Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, December 9, 2007
பைத்துர் ரஹ்மா திட்டத்தின் மூலம் கடையநல்லூர் தொகுதியில் 4-வது இறையருள் இல்லம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார்


பைத்துர் ரஹ்மா திட்டத்தின் மூலம் கடையநல்லூர் தொகுதியில் 4-வது இறையருள் இல்லம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் கடையநல்லூர், டிச. 08- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பைத்துர் ரஹ்மா திட்டத்தின் மூலம் கடையநல்லூர் தொகுதியில் நான்காவது இறையருள் இல் லத்தை தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மோகிதீன் திறந்து வைத்தார்.நிலம் இருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில கிளையின் சார்பில் மறைந்த தலைவர் செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் நினைவாக பைத்துர் ரஹ்மா திட்டத்தின் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட இறையருள் இல்லங்கள் சாதி - மதங்களை கடந்து அனைத்து மக்களுக்காக தாய்ச் சபையின் சார்பில் அர்ப்பணிக் கப்பட்டு வருகிறது.

கடலூர்

இறையருள் இல்ல திட்டம் தமிழகத்திலும் நடை முறைப்படுத்தப்படும் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்திருந்தார்கள். கேரள முஸ்லிம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி) சார்பில் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட முஸ்லிம் லீக் வழி காட்டுதலோடு இறைய ருள் இல்லங்கள் கட்டிக் கொடுக் கப்பட்டு வருகின்றன.

கடையநல்லூர் தொகுதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கடைய நல்லூர் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் இறையருள் இல்லங்களின் அர்ப்பணிப்பு பணிகளில் கவனம் செலுத் தினார்.

கடையநல்லூர் தொகுதி செங்கோட்டை ஒன்றி யம் கதிரவன் காலணியை சேர்ந்த ஊனமுற்றோர்களான தங்கம் மற்றும் ராஜா முஹம்மது ஆகியோருக்கும் அச்சன்புதூரில் பிரான் ஸிஸ் என இந்து, முஸ்லிம், கிறிஸ் துவர் என மும்மதங் களை சேர்ந்த வர்களுக்கு இறை யருள் இல்லங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார் பில் அர்ப்பணிக்கப்பட்டு சமய நல்லிணத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது.இவர்களில் தங்கம் மற்றும் ராஜா முஹம்மது ஆகியோருக்கு சாப்பாட் டிற்காக தேவையான அத்தியா வசிய உணவுப்பொருட்கள் மாதந்தோறும் கடைய நல்லூர் சட்டமன்ற அலுவலகத்திலி ருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

4-வது இறையருள் இல்லம்

கடையநல்லூர் தொகு தியில் நான்காவது இறையருள் இல்லத்தை கடையநல்லூரில் 04-12-2016 அன்று தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் திறந்து வைத்து அர்ப்பணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ். ஹாஜஹான், மாநில துணை தலைவர் எஸ்.எம்.கோதர் மைதீன் (முன்னாள் எம்எல்.எ.,) மேற்கு மாவட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை செயலாளர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் வி.ஏ.எம். இக்பால், மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், கடையநல்லூர் நகர தலைவர் பி.ஏ. செய்யது மசூது, நகரச் செயலாளர் கே.எம். அப்துல் லத்தீப், நகர பொருளாளர் வி.எம். அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜித் அனைவரையும் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் எஸ். ஏ. இப்ராஹிம் மக்கீ, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ. மஹ்மூதுல் ஹஸன், நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் புளியங்குடி ஏ.அப்துல் வகாப், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் கவிஞர் பி.எம். கமால், முஹம்மது அலி சேயன் இப்ராஹிம், எம்.எஸ். திவான் மைதீன் , மாநில இளைஞர் லீக் துணைச்செயலாளர்கள் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, ஏ. செய்யது பட்டாணி, தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி எம். முஹம்மது அலி, நெல்லை மேற்கு மாவட்ட இளைஞர் லீக் செயலாளர் கே.எம். அப்துல் காதர், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் லீக் செயலாளர் எம். கடாபி, கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்லத்துரை, சேயன் அப்துல் காதர், ஹமீது கடையநல்லூர் நகர நிர்வாகிகள் எம்.எஸ். இஸ்மத், பி.ஏ. பக்கீர் மைதீன், மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, சென்னை மாணவர் பேரவை அமைப்பாளர் ஏ. அபுதாஹிர், கட்டடகலை வடி வமைப்பாளர் சொக்கம் பட்டி ஜாபர், கபீர் உட்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றார்.கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி நன்றி கூறினார். பிலால் மஸ்ஜித் இமாம் எஸ்.எம். முஹம்மது யூசுப் ஆலிம் துஆ ஓதினார்.

தஞ்சை கண்டியூர்

கடையநல்லூர் தொகுதி யில் அர்ப்பணிக்கப்பட் டுள்ள நான்கு இறையருள் இல்லங் களின் மொத்த மதிப்பீடு ரூ. 18 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கண்டியூர் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தாய்ச் சபையின் சார்பில் 5 இறையருள் இல்லங்கள் கட்டி கொடுக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்