Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, July 17, 2018 4 Zul-Qida 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, October 24, 2007
பொது சிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தவறுக்கு துணை போகாதீர்; தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எச்சரிக்கை


பொது சிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தவறுக்கு துணை போகாதீர்; தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எச்சரிக்கை சென்னை, அக்.24- பொது சிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த தவறுக்கு துணை சென்று துர்ப்பாக்கிய நிலைக்கு செல்ல வேண்டாம் என்றும் இ.யூ. முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் எச்சரித்துள்ளார். ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் ஷரீஅத் பாதுகாப்பு பொதுக் கூட்டம் சென்னை மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் நேற்று 23-10-2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மவ்லானா ஜி.எம். தர்வேஸ் ரஷாதி தலைமை தாங்கினார். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பி னர் மல்லானா ஏ. ரூஹுல் ஹக் ரஷாதி, தமிழ்நாடு அரசு தலைமை காஜி ஸலாஹுதீன் ரியாஜி, இந்திய தேசிய லீக் தமிழ்நாடு தலைவர் பஷீர் அஹமது, மவ்லானாக்கள் கே.எம். இலியாஸ் ரியாஜி, எம். சதீதுத்தீன் பாகவி, ஜே. காஜா முஹியுனுத்தீன் ஜமாலி, கே. எம. அபுதாஹிர் ஸிராஜி உள்ளிட்டோர் பேசினார்கள். கூட்டத்தில் நிறைவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசிய தாவது- ஜமாஅத்துல் உலமா சார்பில் ஷரீஅத் பாதுகாப்பு பொதுக்கூட்டத்துக்கு என்னை அழைத்து பேச வாய்ப்பளித்தற்கு ஜமாஅத்துல் உலமா சபை அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். இங்கு உலமா பெருமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரி வித்திருக்கிறார்கள். கண்ணியத் துக்குரிய காயிதெ மில்லத் காலம் முதல் இன்று வரை இந்தியாவில் மார்க்க விஷயம் என்று வரும்போது உலமாக்கள் என்ன சொல்கி றார்களோ, அதனை ஏற்று செயல்பட்டு வருவது முஸ்லிம் லீக் நடை முறையாகும். மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நீதிமன்றம் மூலம் திருத்தம் செய்யவும், தலாக் விஷயத்தில் அரசு முயற்சிக்கிறது என்று சொல்வதை விட அதனை அரசியல் கோணத்தில் செய்து வருகிறார்கள். இதற்கு அருமையான பதிலை உலமா பெருமக்கள் கூறியுள்ளார்கள். உலமா பெருமக்கள் மார்க் கத்திற்கு என்ன விளக்கம் தருகிறார்களோ அதுதான் மார்க்கக் கொள்கை. உச்சநீதி மன்றம் இந்த வழக்கை எடுத்ததே தவறு. நோட்டீஸ் கொடுத்தது அதனினும் தவறு. அரசியல் சட்டத்தில் பகுதி - 3-ல் சொல்லப்பட்டுள்ள அடிப்படை விதியில் தனியார் சட்டத்தில் பாதிப்பு இருக்கக் கூடாது. இந்தியாவில் 72 தனியார் சட்டம் இருக்கிறது என்று தான் நினைத்தார்கள். 300-க்கும் மேற்பட்ட தனியார் சட்டம் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் தெரிவிக்கிறார். இந்த தனியார் சட்டத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக் கிறது. அப்போது திருத்தவே முடியாது என்று சொன்ன உச்சநீதிமன்றம் மத அடிப் படை சட்டத்தில் உச்சநீதி மன்றம் இப்போது தலையிடு கிறது. அதைத்தான் உலமா பெருமக்கள் இன்று கேட்கி றார்கள். நீதிமன்றத்தின் மூலம் இந்த அரசு அதை திணிக்க முயற்சிக் கிறது. இந்து திருமண முறை யில் அக்னியை 7 முறை சுற்றி வர வேண்டும் என்று ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது. 6 முறை சுற்றி வந்தால் திருமண முறை செல்லாது என்று சொல்லப்படுகிறது. இதனை சட்டத் தின் மூலம் தடுத்து விட முடியுமா? தலாக் என்றும், குலா என்றும் புனித திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறது. ஆனால், இவைகளை நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தடுத்து விடலாம் என்று நினைக்கிறது. திருக்குர்ஆனை மேற்கோள் காட்டலாம். திருக்குர்ஆன் வசனத்திற்கு அர்த்தம் இப்படித்தான் என்று நீங்கள் சொல்லக்கூடாது. விவாக ரத்து முறைக்கு நான்கு வழிகள் இருக்கிறது. கணவன் கேட்கும் விவாகரத்து ‘தலாக்’ மனைவி கேட்கும் விவாகரத்து ‘குலா’ இருவரும் சேர்ந்து முடிவு செய்து மியூசுவல் கான்ஸெண்ட் நான்காவது நீதிமன்றத்தில் பெறுவது. இந்து திருமண சட்டத்தில் கணவன், மனைவியை பிரிந்து 2 வருடம் தனித்திருந்த பிறகு தான் விவாகரத்து செய்யலாம் என்று இருக்கிறது. மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்தால் உடனே விவாகரத்து செய்ய முடியாது. கணவன் வீட்டுக்கு வருகிறார். அப்போது மனைவி வேறொரு ஆணுடன் இருக்கும் போது, கணவன் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து வெட்டுவான். அது கொலையில் முடியும். இதுபோன்று தீர்க்கும் வகையில் மனிதன் பாதிக்கப்படுவான். எனவே, மனிதன் சந்தோஷமாக வாழ வேண்டும். என்பதற்காகத்தான் திருக்குர்ஆனில் தலாக் முறை சொல்லப்பட்டிருக்கிறது. இதைத் தான் மார்க்கம் சொல் கிறது; உலமாக்களும் சொல்கி றார்கள். இதற்கு விளக்கம் நீதிமன்றமோ, சட்டமன்றமோ, பாராளு மன்றமோ, பல்கலைக்கழகங்களோ சொல்ல முடியாது. அதை சொல்லக்கூடிய தகுதி உள்ளவர்கள் உலமாக்கள் தான். எனவே தான், உலமாக்கள் ஒன்றுசேர்ந்து சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் தொடர்பான இந்தியாவின் சட்ட கமிஷனின் 16 வினாக் களையும் புறக்கணிக்க வேண்டும் என முடிவெடுத்த னர். அவர்களின் வழியில் நடக்க வேண்டியது முஸ்லிம் களின் கடமை. தினசரி பத்திரிகை எடுத்தால் மத்திய அமைச்சர் கள் உலகில் உள்ள 20 நாடுகள் இந்த சட்டத்தை மாற்றி அமைத்து விட்டார்கள் என்றும் சொல்லுகின்ற செய்தி கள் தான் வருகின்றது. உலகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் தான் உள்ளன. உண்மையான இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடு என்று எதுவும் இல்லை. இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரீஅத்தை பின் பற்றுவதற்கு பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ் தான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் உள்ளதைப் போல ஏற்க முடியாது. உதாரணமாக, லிபியாவில் ஆட்சி செய்த கடாபி, தனது நாட்டில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் பளுவான வேலை யில் ஈடுபடுவதால் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க தேவையில்லை என சட்டம் இயற்றினார். உடனே முஸ்லிம் உலமாக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாகிஸ்தானில் குண்டு வைத்து ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். அதை இங்குள்ள முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? பெண்களையே பெண்கள் திருமணம் செய்து கொள்ள லாம் என்று சில நாடுகளில் சட்டம் போடுகிறது. அதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? உலமாக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்கிறார்கள். நாம் ஆத்திரப் பட வேண்டாம். மத்திய அரசில் அறிவாளிகளும் இருக் கிறார்கள் என்று நம்புகிறோம். எனவே, நீதிமன்றத்தில் கொடுத்த அபிடவிட்டை திரும்பப் பெறுவதான் நல்லது. அப்படி இல்லையென் றால் மாபெரும் தவறை செய்த துர்ப்பாக்கிய நிலை அதற்கு உருவாகும். இந்தியாவில் 20 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் விடுதலைக்காக வும், நாட்டின் வளர்ச்சிக்காக உயிர்த்தியாகம், பொருட் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை இழிவுபடுத்த மார்க்க விஷயங்களில் தலை யிடக் கூடாது. இன்னும், ‘சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்"" அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுக்கும் முடிவுக ளுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படு வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார். இக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் கே.எம். நிஜாமுதீன், ஆப்பனூர் ஜபருல்லாஹ், மாநில துணைச் செயலாளர் இப்றாஹீம் மக்கீ, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூஸுப் குலாம் முஹம்மது, தென்சென்னை மாவட்டத் தலைவர் பூவை முஸ்தபா, வட மாவட்ட துணைச்செயலாளர் ஏ.கே. முஹம்மது ரபி மற்றும் உலமா பெருமக்களும், முஸ்லிம் லீகின் முன்னோடிகளும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொஹண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்