Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, November 30, 2007
மதுரையில் ஷரீஅத் பாதுகாப்பு மகளிர் மாநாடு*2017 மார்ச்-10 இ.யூ. முஸ்லிம் லீக் 70 வது நிறுவன தின மாநில மாநாடுபொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம்


மதுரையில் ஷரீஅத் பாதுகாப்பு மகளிர் மாநாடு*2017 மார்ச்-10 இ.யூ. முஸ்லிம் லீக் 70 வது நிறுவன தின மாநில மாநாடுபொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.30- பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை கைவிட மத்திய அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாக குழுக் கூட்டம் 29.11.2016 செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஸில்,36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம். கனி சிஸ்தி கிராஅத் ஓதினார்.

கீழ்க்கண்டவர்கள் மறை வுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வழுத்தூர் லப்பத்தை ராஜ் ,

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய துணைத்தலைவர் மீரட் இக்பால் அஹமது மனைவி ,

காயல்பட்டினம் நகர இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் வாவு கே.எஸ். முஹம்மது நாசர் ,

இ.யூ.முஸ்லிம் லீக் நெல்லை பேட்டை நகர செயலாளர் திவான் மைதீன்,

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன்ஷா ,

மணிச்சுடர் நாளிதழ் மேலாளர் முஹம்மது முகைதீன் மனைவி சவுதா அம்மாள் ,

இதயவாசல் ஆசிரியரும், எழுத்தாளருமான அய்யம் பேட்டை கவிஞர் இக்பால் ராஜா ,

இ.யூ.முஸ்லிம் லீக் முதுபெரும் பிரமுகர் பாம்பு கோவில் சந்தை வி.ஏ. செய்யது பட்டாணி சாகிப்,

எழுத்தாளர் இப்னு அப்பாஸ் (எ) காயல் ஏ. லெப்பை சா ,

காயல் ஐக்கிய பேரவை ஹாங்காங் ஆலோசகர் கதீப் ஏ.ஜே. மீராசாகிப்,

இ.யூ.முஸ்லிம் லீக் கரூர் மாவட்ட தலைவர் பள்ளப்பட்டி எம். கலீலுர் ரஹ்மான் தாயார் உம்மு ஹபீபா,

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ தாய் மாமா காயல் எம்.எம். அப்துல் அஜீஸ்,

வந்தவாசி இ.யூ.முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் பி.ஏ.கே.எம். ருக்னுத்தீன் ,

பாளை சதக்கத்துல்லா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக்,

இ.யூ.முஸ்லிம் லீக் எஸ்.டி.யூ. மாநில தலைவர் திருச்சி ஜி.எம். ஹாஷிம் சகோதரி மரியம் பீவி, ஆகியோரின் மஃபிரத்திற்கு துஆ செய்யப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முஸ்லிம் மாணவர் பேரவை

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) யின் தேசிய அமைப்புக் கூட்டம் வரும் 2016 டிசம்பர் 17 சனிக்கிழமையன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறவிருப்பதால், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இருநூற்று ஐம்பது மாணவர் பிரதிநிதிகளின் பயணம், மற்றும் செலவினங்களுக்கு தமிழ்நாடு மாநில கமிட்டி போதிய நிதியுதவியைச் செய்து கொடுத்து, பாலக்காடு எம்.எஸ்.எஃப் தேசிய கன்வென்ஷன் எல்லா வகையிலும் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவது என முடிவு செய்யப்படுகிறது.

இந்திய யூனியன் மகளிர் லீக் -ஷரீஅத் சட்ட பாதுகாப்பு பெண்கள் மாநாடு

வருகின்ற 2016 டிசம்பர் 26 திங்கள் கிழமை மதுரை மாநகரில் நடைபெறவிருக்கும் இந்திய யூனியன் மகளிர் லீக்- ஷரீஅத் சட்ட பாதுகாப்பு பெண்கள் மாநாடு மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாநாட் டில் பங்கேற்க முன்வரும் மகளிருக்கு போக்குவரத்து, இருப்பிடம், உணவு மற்றும் வசதிகளைச் செய்தளித்து, மகளிர் லீக் மாநாட்டின் சிறப் பான வெற்றிக்கு எல்லா வகையி லும் ஒத்துழைப்பு கொடுக்கு மாறு மாவட்ட நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுகொள்கிறது.

நிவாரண நிதியும், நிவாரண நிதிக்குழுவும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தமிழ்நாடு நிவாரண நிதி (ஐருஆடு கூசூ சுநுடுஐநுகு குருசூனு) என்னும் பெயரில் 2015 டிசம்பர் 5ம் தேதி சென்னை, முத்தியால் பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துவக்கப்பட்டுள்ள கணக்கில் நிதி சேர்ப்பதற்கு ஒவ்வொரு ரமளான் மாதத்திலும் நிவாரண நிதி சேர்ப்பு வாரம் அனுசரிப்பது ஐருஆடு கூசூ சுநுடுஐநுகு குருசூனு எனவும், ஆண்டு முழுவதிலும் நிவாரண நிதியை அதிக அளவில் சேர்ப்பதற்குத் தொடர் முயற்சி செய்வது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

(ஐருஆடு கூசூ சுநுடுஐநுகு குருசூனு) ஐ.யு.எம்.எல்.டி.என். நிவாரண நிதியிலிருந்து கீழ்க்கண்டவை களுக்கு நிதியுதவி வழங்கு வதற்கு முடிவு செய்யப்படுகிறது.

1) இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் மக்களின் நலவாழ்வுக்கு நிதியாகவோ, பொருளாகவோ, கட்டுமானப் பணிகள் மூலமாகவோ உதவிகள் வழங்கலாம்.

2) தமிழகத்தில் உள்ள ஆண், பெண் யாராக இருப்பினும், அவர்களின் மருத்துவச் செலவு, படிப்புச் செலவு, திருமணச் செலவு, ஏழை எளிய குடும்பங்களின் பராமரிப்புச் செலவு இறையருள் இல்லக் கட்டுமானச் செலவு போன்றவற்றுக்கு இந்த நிதியிலிருந்து உதவிகள் தரலாம்.

3) உதவிகள் தருவதற்கு நிவாரணக் குழுவின் பரிந்து ரையின் அடிப்படையிலோ, உதவி கோருவோரின் தனிப் பட்ட விண்ணப்பித்தின் அடிப் படை யிலோ இந்த நிதியிலிருந்து உதவிகள் புரியலாம்.

4) இந்த நிதியிலிருந்து வழங்கப் பெறும் உதவிகள் யாவும் காசோலைகள் மூலமே பயனாளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

5) நிவாரண நிதியிலிருந்து உதவிகள் வழங்குவதற்குரிய குழு ஒன்று எப்பொழுதும் செயல்பட்டு வரும். இதற்கு நிவாரண நிதியுதவிக்குழு எனப் பெயர் வழங்கும். மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளாக உள்ளவர்கள் மட்டுமே இக்குழுவில் உறுப்பினராக இருப்பார்கள். மாநில நிர்வாகிகளாக உள்ள காலம் வரைக்கும் இந்தக் குழு உறுப்பினரின் பொறுப்பு நீடிக்கும்.

6) ஐ.யு.எம்.எல்.டி.என். நிவா ரண நிதியுதவிக் குழுவில் மாநில தலைவரால் நியமிக்கப்படுகின்ற கீழ்க்கண்டவர்கள் உறுப்பினரா கப் பொறுப்பு வகிப்பார்கள்.

அ) ஜனாப் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் (கன்வீனர்)

ஆ) ஜனாப் எம். அப்துல் ரஹ்மான்

இ) ஜனாப் மில்லத் முஹம்மது இஸ்மாயில்

ஈ) ஜனாப் கே.எம். நிஜாமுதீன்

உ) ஜனாப் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ

மாநிலத் தலைவரும், மாநில பொதுச்செயலாளரும் இக்குழுவின் எக்ஸ் அபீஸியோ உறுப்பினர்கள் ஆவார்கள்.

7) உதவிகள் செய்வதற்கு முன்பு நிவாரண நிதியுதவிக் குழு கூடி, உதவிகோரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் செய்யப்படும் உதவிக்கான பரிந்துரைகள் யாவும் மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னரே நிதியுதவிக்கான காசோலைகள் பயனாளிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

8) நிவாரண நிதிக்குழுவின் வரவு, செலவு மற்றுமுள்ள விவரங்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழுவின் முன் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலை பெற வேண்டிய பொறுப்பு நிவாரண நிதிக்குழுவின் கன்வீனருக்கு உள்ளதாகும்.

தேர்தல் நிதியும் நிர்வகிக்கும் குழுவும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் தேர்தல் நிதி திரட்டவும், தேர்தல் நிதிக்கென்று தனி கணக்கு ஒன்றை வங்கியில் துவங்கவும் 21-10-.2009 அன்று திருச்சி அரிஸ்டோவில் அமைந்துள்ள டைமண்ட் ஹாலில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் 2016 ஜனவரி 22 தேதியில் சென்னை மண்ணடி ஆந்திரா வங்கியில் (ஐருஆடு கூசூ நுடுநுஊகூஐடீசூ குருசூனு) தேர்தல் நிதி என்னும் பெயரில் கணக்கு துவங்கப்பட்டது.

இது நாள் வரை நடைபெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற-சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டட வேட்பாளர்களே தேர்தல் செலவீனங்களுக்கு பொறுப் பேற்று தலைமையின் வழிகாட்டு தலோடு களம் கண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் (ஐருஆடு கூசூ நுடுநுஊகூஐடீசூ குருசூனு) கணக்கில் அவ்வப் போது தேர்தல் நிதி திரட்டவும், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிமன்ற தேர்தலின் போது கட்சியின் சார்பில் செய்யப்படும் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர் களுக்கு கட்சியின் சார்பில் வழங்கப்படும் தேர்தல் நிதிகள் போன்றவற்றை கண்காணிக்கவும். தேர்தல் காலங்களில் தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களை முறைப்படுத்தவும், தேர்தல் நிதிக்குழு உருவாக்கப் படுகிறது.

இந்த தேர்தல் நிதிக்குழு வில் மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளருடன், மாநில தலைவரால் மாநில நிர்வாகிகளிலிருந்து நியமிக் கப்படும் கீழ்வரும் ஐந்து உறுப் பினர்கள் இடம் பெறுகிறார்கள்.

அ) ஜனாப் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் (கன்வீனர்)

ஆ) ஜனாப் எம். அப்துல் ரஹ்மான்,

இ) ஜனாப் எஸ்.எம். கோதர் மைதீன்

ஈ) ஜனாப் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ

உ) திரு ஜீவகிரிதரன்

தேர்தல் நிதிக்குழுவின் முக்கியமான பணிகளும், கடைமைகளும் பின்வருமாறு:-

1. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒவ்வொன்றுக்கும் முன்னதாக இக்குழு கூடி தேர்தல் நிதி திரட்டும் பணியை துவங்கிட வேண்டும். தேர்தல் நிதி அளிப்போரின் பெயர் பட்டியலை மணிச்சுடர் நாளேட்டில் தொடர்ந்து வெளியிடுவதுடன் அத்தொகை அனைத்தும் வங்கியில் செலுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

2. மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் ஒத்துழைப் போடு தேர்தல் நிதி திரட்டு வதற்கு சமுதாய புரவலர்களை அணுகுவதும் இக்குழுவின் பணியாகும்.

3. தேர்தல் காலங்களில் கட்சி சார்பாக செய்ய வேண்டிய செலவுகளையும், வேட்பாளர் களுக்கு கட்சி சார்பில் தரப்படும் தேர்தல் செலவுக்கான தொகையையும் நிர்ணயம் செய்வதற்கு இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

4. தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படும் வரவு, செலவு அனைத்தும் வங்கி கணக்கு மூலமே நிகழ்த்தப்பட வேண்டும்.

5. வரவும், செலவும் குழுவின் முடிவுகளும் தேர்தல் நிதிக்குழுவுக்குள்ள மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.

6. ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் அந்த தேர்தலில் ஏற்பட்ட கட்சியின் வரவு, செலவு கணக்குகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அதன் ஒப்புதலை பெற வேண்டிய பொறுப்பு தேர்தல் நிதிக்குழுவின் கன்வீனருக்கு உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

ஜனாப் கே.டி. கிஸர் முஹம்மது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தீர்மானங்களுக்கும், முடிவுகளுக்கும் விரோதமாகவும், தலைமைக்கு எதிராக அவதூறு களையும், பொய்யுரைகளையும் பரப்பியும், மாநில பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பொய் யான தகவல்களை தந்து கடிதங்கள் எழுதியும், இயக் கத்தின் நிர்வாகிகள் மீது புழுதி வாரி தூற்றியும் செயல்பட்டு கட்சி கொள்கைகளுக்கும், கட்டுப்பாட்டுக்கும் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் உறுப்பினர் என்ற தகுதியில் கட்சியில் அவர் வகித்து வந்த பதவி பொறுப்பு களிலிருந்தும் தற்காலிமாக நீக்கி அறிவிப்பு செய்துள்ள தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையை இந்த நிர்வாக குழுக் கூட்டம் ஏகமனதாக ஏற்று வரவேற்கிறது.

கட்சி விரோத செயல்பாடு களில் ஈடுபடுவோர் மீது தயை தாட்சின்யம் இல்லாமல் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமைக்கு இந்த கூட்டம் முழு ஒத்துழைப்பு தொடர்ந்து தருவதற்கு உறுதியேற்கிறது.

2017 மார்ச் 10 வெள்ளிக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 70-வது ஆண்டு விழா

2017 மார்ச் 10ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு துவங்குகிறது அன்றைய தினத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு பாடு பட்டவர்களுக்கு சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரலாறு படைத்த தியாகி களுக்கு காயிதே மில்லத் விருதுகள் வழங்கியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கொள்கைகளை விளக்கும் மாபெரும் அரசியல் மாநாட்டை தென் மாவட்டம் ஒன்றில் நடத்தவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

மாநாட்டு வரவேற்பு குழு உறுப்பினர் கட்டணமாக ரூ. 1000 நிர்ணயிக்கப்படுகிறது. மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

இணையதள நண்பர்கள் சந்திப்பு

இளைஞர்களின் இணைய தள பயன்பாட்டை முறைப் படுத்தவும், மேம்படுத்தும் வகையில் அனைவரையும் ஒருங் கிணைத்து ஜனவரி மாத இறுதியில் இணையதள நண்பர் கள் சந்திப்பை நடத்து வது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

அரசியல் தீர்மானம்

1. முஸ்லிம் தனியார் சட்டம் பாதுகாத்தல்

மத்திய அரசு பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதிலும், இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் தாங்கள் விரும்புகிற வகையில் திருத்தம் செய்ய முனைவதிலும் அதிதீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இது, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜீவாதார உரிமைகளுக்கும், மத உரிமைகளுக்கும் முரணான தாகும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்திருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 44 பொதுசிவில் சட்டம் பற்றி பேசுவதால், அதனைக் கொண்டு அரசும், நீதிமன்றமும் சிறுபான்மை யினரின் மத உரிமையைப் பறிக்கும் போக்கில் கருத்துக்கள் தெரிவிப்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறது.

44வது ஷரத்தை நீக்கக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி, இந்திய ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைத்து, இந்த ஷரத்து நீக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் வந்துள்ளது.

மத்திய அரசு, இந்த 44வது ஷரத்தை இந்திய அரசியல் சட்ட வழிகளில் இருந்து நீக்குவதோடு, பொதுசிவில் சட்டம் கொண்டுவரும் முயற் சியை கைவிடுமாறு இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக் கம், பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமையான தத்துவங்களை நிலை நிறுத்துவதற்கு குறுக்கே நிற்கும் இந்த பொதுசிவில் சட்டம் என்னும் பிரச்சாரத்தை யும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

2. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டுகோள்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி யில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி கொள்கை, ஏற்ற தாழ்வற்ற பொருளாதார வளர்ச்சி, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி போன்ற அருமையான கொள்கைகள் நிலைபெற பாடுபட முடிகிறது. இந்த அணுகுமுறையை தமிழகத்திலே உள்ள ஜனநாயக ,சமயச்சார்பற்ற, சமூக நீதி கொள்கைகளை பின்பற்றிவரும் அரசியல் இயக்கங்களும், பின்பற்ற முன் வருமானால் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியை வலுப்பெறச் செய்ய முடியும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பினை வேண்டு கோளாக விடுவதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில நிர்வாக குழு தனது ஜனநாயக கடமையாக கருதுகிறது. 3. ரூபாய் நோட்டு பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க வேண்டும்

இந்திய பிரதமர் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் இந்திய பொருளா தாரமே நிலை குலைந்து, சீர்குலைந்து தடுமாறி, திசை தெரியாமல் குழம்பும் நிலைக்கு தள்ளப் பட்டியிருக்கிறது. சாதாரண சாமான்ய மக்கள் ஏழைகள், அன்றாடம் காட்சிகள், விவசாயிகள், தொழிலாளிகள், சிறுகுறு வர்த்தகர்கள், தெருவோர கடைக்காரர்கள், கூலி வேலை செய்வோர், இல்லத்தரசிகள் போன்ற அனைத்து தரப்பினரும் பொருளாதார சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி அவதிக்கு ஆளாயிருக் கிறார்கள். தொடர்ந்து அகால மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்ற செய்தி நாட்டு மக்களின் நெஞ்சில் நெறிஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது.

கள்ள நோட்டு, கறுப்புப் பணம், ஊழல் பணம், வரி ஏய்ப்பு, அன்னிய நாடுகளில் சட்ட விரோத முதலீடு போன்றவற்றை தடுப்பதற்கு பிரதமர் செய்த பொருளாதார திட்டத்தால் பெரும்பாலான மக்கள் பணப்பட்டுவாடு இல்லாமல் பரிதவிக்கும் நிலையே மிஞ்சியிருக்கிறது. இந்த அவதியிலிருந்தும், வேதனை யிலிருந்தும் மக்களை விரை வாக பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தினமும் பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சினையை கருத்தில் கொண்டு ரூ. 500, ரூ. 1000/- ஆகிய நோட்டுக்கள் 2016 டிசம்பர் 30 வரை மட்டுமே சில வரையரைக்குள் செல்லு படியாகும் என்ற கால அவகாசத்தை நீடிப்பு செய்ய வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் நன்றி கூறினார்.

கூட்டம் துஆவுடன் முடிவு பெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் பேட்டை எஸ்.எம். கோதர் மொய்தீன் (எக்ஸ்.எம்.எல்.ஏ), அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன், திருப்பூர் பி.எஸ். ஹம்சா, சென்னை எஸ்.எம். கனிசிஸ்தி,

மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆம்பூர் எச். அப்துல் பாசித் (எக்ஸ்.எம்.எல்.ஏ), வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன்,

மாநில துணைச்செயலாளர் கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், காயல்பட்டினம் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, கூடலூர் எம்.ஏ. ஸலாம், மேட்டுப்பாளையம் க்யூ. அக்பர் அலி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யூ.) மாநில தலைவர் திருச்சி ஜி.எம். ஹாஷிம், மாநில மகளிர் அணி தலைவர் பேராசிரியை ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான், மாநில இளைஞர் அணி (எம்.ஒய்.எல்.) செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் (எம்.எஸ்.எப்.) எம். அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்