Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, November 19, 2007
பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்புக்கு காவல்துறை தடை விதிப்பதா? தமிழக அரசு தலையிட வேண்டும் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை


பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்புக்கு காவல்துறை தடை விதிப்பதா? தமிழக அரசு தலையிட வேண்டும் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை சென்னை, நவ.19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

முஸ்லிம்கள் தினமும் 5 வேளை இறைவனை தொழுது வணங்கி வருகின்றனர். இத் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பள்ளி வாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் செய்யப்படுகிறது. ஒரு வேளைக்கு இரண்டு நிமிடங்கள் என்றால் ஐந்து வேளைக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே தினமும் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைக்கப்படுகின்றனர். இவை பள்ளிவாசல்களில் உயரமான மினராக்களில் பொருத்தப் பட்டிருப்பதோடு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள 70 டெசிபல் அளவிலான குறைந்த சப்தத்தில் தான் தொழுகைக்கான அழைப்பு பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.

கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளில் தொழுகைக்கான பாங்குகள் சொல்லக்கூடாது என காவல்துறை தொடர்ந்து கெடுபுடி செய்து வருகின்றனர். இந்த ஒலிபெருக்கிகளை அகற்றிவிட வேண்டும் எனவும் தமிழகத்தில் பல பகுதிகளில் பள்ளிவால் ஜமாஅத்தினர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த செயல் சமுதாயத்தினருக்கு வேதனை அளிக்கின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற கட்சி தலைவரும், மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 01-09-2016 சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர பேரவைத்தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அலுவல் அதிகமாக இருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கவனத்திற்கு எடுத்து சென்றதையடுத்து முதல்வர் தனிச்செயலாளரிமும், பிற்படுத் தப்பட்ட மற்றும் சிறுபான்மை துறை அமைச் சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோரிடம் எடுத்துரைத்தார்.

அனைத்து பள்ளிவாசல்களி லும் 70 டெசிபல் சப்த அளவி லான ஒலிபெருக்கிகளே பயன் படுத்தப்படுகின்றது என்பதை ஒலிபெருக்கி பொறியாளர் (sound engineer) மூலம் உறுதி செய்து அதன் பதிவு ரசீதுடன் காவல் துறையினரிடம் அளிக்கப் பட்டதை தொடர்ந்து கெடிபுடி சென்ற ரமளான் மாதத்தில் நட வடிக்கை நிறுத்தப்பட்டது.

இப்போது தமிழக காவல் துறையினர் மீண்டும் பள்ளி வாசல்களில் பாங்கு அழைப்புக்கு கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி களை பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.

இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது காவல் துறையினர் எப்படி சுற்றறிக்கையை அனுப்பு கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகாதா?

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்பது அல்ல. நாய்ஸ் பொலியூஷன் என்பது தான். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மக்களுக்கு இடை யூறாக வெடிகளை வெடிக்கக் கூடாது என்பது தெரிவிக் கப்பட்டுள்ளது. கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை வைக்கக்கூடாது என்று தெரிவிக்கவில்லை. அதை தயாரிக்க அரசு தடை விதித்திருந் தால் கூம்பு ஒலிபெருக்கிகளை எப்படி தயாரிக்க முடியும்.

எனவே, தமிழக அரசின் உத்தரவை பெற்றுதான் காவல் துறையினர் சுற்றறிக்கை அனுப்பினார்களா? அல்லது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்ற அனுமதியை பெற்றார்களா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். தமிழக காவல்துறை இது போன்ற தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட வேண்டும். தமிழக அரசும் உடனடியாக காவல்துறைக்கு அறிவுறுத்தி இச்செயலை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்படுவோர் நீதி மன்ற வழக்கின் மனு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இணையதளத்தில் (WWW.muslimleaguetn.com) பதிவிறக் கம் செய்யலாம்.

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்