Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, July 17, 2018 4 Zul-Qida 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, August 29, 2007
“ சொல்வீச்சில் வெறும் போர் பரணி வேண்டாம்; பார் போற்றும் பாரதமாக இந்தியா விளங்க வேண்டும் ”


“ சொல்வீச்சில் வெறும் போர் பரணி வேண்டாம்; பார் போற்றும் பாரதமாக இந்தியா விளங்க வேண்டும் ” பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

நமது நாட்டின் 70-வது சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக நாடு முழுவதிலும் நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் புதுடில்லியில் வழக்கம்போல செங்கோட்டை வளாகத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பெற்றுக் கொண்டு, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாரதப் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். ஒன்றரை மணி நேரம் அவர் ஆற்றிய உரையில் பலரும் களைப்புற்று சிலர் உறங்கியேவிட்டனர் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் உறங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாம்.

பிரதமராக இருக்கும் மோடியின் ஒன்றரை மணி நேர பேச்சு என்பது சுதந்திர தின விழா பேச்சு என்றில்லாமல் தேர்தல் பிரச்சாரத்தைப் போன்றே அமைந்திருந்தது என்கிற விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. எதிர்க்கட்சிகளை சரமாரியாகச் சாடுவதும், சுயவிளம்பர சாதனைகளைப் பாடுவதும் அவருடைய பேச்சின் முழுவடிவமாக இருந்திருக்கிறது. நான்கு கோடி பேருக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டிருப்பதும், கிராமப்புற சாலை வசதிக்கான பணிகள் நாளொன்றுக்கு 100 கி.மீ. தூரத்திற்கு முடுக்கிவிடப் பட்டிருப்பதும், சில எண்ணிக்கையிலான கிராமப்புற குடும்பங்கள் மின்சார வசதி பெற்றிருப்பதும், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் துரிதமாக ஆராயப்பட்டு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதும் மிகப் பெரிதாக பேசப்பட்டுள்ளன.

மேலும் கழிவறை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாம். இவைகளெல்லாம் ஒரு சுதந்திர தினவிழா மேடையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிடும் உரையில் சொல்லப்பட வேண்டியவைகளா? இதுபோன்ற பேச்சுக்களை உள்ளடக்கி, ஏதோ ஆவேசமாக உணர்ச்சி வசப்பட்டு பேசுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் பிரதமர் மோடி எதை சாதிக்கப் பார்க்கிறார் என்று புரியவில்லை.

உலகின் மிகச்சிறந்த முதல் 200 பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை என்கிற நிலையை மாற்றி கல்வி மேம்பாட்டை உயர்த்துவோம் என்றோ, மதவாதம் எல்லா துறைகளிலும் தலை தூக்குகிற நிலையை மாற்றி மதச்சார்பின்மை போற்றும் இந்திய பாரம்பரியத்தைக் காப்போம் என்றோ, மறைக்கப்பட்டு வெளிநாடுகளில் குவிந்து கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்போம் என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதியை மேலும் தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவோம் என்றோ நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய கருத்துக்களைத் தொட்டு பிரதமர் பேசியிருந்தால் பரவலாக அவரின் பேச்சுக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்; அதை விடுத்து, காங்கிரஸை சாடுவதிலேயே அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார் என்பதுதான் இங்கே கேலிக்குரியதாக விமர்சிக்கப்படுகிறது.

நமது நாட்டின் நீதித்துறைக்கு உயர் தலைமை வகிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மிகுந்த வேதனையோடு ஒரு கருத்தைச் சொல்கிறார். “நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஆற்றிய உரைகளைக் கேட்டேன். நீதித்துறை தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்தும், காலியிடங்களுக்கான நீதிபதிகள் நியமனங்கள் குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்த்திருந்தேன்; மிக பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. நாட்டின் பல்வேறு பிரச்சனைகளைப்பற்றி பேசும் பிரதமர் நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமானத் தீர்வுகள் கிடைக்கப் பெறாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைப்பற்றி கவலை கொண்டு பேசியிருந்தால் நலமாக இருந்திருக்கும்” என்று தனது வேதனையை சட்டத்துறை அமைச்சரை வைத்துக் கொண்டே மேடையில் வெளிப்படுத்தியிருக்கிற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இத்தகைய பேச்சு இந்திய சரித்திரத்தில் இதுவரையிலும் எந்த பிரதமரைப்பற்றியும் பேசப்படாத ஒன்று.

நம் நாட்டின் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மிக மிகக் கீழானதாக ஆகிவிட்டது என்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைவிட வேறு எவரும் அதிக உயர்நிலை அந்தஸ்தில் சொல்லிவிட முடியாது. கொலிஜியம் என்று சொல்லக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குழு நன்கு ஆய்ந்து, எந்த அரசியல் கலப்புக்கும் இடமில்லாமல் 150 மூத்த அனுபவம் நிறைந்த வழக்கறிஞர்களின் பட்டியலைத் தந்து, 8 மாதங்கள் கடந்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்? நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் காலியாகிவிட்ட இடங்களை இன்னும் நிரப்பாமல் அப்படியே கிடப்பில் போட்டிருப்பதால் லட்சக்கணக்கான வழக்குகள் எந்த அசைவும் இல்லாமல் ஸ்தம்பித்து கிடக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் நமது நாட்டின் ஜனநாயக மாண்பு எப்படி நிலைக்கும்? உலக அரங்கில் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிற பெருமிதம் கேலிக்கூத்தாக ஆகிவிடாதா?

இதுபற்றி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது கருத்தைத் தெரிவிக்கும் போது “ஆர்.எஸ்.எஸ். சார்புடைய வழக்கறிஞர்களின் பட்டியல் முழுமையாகக் கிடைக்கும் வரை மோடி அரசு நீதிபதிகளை நியமனம் செய்யாமல் வேண்டுமென்றே தாமதிக்கிறது” என்று குறிப்பிடுகிறார். இப்போது பற்றி எரியும் மிக முக்கியமான பிர்ச்சினை காஷ்மீர் பிரச்சினை. அப்பாவி பொதுமக்கள் ஆயுதபடையினராலேயே சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்; இதற்கு மிக முக்கியமான காரணம் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டதுதான் என அனைத்து எதிர்க்கட்சிகளும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டன. இதற்கும் மேலாக ஜம்மு -& காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார், நீதிபதி முஸப்பர் ஹூசைன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘காஷ்மீர் மக்களை வேற்று கிரகவாசிகளாக நடத்தாதீர்கள்; அவர்களை சொந்த நாட்டு மக்களாக பாருங்கள், அவர்கள் மீது ஏன் புல்லட் குண்டுகளை வீசுகிறீர்கள்’ என கடுமையாக கண்டித்துள்ளது.

எனவே ஆயுதபடையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்கிற கோரிக்கை எல்லா தரப்புகளிலிருந்தும் மிகத் தெளிவாக மத்திய அரசுக்கு வைத்தாகிவிட்டது. என்ன பயன்? இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண துணை நிற்க வேண்டிய ராணுவமே பிரச்சினையைத் தீவிரப் படுத்தக் காரணமாக இருக்கிறது என்றால் இந்த வேதனையை யாரிடத்தில் போய்ச் சொல்வது?

இவைபோன்ற எத்தனையோ பல்வேறு பிரச்சினைகளும், பல்வேறு சவால்களும் எதிர் கொண்டு எழுந்து நிற்கும் இவ்வேளையில் பிரதமர் ஒன்றரை மணி நேர பேச்சில் கழிவறை கட்டப்பட்டதையும், ரயிலில் பயோ டாய்லட்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும், கேஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் சொல்லி நேரத்தையும், வாய்ப்பையும் வீணடித்திருக்கிறார் என்பதுதான் நமது குற்றச்சாட்டு. இவைகளெல்லாம் ஒரு அரசில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்திட்டங்கள்தான். யார் பிரதமராக இருந்தாலும் அந்தந்த துறைகளால் நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளிலும் நடைபெற்றன; இப்போதும் தொடர்கின்றன; நாளைய அரசிலும் தொடரும். இது ஒரு பெரிய விசித்திரப் பெருமை அல்ல.

சின்னச் சின்ன சில்லறை விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமலும், ‘ஏழைகளுக்காக உழைக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு நாட்டின் பண முதலை களான அம்பானி, அதானி நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு செய்வதற்குத் துணைபோகாமலும், மதவாத வெறிச் செயல் களுக்கு உடந்தையாக அரசு நிர்வாகமே காரணமாக இருப்பதை அனுமதி அளிக்காமலும் இருந்தாலே நாடு சுபிட்சம் பெரும்; நாட்டு மக்களின் வாழ்வு அமைதி பெரும்; நாட்டின் வளர்ச்சி நீடித்து நிலைபெறும்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது வாய்ப் பேச்சு மற்றும் சொல்வீச்சுகளில் வெறும் போர் பரணி பாடாமல் பார் போற்றும் பிரதமராக இந்தியாவைக் கொண்டு செல்ல முயற்சிப்பதே அறிவுடைமை; அதுவே அனைவரும் எதிர்நோக்கும் எதிர்காலம்.

அன்புடன், வி.அப்துல் ரஹ்மான் ஆசிரியர் பிறைமேடை மாதமிருமுறை

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்