Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, November 19, 2017 29 Safar 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 14, 2007
யூனிபார்ம் சிவில் கோடு - சீரான குடும்ப சட்டம் என்பதற்கும் காமன் சிவில் கோடு - பொது சிவில் சட்டம் என்பதற்கும் மலைக்கும் - மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது!


யூனிபார்ம் சிவில் கோடு - சீரான குடும்ப சட்டம் என்பதற்கும் காமன் சிவில் கோடு - பொது சிவில் சட்டம் என்பதற்கும் மலைக்கும் - மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது! நமது நாட்டில் விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி, நில வரி போன்ற சிவில் சட்டங்கள் யாவும் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

ஆனால், மதச் சட்டங்கள் அவரவர் மதத்திற்கு தனிச் சட்டங்களாக இருக்கின்றன. எல்லா மதங்களுக்கும் பொதுவான குடும்ப சட்டம் வேண்டும் என்பது எல்லா மக்களும் ஒரே மதத்தவராக மாற வேண்டும் என்று சொல்லுவதாகும். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியாக உள்ள சிவில் சட்டங்கள் - குடும்ப சட்டங்கள் அந்தந்த மதத்தவருக்கு மட்டுமே உரியவையாகும். எந்தவொரு தனி மதச் சட்டத்தையும் எல்லா மதங்களும் பொதுவானதாக ஆக்கி விட முடியாது.சக்கரவர்த்தி அக்பர் காலத்தில் எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு மதத்தை ஏற்படுத்தும் முயற்சி நடந்தது.

எல்லா மதங்களிலும் உள்ள தத்துவங்களை தொகுத்து, ‘தீனே இலாஹி’ என்று ஒரு மதத்தை உருவாக்கினார். அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.இப்போது எல்லா மதக்காரர்களும் ஒரு பொதுவான சிவில் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு பொது சிவில் சட்ட அறிவிப்பை செய்திருக்கிறது. ‘தீனே இலாஹி’ எப்படி எல்லோராலும் ஒதுக்கப்பட்டதோ, அதைப் போலவே இன்றைய மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தையும் இந்திய மக்கள் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பொது சிவில் சட்டம் என்பது ஒரு கானல் நீர் - ஒரு மாயை - இல்லாத ஊருக்கு வழியை காட்டும் வீண் முயற்சி என்பதால் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் வீணான காரியத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதே இந்திய மக்களின் கோரிக்கையாகும்.யூனிபார்ம் சிவில் கோடு என்பதற்கு சீரான குடும்ப சட்டம் என்று சட்ட நிபுணர்கள் பொருள் கூறுகிறார்கள்.

நமது மாநிலத்தில் எத்தனை பள்ளிக்கூடங்கள் உள்ளனவோ அத்தனை யூனிபார்ம் டிரஸ் - சீருடைகள் இருக்கின்றன. எல்லா பள்ளிக்கூட மாணவ - மாணவிகள் ஒரே விதமான சீருடை உடுத்த வேண்டும் என்று எந்த ஒரு அறிவாளியும் சொல்ல மாட்டான்.

இந்திய நாட்டில் பல மதங்கள் உள்ளன. சமயசார்பற்ற நாட்டில் மதத்தில் நம்பிக்கை கொள்ளவும், அந்த மதச் சட்டப்படி நடக்கவும் உரிமை இருக்கிறது. எல்லா மதத்தவரும் ஒரேவிதமான குடும்ப சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது எப்படி சட்டப்பூர்வமானதாக அமையும் என்றுதான் கேட்கிறோம்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் ஒரு பெரிய உண்மை புலனாகும்.ஒரே மதத்தில் உள்ளவர்கள் ஒரே விதமான குடும்ப சட்டங்களை பின்பற்றாது இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் உள்ளவர்கள் யாவரும் அந்த மதத்தில் ஒரே விதமான சட்டத்தை பின்பற்றினால்தான் அந்த மதத்தவருக்குள் ஏற்படும் குழப்பம் தீரும் என்பதால்தான் ஒவ்வொரு மதத்திலும் உள்ள குடும்ப சட்டங்கள் - சிவில் கோடு - யூனிபார்மாக - சீரானதாக இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்து மதத்தில் உள்ள குடும்ப சட்டங்கள் ஒரே சீரானதாக இருக்க வேண்டும்; முஸ்லிம் சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஷரீஅத் சம்பந்தப்பட்ட குடும்ப சட்டங்கள் ஒரே சீரானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் உள்ள அவரவர் குடும்ப சட்டங்கள் - சிவில் கோடு ஒரே மாதிரியானதாக - சீரானதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணய சபையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், அதை திசை திருப்பும் வகையில் யூனிபார்ம் என்பதற்கு காமன் என்னும் அர்த்தத்தை திணித்து இன்றைக்கு எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் என்று பேசி மக்களிடையில் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இத்தகைய குழப்பத்தை யாரும் உருவாக்கி இந்திய மக்கள் மத்தியில் பிரிவினை, விரோதம், பகைமை வளர்க்க வேண்டாம் என்று அன்றைக்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களும், மற்றவர்களும் எச்சரிக்கை செய்தார்கள். அந்த எச்சரிக்கையைத்தான் இன்றைக்கும் இந்திய முஸ்லிம் சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான வாழ்க்கைச் சட்டங்களை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கோ, நீதி மன்றத்துக்கோ, பாராளுமன்றத்துக்கோ, பல்கலைக் கழகங்களுக்கோ, சட்டமன்றங்களுக்கோ எவ்வித உரிமையும், அதிகாரமும் கிடையாது. மதச் சட்டம் என்பது அரசியல் சட்டத்துக்கு முந்தையது. ஷரீஅத் சட்டம், இந்திய அரசியல் சட்டம் வழங்கும் சட்டம் அல்ல.

அது 1500 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் சட்டமாகும். அரசியல் சட்டத்தில் உள்ள சட்டம் எதுவும் மதச்சட்டங்களை மாற்றவோ - திருத்தவோ முடியாது. மதச்சட்டங்களில் குறைகள் இருப்பதாக யாரேனும் கூறினால், அந்தந்த மத ஆச்சாரியார்கள், உலமாக்கள், மத அறிஞர்களிடம் தான் அதற்குரிய விளக்கம் கேட்க வேண்டும்.

அண்டை நாடான ஸ்ரீலங்காவில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறைகள் இருப்பதாக கூற்று வந்ததும், ஸ்ரீலங்கா அரசு நீதியரசர் சலீம் மர்சூப் என்னும் நீதிபதியின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்ட கமிஷன் என்ற ஒன்றை நியமித்து அந்த கமிஷனிடமிருந்து பரிந்துரைகளை கேட்டிருக்கிறது.அதுபோன்றதொரு நடைமுறையை - அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொள்வதுதான் சிறந்த ஒரு தீர்வாக அமைய முடியும். அதைவிட்டு ஷரீஅத் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவோம் என்று சூளுரைப்பது, வானத்தில் வலம் வரும் சூரியனை மாற்றி விட்டு இன்னொரு சூரியனை கொண்டு வருவோம் என்று கூறுவது போன்றதாகும்.

அதேசமயத்தில் முஸ்லிம் சமுதாயம் ஷரீஅத் சட்டத்தை பிசகறப் பின்பற்றும் வகையில் தனது மத வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முஸ்லிம்கள் தங்களுக்குள்ள ஷரீஅத் சட்டங்களை சரியாகவும், முறையாகவும் பின்பற்றத் தொடங்கினால் பிற சமுதாய மக்களிடமிருந்து ஷரீஅத் சட்டத்திற்கு விமர்சனம் வராது - மிகுந்த வரவேற்பு வரும். சமுதாய மக்கள் தங்களின் மார்க்கக் கடமைகளை உலமாக்களின் வழிகாட்டுதலில் நிறைவேற்றும் நற்காலத்தை உருவாக்க வேண்டும்.

அதேநேரத்தில் 2008-ல் இந்திய சட்ட ஆணையம் செய்த பரிந்துரைகளை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்பதையும், இங்கே வலியுறுத்தியாக வேண்டும்.1886-ம் ஆண்டின் காஜிகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும். காஜிகள் முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதோடு, திருமண முறிவுகளையும் பதிவு செய்து பாதுகாக்கும் வகையில் காஜிகள் அரசாங்கத்தின் பதிவாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்கள் கட்டுக் கோப்பாகவும், கட்டுப்பாடாகவும் இருப்பதோடு காஜிகள் நிக்காஹ், தலாக் ரிஜிஸ்டர்கள் எனும் நிலை ஏற்படும் போது முத்தலாக் போன்ற பிரச்சனைகளுக்கு சமுதாயத்துக்குள்ளே நல்ல தீர்வுகளை காண முடியும்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,மாநிலத் தலைவர், இ.யூ. முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்