Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 14, 2007
பாளையங்கோட்டையில் ஷரீஅத் சட்ட பாதுகாப்பு மாநாடு பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உறுதி


பாளையங்கோட்டையில் ஷரீஅத் சட்ட பாதுகாப்பு மாநாடு பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உறுதி பாளையங்கோட்டை, நவ.13-திருநெல்வேலி ஷரீஅத் சட்ட பாதுகாப்பு குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வகையில் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் 12-11-2016 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.நெல்லை தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் டி.இ.எஸ். நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் டி.ஜே.எம். ஸலாஹுதீன் ரியாஜி, மேலப் பாளையம் ஹாஜா முயினுத் தீன் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் வர வேற்றார். பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தாளாளர் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி, மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன் லால், மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பழக் கருப்பையா, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலா ளர் ஏ. முஹம்மது ரிழா ஆலிம் ஆகியோர் உரையாற்றினார் கள்.மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் தலைமை வகித்தார். தமிழக சட்டமன்ற உறுப் பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோதர் மொய்தீன், வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், எம். அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட அரசு காஜி எம். முஹம்மது கஸ்ஸாலி ஆலிம், கே.எம்.ஏ. நிஜாம், ஏ. நியமத் துல்லாஹ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.முஸ்லிம் அனாதை நிலைய பொருளாளர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகின், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ் லான் பாகவி, கீழக்கரை கல்லூரி முதல்வர் டாக்டர் சுமையா தாவூத், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பேராசிரி யர் ஆர்.டி. சபாபதி மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-இந்திய நாட்டில் இந்துக் களுக்கு - சீக்கியர்களுக்கு - கிறிஸ்தவர்களுக்கு என தனி சட்டம் இருப்பது போல் முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்டம் உள்ளது. அவரவர் சட்டத்தின்படி மத சமூக கோட்பாடுகளின்படி சகோ தரத்துவமாக - அமைதியாக அனைவரும் வாழ்ந்து வருகி றோம். இதனை கெடுக்க மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. அதற்கு இடம் அளிக்கக்கூடாது. பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஷரீஅத் சட்டத்தைத் தொடர்ந்து பின் பற்றுவோம். மார்க்க விஷயங் களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் ஆலோசனை களை கேட்டு அதனை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.மாநாட்டில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், அமைப்புச் செய லாளர் நெல்லை மஜீத், மாநில சுதந்திர தொழிலாளர் யூனியன் செயலாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம், நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் எல். கே.எஸ். மீரான் மொய்தீன், பாட்டபத்து முஹம்மது அலி, வி.கே. புரம் கானகத்து மீரான், நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் செய்யது சுலைமான், வி.ஏ.எம். இக்பால், வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம்,திருநெல்வேலி தொழில் அதிபர்கள் எம்.கே.எம். முஹம்மது நாகிபு, எம்.கே.எம். முஹம்மது நாஸர், எம்.கே.எம். அபூபக்கர் சேட், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மஹ்மூ துல் ஹசன், காயல்பட்டினம் வாவு அப்துல் ரஹ்மான், வாவு சம்சுதீன், தூத்துக்குடி அப்துல் கனி, கடையநல்லூர் பி.ஏ. செய்யது மசூது, புளியங்குடி முஹம்மது இஸ்மாயில், எம். மைதீன் பிச்சை, தென்காசி துராப்ஷா, என்.எம். அபூபக்கர், எம். அப்துல் அஜீஸ், மேலப்பாளை யம் மொய்தீன் அப்துல் காதர், மணிச்சுடர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, இராமநாத புரம் முஹம்மது யாக்கூப் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பாளை. ஷரீஅத் சட்ட பாதுகாப்பு மாநாட்டு தீர்மானங்கள் தீர்மானம் 1

நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித் துள்ள நமது உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தை மாற்றி, பொது சிவில் சட்டத்தை திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சிகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் வக்ஃபு நிர்வாகம் போன்ற விஷயங்களில் எப்போதும் போல் தொடர்ந்து ஷரீஅத் சட்டத்தை பின்பற்றி நடக்க இம் மாநாடு உறுதி ஏற்கிறது.

தீர்மானம் 2 ஷரீஅத் சட்டம் குறித்து அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் எடுக்கும் அத்துணை முயற்சிகளுக்கும், முழு ஆதர வையும் ஒத்துழைப்பையும் தருவது எனவும், தீர்மானம் 3 மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, சிறுபான்மையின ரின் உரிமைகளையும், நலன் களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்திற்கான உள்ளீடுகளை முழுவதுமாக கைவிடுமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 இந்திய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கல்வி உரிமை எந்த வகையிலும் பாதிக்கப் படாமல் இருக்கவும், சிறு பான்மை கல்வி நிலையங்க ளுக்கு அரசின் நிதியுதவி எப் போதும் போல் தொடரவும் ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 5 வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைந்த திப்பு சுல்தான் போன்ற வரலாற்று நாயகர் களையும், முஸ்லிம் ஆட்சி யாளர்களையும் இழிவுபடுத்திப் பேசி வரும் சங் பரிவார அமைப்புகளை இந்த மாநாடு கண்டிப்பதுடன், சுதந் திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பை எந்தத் திரிபும் இல்லாமல் மத்திய - மாநில பாடப் புத்த கங்களில் இடம் பெறச்செய்யு மாறு பாடத் திட்ட குழுக்களை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.மேற்கண்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்