற்றக் கூடிய ஆபத்துக் களையும் கொண்டதாகும். மத்திய சாலை பாதுகாப்பு மசோதா வாகன தொழிலாளர்களை வீதிக்கு கொண்டுவந்து விட்டது. மின்சார மசோதா தொழிலாளர்களையும், நுகர்கோர்களையும் மிக மோசமாக பாதித் துள்ளது. குழந்தை தொழி லாளர்களை மீண்டும் அரசு அறிமுகப்படுத்துவது மிகவும் ஆபத்தான செயல். சிறு தொழில்கள் மாய்ந்து விட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக ஆகிவிட்டனர்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங் கள், தனி முதலாளிகளுக்கு மாற்றப்பட்டு வரப்படு கின்றன. இரயில்வே உள்ளிட்ட பிரத்துறைகள் அன்னிய முதலீட்டிற்கு வருவாயை ஈட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றன. இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பணியாளர்களின் எண்ணைக்கை குறைக்கப்பட்டு வரு கின்றன. சம்பள பில் மற்றும் தொழிலாளர் கோடு, இன்டஸ்ட்ரியல் லேபர் கோடு போன்ற புதிய சட்டங்கள் அறி முகப்படுத்தப்பட்டு வரு கின்றன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்பட்ட கடன்கள் வசூலிக்கப்பட வில்லை. ஆனால் மாணவர்களுக்கு தரப்பட்ட கல்விக்கடனை வசூலிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

இ.பி.எப். பணத்தை அரசு பங்கு சந்தையில் முதலீடு செய்ய நடவடிக்கை எடு

க்க வேண்டும். அப்பணம் உழைக்கும் வர்க்கதினர் நலனுக்கு செலவிடப்பட வேண்டும். உழைக்கும் வர்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட தொழிலாளர்களுக்கு எதிரான நடைமுறைகளை இந்திய அரசு திரும்ப பெற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. 4. எதிர் பாராத அளவிற்கு உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவும், வேலை யில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அரசு முன்வர வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நடைமுறை கொண்டு வர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பொதுவான பாதுகாப்பு அளிக்க தேசிய பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட வேண்டும். முக்கியமாக அமைப்புசார துறையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். அங்கன்வாடி தொழி லாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்கள் மாத வருவாய் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தபட வேண்டும். தொழிலாளர் அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மத்திய மாநில பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும். முதலீட்டு திரும்ப பெறும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

நிரந்தர தொழிலாளர் களுக்கு தரப்படும் கூலி மற்றும் பயன்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தரப்பட வேண்டும். குறைந்த பட்சம் கூலி சட்டம் மாற்றப்பட வேண் டும். அப்போதுதான் தற் போதுள்ள நிலவரத்திற் கேற்ப குறைந்த பட்ச கூலி ரூ. 15 ஆயிரம் என தீர்மானிக்க முடியும்.

5. போனஸ் நிர்ணயம் , போணஸ் பெற தகுதி நிர்ணயம் , பொது வைப்பு நிதி, பணிக்கொடை அளவு அதிகரிப்பு இவைகள் மீதுள்ள உச்சபட்ச அளவை நீக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. 6. 60வதும் அதற்கு மேற்பட்ட வயத்துக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எல்லா தொழிற்சங்கங்களும் கட்டாயமாக 45 நாட்களுக்கு பதிவு செய்ய வேண்டும். ஐ.எல்.ஓ. கன்வென்சன் நெம்பர் 87 & 89 ரெட்டிப்பிகேஷன் செய்யப்பட வேண்டும்.

7. பொது வைப்பு நிதியின் ரூ. 12,050 கோடி செலவு செய்யப்படாமல் உள்ளது. இதனை தொழிலாளர் வர்கத்தின் நலனுக்காக செலவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 8. மத்திய அரசு உறுதியளித்த தொழிலாளர் பல்கலைக்கழகத்தை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. சங்கத்தின் உறுப்பினர் தொழிலாளர்கள் 4 லட்சமாக உள்ள இன்றைய எண்ணிக்கை 2.5 லட்சமாக குறைக்க ஆவண செய்ய வேண்டும்.

10. நிலுவையில் உள்ள தொழிலாளர் வழக்குகளை தீர்க்க கூடுதலான விரைவு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும்.

11. குறைந்த பட்ச பி.எப். மாத ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் என அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

12. வுளித் தொழில் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிவாரணத் திற்கு அரசு விரைவான நடவடிக்கை மேற் கொள்ள இம்மாநாடு வலியுறுத்து கிறது.

13. நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விசாரணை முடிக்கப்படாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை சிறைவாசிகள் நிபந்தனையின்றி விடு விக்கப்பட வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட தண்டனை சிறைவாசிகள் சாதி, மத வழக்குகள் வித்தியாசமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

விசேஷ காலங்களில் கருத்தில் கொண்டு ஆயுள் சிறைவாசிகள் தமிழகத்தில் விடுதலை செய்யப்பட்ட போது முஸ்லிம் சிறை வாசிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. ஆயுத சட்டம், மத மோதல் உள்ளிட்டவைகளை காரணம் காட்டி முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை தடுக்கப்பட்டது.

உடல் நலம் பாதிக் கப்பட்டு நடைப் பிணமாகிவிட்ட மற்றும் நீண்டகாலம் சிறையில் வாடி இளமை வாழ்வை முற்றிலும் இழந்து முதுமை அடைந்து விட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு உள்ளிட்டவை களில் கூட தமிழகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டு அநிதி இழைக்கப்படுவது அரசின் கவனத்திற்கு பலமுறை சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியரசு தினம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் குறிப்பிட்ட காலம் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகள் சாதி மத வித்தியாசமின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

அந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்திலும் 12 வருட சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட தண்டனை சிறைவாசிகள் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென இந்த தேசிய மாநாடு வலியுறுத்தி கேட்டுகொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய பொருளாளரும், தமிழ்நாடு செயலாளருமான திருச்சி ஜி.எம். ஹாஷிம் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்