Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, November 19, 2017 29 Safar 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, November 26, 2007
இஸ்லாமிய குடும்ப சட்டத்தில் மாற்றம் வேண்டுமானால் முஸ்லிம் சமுதாயமே மாற்றிக் கொள்ளும், நீதிமன்றம் - அரசு தலையிட உரிமை இல்லை திருச்சி கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேச்சு


இஸ்லாமிய குடும்ப சட்டத்தில் மாற்றம் வேண்டுமானால் முஸ்லிம் சமுதாயமே மாற்றிக் கொள்ளும், நீதிமன்றம் - அரசு தலையிட உரிமை இல்லை திருச்சி கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேச்சு திருச்சி நவ - 26 திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை, திருச்சி மாவட்ட அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங் கள், முஸ்லிம் அரசியல், அமைப்பு கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த நினைக்கும் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியிலான அரசை கண்டித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் வெள்ளிக் கிழமை மாலை, மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மவ்லவி முப்தி உமர் பாரூக் மழாஹிரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மவ்லவி முஹம்மது ஷரீப் யூசுபி வரவேற்று பேசினார். பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் இதயம் போல் விளங்குவது திருச்சி மாநகரம். இந்த மாநகரத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக் களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்காக, மாநில மஹல்லா ஜமாஅத்தை ஒன்று திரட்டி, அதற்கு மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் துணை நின்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், தோழர்கள் துணை நின்று ஒரு மாபெரும் கூட்டத்தை மாநாடு போல் திரட்டி இருக்கின்றார்கள். இதுவே மிகப்பெரிய வெற்றிக் கான அறிகுறி ஆகும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தான் கொண்டு வந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற கொள்கையை கொண்டு வந்து நாட்டு மக்கள் வரவேற்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதிலை எதிர்பார்த்தார். அவ ருக்கு 5இலட்சம் பேர் பதில் அளித்தார்கள் என்றும் அதில் ஏறத்தாழ 92 சதவீதம் பேர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்றும், அதன் படி எனக்கு பெரும்பாலானோர் ஆதரவு தருகிறார்கள் என்றும் கூறுகிறார். அவர் விவாதப்படியே கூறினால் இந்தியாவிலே இன்றைய தினம் எல்லா மாநிலங்களிலும், மாநகரங்களிலும், தமிழ்நாட் டிலும் உள்ள எல்லா தலைநகரங் களிலும், மாவட்டங்களிலும், இது போன்ற பொதுக் கூட்டங் கள் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்திலே 27 இலட்சம் பேர் மக்கள் தொகை இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 1இலட்சத்து 96 ஆயிரம் பேர் அதில் பாதிபேர் பெண்கள் மீதி பேர் ஆண்கள். இப்பொழுது திருச்சி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆண்களில் ஏறத்தாழ 75 சதவீதம் பேர் இங்கே வந்திருக்கிறோம். 5 இலட்சம் பேரிடத்திலே கருத்துக் கேட்டு அதில் 92 சதவீதம் பேர் எனக்கு ஆதரவு அளித்திருக்கிற காரணத் தால் இந்த கொள்கையை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்று சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வதானால் இந்த திருச்சி மாவட்டத்தில் மட்டும் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கூடி நீங்கள் கொண்டு வந்த பொது சிவில் சட்டமும், ஷரீஅத்தில் தலையிடுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த மாவட்டமே கூறுகிறது. இப்படி இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டமும் கூறிய பிறகு நீங்கள் கூறிய கருத்துப் படியே, பொதுமக்கள் கருத்துப்படியே உடனடியாக பொதுசிவில் சட்டத்தை விட்டு விட வேண்டும்.

இந்த ஷரத்து என்ன பிரச்சனை என்றால் 3 பிரச் சனை ஒன்று பொதுசிவில் சட்டம், இரண்டு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை மாற்ற விரும்புகிறது, மூன்றாவது முஸ்லிம்களாகிய நாம் இந்த இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பின்பற்றுவதில் சரியாக இருக்கிறோமோ, இல்லையா என்பது தான் பிரச்சனை. இந்திய அரசியல் சாசனத்திலே 395ஆர்டிகல்ஸ் இருக்கிறது. அதில் ஒரே ஒரு ஷரத்து என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரே விதமாக பொது சிவில் சட்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். அரசியல் நிர்ணய சபையில் இந்த வாதம் வந்த பொழுது பொது சிவில் சட்டம் என்ற வசனத்திற்கு அன்று கொடுக்கப்பட்ட விளக் கம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள சட்டங்கள் ஒரே மாதிரி யாக பின்பற்றக் கூடிய வகையில் ஒரே விதமான சட்டங்களை தொகுத்து கொடுக்க வேண்டும்.

இந்தியாவிலே பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே 365சமஸ் தானங்கள் இருந்த ராஜ்யம், அந்த ராஜ்யம் இருந்த மக்கள் முஸ்லிம்களாக இருந்த வர்களுக்கு இஸ்லாமிய சட்டம் சரியாக சொல்லப்படவில்லை. இதனாலே பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா முழுவதும் வந்த பிறகு இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் முழுவதையும் பின்பற்ற வேண்டும். அது தான் சட்டம் வந்தது.1937, 19239 முந்தி வந்த சட்டங்கள் என அனைத்தும் அது தான். இப்பொழுது என்ன பிரச்சனை என்றால் முஸ்லிம் களுக்கு உள்ள, ஒரே மாதிரியான சட்டம், இந்துக்களுக்கு உள்ள ஒரே மாதிரியான சட்டம், கிருத்து மதத்திற்கான ஒரே மாதிரியான சட்டம் என்று தேவையில்லை. எல்லா சட்டங்களையும் ஒரே மாதிரியாக மாற்றி குழம்பாக மாற்ற வேண்டும் என்று கூறுகி றார்கள். இது எப்படி சாத்தியம்.

அக்பர் காலத்திலே எல்லா மதங்களுக்கும் ஒரேசட்டம் வேண்டும் என்று தீனே இலாஹி என்று கொண்டு வந்தார். இது எல்லா மதங்களுக்கான முக்கிய நல்ல சட்டங்களை தொகுத்த ஒரு சட்டம். ஆனால், தீனே இலாஹியை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் உள்ள இசைக்கலைஞர், நடனம் ஆடுபவர்கள், நீதிமன்ற விகட கவி என்றவர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். அதை அறிஞர்கள் யாரும் ஏற்கவில்லை. முதன்மை தளபதி மான்சிங்கை அழைத்து பொது சட்டத்தை கூற அவர் ஏற்கவில்லை.எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி என்றால் எல்லாரும் ஒரே கட வுளை தான் வணங்க வேண் டும். பொதுசிவில் சட்டம் எனும் ஒரே போர்வையில் எல்லா மதத் தினருக்கும்ஒரே சட்டத்தை புகுத் துவது கண்டனத்திற்குரியது. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இஸ்லாமிய சட்ட நெறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்ட நெறிகளை இமாம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண் டும். இந்து சமுதாய சட்டம் வேறு முஸ்லிம் சட்டம் வேறு. எந்த முஸ்லிம் நாட்டிலும் அல்லாஹ் கூறிய கட்டளையையும், நபிக ளார் காட்டிய வழியும் உள்ள, இஸ்லாமிய ஆட்சி இல்லை. வேறு நாடுகளில் மாற்று கிறார்கள் என்று இந்தியாவில் மாற்றம் கொண்டு வருவது கண்டனத்திற்குரியது.

இஸ்லாமிய குடும்ப சட்டத்தில் மாற்றம் வேண்டு மானால் முஸ்லிம் சமுதாயமே மாற்ற வேண்டும். இது தான் இந்த நாட்டின் சட்டம். நேரு காலத்தில் இருந்து இது தான் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பது இஸ்லாமியர்களை அழிக்கும் ஒரு மாபெரும் முயற்சி இது தடுக்கப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது.

இஸ்லாமிய சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டு மென்றால், எந்த அரசும், நீதிமன்றங்களும் எந்த நீதிபதியும் மாற்றம் செய்ய முடியாது. அதை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும். அதையும் கூட உலமாக்கள் தான் ஷரீஅத் சட்டத்தை பொறுத்தவரை மாற்றம் செய்ய அவர்களுக்கு தான் தார்மீக உரிமை இருக்கிறது. அடுத்த நாட்டில் உள்ள இலங்கையில் ஒரு முஸ்லிம் நீதிபதி தலைமையில் ஏதாவது திருத்தம் வேண்டுமென்றால் தலைமை ஏற்பாடு செய்து, அறிக்கை கேட்டு அதை இன்று வழங்கி இருக்கிறார்கள். அவ்வாறே நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும். பொது சிவில் சட்டமும், இஸ்லாமிய ஷரீஅத்தில் மாற்றம் செய்வது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி..எம்ஹாஷிம், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம். கே. ஹபீபுர் ரஹ்மான், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்முனைவர்எம்.ஏமுஹமது நிஜாம், தெற்கு மாவட்ட பொருளாளர் ஹுமாயூன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்கறி ஞர் ஜி.எஸ்.ஏமன்னான், தாசில் தார் அம்ஜத் இப்ராஹிம், கவிஞர் சையத் ஜாபர், வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ஹெச்அன்சர் அலி, தெற்கு மாவட்ட இளைஞர்அணி செய லாளர் எம்.கேஅமீரூத்தீன், தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் கே.பிகாதர்ஹு சைன், அப்துல் முத்தலிப், முஹமதுபாரூக், தெற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல்சலாம், வடக்கு மாவட்ட செயலாளர் முஹமது நிஜாமுத்தீன், வடக்கு மாவட்ட பொருளாளர் லியாகத் அலி, தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி செய லாளர் சையத் ஹக்கீம், தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர் பரக்கத் அலி, மணப்பாறை தொகுதி அமைப்பாளர், மவ்லவி முஹமது மீரான், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்சாதிகுல்அமீன், தெற்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான்,

மணப்பாறை தொகுதி துணை அமைப்பாளர் முஹமது இஸ்மாயில், மாணவரணி ராஃபி, திருவெரும்பூர் தொகுதி அமைப்பாளர் அப்துல் கலீல், திருச்சி கிழக்கு தொகுதி அமைப்பாளர் ஷம்சுதீன், துறையூர் தொகுதி அமைப் பாளார் மவ்லவி அப்பாஸ், ஆலங்குடி நகர தலைவர் அமானுல்லாஹ், அன்னவாசல் நகர செயலாளர் முஹமது இப்ராஹீம், துணைதலைவர் இப்ராஹீம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை ஜமாஅத்துல் உலமா சபை மாநில செய்தி தொடர்பாளர் மவ்லவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி தொகுத்து வழங்கினார். ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளர் மவ்லவி முஹம்மது சிராஜுதீன் பாஸில் மன்பஈ நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்