Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, October 19, 2017 28 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, October 22, 2007
காவிரி பிரச்சினையில் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கும்: அக்.25 - தி.மு.க கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்


காவிரி பிரச்சினையில் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கும்: அக்.25 - தி.மு.க கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் சென்னை, அக். 22-காவிரி பிரச்சினையில் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க அக். 25 - தி.மு.க கூட்டியுள்ள அனைத்த கட்சி கூட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அறிவாயலத்தில் தி.மு.க பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளரும் சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. சந்தித்தனர்.இச்சந்திப்புக்குப்பின் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- நவம்பர் 19-ந்தேதி இடையில் நிறுத்தப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்லிலும் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. திமு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீண்ட நாளாக கூட்டணி அமைத்து அரசியல் நடத்தி வருகிறது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. இந்த மூன்று தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தும், பிரச்சார வியூகம் குறித்தும் தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தோம். மூன்று தொகுதிகளுக்கும் வெற்றி சிறப்பாக இருக்கிறது என்று எங்களிடம் தளபதி ஸ்டாலின் கூறினார். வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். கேள்வி:- பணம் வழங்கப் பட்டதால் தான் தேர்தல் நிறுத் தப்பட்டது. இப்போதும் பணம் வழங்கப்படுமே பதில்:- காட்டுக்குள் செல்லும் போது காலில் முள் குத்தும் அந்த முள்ளை எடுத்து விட்டு காட்டுக்குள் செல்வோம்.அதேபோன்று சென்றமுறை அப்படி நடந்திருக்கலாம். தேர்தல் ஆணையம் காலில் முள் குத்திய அனுபவத்தை அறிந்தி ருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது. நியாயமாக , நேர்மையாக தேர்தல் நடை பெறும் என்று நம்புகி றோம். பத்திரிகை யாளர்கள், பொது மக்கள், வாக்காளர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் தேர்தல் ஆணையம் கவனித்துக் கொண்டு நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும். கேள்வி:- அனைத்து கட்சி கூட்டத்தை தி.மு.க கூட்டி யிருக்கிறதே?பதில்:- காவிரி பிரச்சினைக் காக 25-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாயலத்தில் தமிழ கத்தின் எதிர்க்கட்சி தலை வராக இருக்கின்ற தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் கூட்டத்திற்கான அழைப்பு அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் அழைப்பு கிடைத் திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறை யில், எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கும் அழைப்பு தனியாக அனுப் பப்பட்டிருக்கிறது. கட்சி யின் சார்பில் நானும், எம்.எல்.ஏ. என்கிற முறையில் அபூபக்க ரும் கூட்டத்தில் கலந்து கொள் வோம். காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசு எடுத்திருக்கின்ற நிலையை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராட்டம், ஆர்ப்பாட்டம், ரயில்மறியல், கடையடைப்பு, போர்ப்பாட்டு ஆகியவைகளை ஜனநாயக முறையில் வன்முறை தூக்காமல், அமைதியான முறையில் நடைபெற்றது. ஜனநாயக மரபுகளுக்கு தமிழகம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. தமிழகத்தின் இந்த செயலை இந்தியாவில் அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கர்நாடகவில் போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ரயில்மறியல் போன்றவைகளை வன்முறையை கட்டவிழுத்துவிட்டு நடத்தியது. கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியும், ஜனாபதிபதி பிரதமர் ஆகியோர்களை சந்திக்கவும் முயற்சி எடுத்தது. தமிழகத்திலும் அதே நடைமுறை இருந்திருக்க வேண்டும். ஆளுங்கட்சி என்பதை விட தமிழக அரசே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தான் வழக்கு இருக்கிறதே! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன பயன் என்றும் சொல்கி றார்கள். இதேநிலை தான் கர்நாட காவிற்கும் உள்ளது. அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்கள். தமிழக அரசு ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். வலுசேர்க்கும் நிலையும் வந்திருக்கும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. அதேநேரத்தில் எதிர்க்கட்சி ஏன் கூட்டவில்லை என்ற கேள்வி எழுந்தது. எனவேதான், தி.மு.க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இதை வரவேற்கிறேன். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று சொன்ன அனைத்து கட்சிகளும் தி.மு.க கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமருக்கு நம்முடைய அழுத்தத்தை கொடுக்க முடியும். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதால் கூட்டம் கூட்ட அதுவும் ஒரு தயக்கமாக இருந்திருக்கலாம். தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க கூட்டியுள்ள கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். கேள்வி:- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தாரே......பதில்:- விவசாய சங்கத்தினர் அனைவரையும் அழைத்து கூட்டத்தை நடத்தி தளபதி ஸ்டாலின் அதில் இயற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்தார். அப்போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை அது பரிசீலனையில் இருக்கிறது என நம்புகிறேன். 25-ந்தேதிக்குள் என்ன முடிவு எடுப்பார் என்பதை பார்ப்போம்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்