Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, October 18, 2007
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரயில் மறியல் அறப்போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரயில் மறியல் அறப்போராட்டம் சென்னை எம். ஜெய்னுல்ஆபிதீன் தலைமையில் காயல் மகபூப், பூவை முஸ்தபா, குலாம் முஹம்மது, பழவை எம். அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது சென்னை, அக். 18-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று (18-10-2016) சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் வட சென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் தலை மையில் நடைபெற்றது. காயல் மகபூப், பூவை முஸ்தபா,குலாம் முஹம்மது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியு றுத்தி இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் சார்பில் 18-10-2016 (இன்று) ரயில் மறியல் போராட்டம் கடற்கரை ரயில் நிலையத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த போரா ட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், மாணவர் அணி செயலாளர் (எம்.எஸ்.எஃப்) பழவை எம். அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் பிலால் உசேன், தென்சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, செயலாளர் மேத்தப்பிள்ளை மரக்காயர், பூவை எம்.எஸ். காதர், மைதீன் பாஷா, அப்துல் காதர், தஸ்தகீர், கமால், சான்பாஷா, கனி, நிஸார், சபீர், கோம்பை நிஜாமுதீன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் காயல் அஹமது சாலிஹ், திருவள்ளூர் மேற்கு நிர்வாகிகள் என். ஜலீல்கான், மாணவர் அணி கே. ஆசிப்கான், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏ.கே. முஹம்மது ரபீக், மத்திய சென்னை நிர்வாகிகள் மண்ணடி ஏ.எச். இஸ்மாயில் துறைமுகம் இம்ரான், சுக்கூர், புதுப்பேட்டை ரபி, சேப் பாக்கம் கரீமுல்லா, எஸ்.டி.யூ. நாசர், ஐஸ்ஹவுஸ் அப்துல் ரஹ்மான், சையத் மொய்தீன், சேப்பாக்கம் ஆலம்கான்வண்ணை நாசர், கரீம் நவாஸ், சலாவூதீன், மாண வரணி அன்சர் பாஷா, புளியந்தோப்பு கப்பார், குலாப், கவிஞர் ஜலாலுதீன், காதர்ஷா, மாணவர் அணி லால்பேட்டை அஹமதுல்லாஹ், சேட், முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் முழங் கப்பட்ட முழக்கங்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பிரதிநிதியை தராத மத்திய மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக விவசாயிகள் பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் கூறியும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தவறிய தமிழக அரசை கண்டிக்கிறோம்.தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக செயல்படும் தமிழக பா.ஜ.க போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழகத்தின் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பி னர்களை சந்திக்க மறுத்த பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக் கிறோம். நதிநீர் பங்கீட்டில் நடுநிலை வகிக்காத பிரதமர் நரேந்திர மோடியின் ஒருதலைப் பட்சமான நிலைப்பாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். தமிழக விவசாயிகளின் உயிர் காக்கும் போராட் டமான நேற்றும், இன்றும் நடைபெறும் போராட் டத்தில் பங்கேற்காத அ.தி.மு.க., பா.ஜ.க.வை தமிழக விவசாயிகள் எதிர்காலத்தில் புறக்கணிக்க வேண்டும்.மேற்கண்டவாறு முழக்கங்கள் முழங்கப் பட்டது.நிருபர்களிடம் வட சென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் கூறியதாவது:- இந்த ரயில் மறியல் போராட்டம் எங்களின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உத்தரவின் பேரில் நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் உத்தர விட்டும், மத்தியில் ஆளும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பெருத்த துரோகத்தை செய்துள்ளது. தமிழக எம்.பி.க்கள் 50 பேர்களை சந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்தது மூலம் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறார். கர்நாடகாவிற்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என்று செயல்படுகிறார். கடந்த காலங்களில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டனர். இப்போது, அதைவிட நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நடை பெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்றது. இரண்டாம் நாள் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்று போராட்டம் செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் உள்ள இந்தியன் வங் கியிலிருந்து ஊர்வலமாக சென்று, கடற்கரை ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்தவர்களை காவல் துறையினர் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை இராயபுரம் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.சென்னை இராயபுரம் ஸ்ரீபேலசில் கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.எஸ்.எஃப் நெல்லை அபுதாஹிர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்