Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, November 19, 2017 29 Safar 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, November 21, 2007
தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வக்ஃபு வாரியம் செயல்பட வேண்டும் ஷரீஅத் சட்ட பாதுகாப்புக்கு துணை நிற்க வேண்டும் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அகற்றக்கூடாது நிதியமைச்சரிடம் பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பொருளாளர் ஷாஜஹான் மனு அளித்தனர்


தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வக்ஃபு வாரியம் செயல்பட வேண்டும் ஷரீஅத் சட்ட பாதுகாப்புக்கு துணை நிற்க வேண்டும் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அகற்றக்கூடாது நிதியமைச்சரிடம் பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பொருளாளர் ஷாஜஹான் மனு அளித்தனர் சென்னை, நவ.21- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தலைமையில் மாநிலப் பொரு ளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் இப்றாஹீம் மக்கீ, அர்ஷத் ஆகியோர் இன்று (21-11-2016) தலைமைச் செயல கத்தில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ், உள்துறை செயலாளர் அபூர்வவர்மா ஆகியோரை சந்திக்க வந்தனர்.

நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அலுவலகத்தில் இல்லாததால், அவரது உதவி யாளர் மூலம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் ஆகியோர் பேசி வருகைக்கான விவரத்தை கேட்டறிந்தார். அப்போது, முஸ்லிம் லீக் குழுவினர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உங்களை சந்தித்து சமுதாயத்தின் கோரிக்கைகள் குறித்து உங்களிடம் பேசுவ தற்கு அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தனர்.

அப்போது, நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், கோரிக்கை மனுவை உதவி யாளரிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள். நான் ஆவன செய்கிறேன் என்று தெரிவித் தார்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் அலுவலகத்துக்கு சென்று அக் கோரிக்கை மனு நகலை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களி டம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கூறியதா வது-

இன்றைக்கு தலைமைச் செயலகத்துக்கு நானும், எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் வருகை தந்து நிதியமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரிடம் எங்களின் கோரிக்கை மனுவை அளிக்க வந்தோம். நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அலுவலகத்திற்கு சென்றோம். அவர் இல்லை. உடனே அவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார் . பின்னர் அதனை பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கியை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

எங்கள் கோரிக்கை என்ன வென்றால் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மஹல்லாக்கள், பள்ளிவாசல்கள் உள்ளது. தொழுகைக்கான அழைப்பு பணிக்கு உயரமான மினராவில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதனை அகற்ற வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டார்கள். அப்போது ரமளான் நோன்பு மாதம். நான் சட்டமன்றத்தில் முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்.

பின்னர் அது கைவிடப் பட்டது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்போது மீண்டும் தமிழக காவல்துறை தலைமை நிலையத்திலிருந்து ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என்று சுற்றறிக் கையை அனுப்பியுள்ளனர்.

நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை. ஒலி அளவை 70 டெசிபல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தி ருக்கிறது. காவல் துறையின் நடவடிக்கை நீதிமன்றத்தையே அவமதிப்பது போன்று உள்ளது.

பொது சிவில் சட்டம்

இந்தியா முழுவதும் மதச்சார்பின்மைக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்த பாஜ.க. அரசு முயல் கிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அதே போன்று தமிழக அரசும், அ.தி.மு.க கட்சியும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.

தமிழக வக்ஃபு வாரியம்

வக்ஃபு வாரியத்திற்கு கடந்த ஒரு வருடமாக தலைவர் தேர்ந் தெடுக்கப்படாமல் காலியாக உள்ளன. இதனால், வக்ஃபு வாரிய பணிகள் முட.ங்கிப் போய் உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக வக்ஃபு வாரியத்திற்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்திருக்கி றோம்.

மேலும், சட்டமன்ற விடுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து செல்லவோ முடிய வில்லை. இதுகுறித்து ஏற்கனவே சென்னை மாநக ராட்சிக்கு சட்டமன்ற செயலா ளர் அறிவுறுத்தியும் மாநக ராட்சி அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது குறித்தும் இன்று மீண்டும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன்.

இக்கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் அலுவ லகத்திலும் அளித்துள்ளோம்.

இவ்வாறு கே.ஏ..எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்