Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, December 27, 2007
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இஸ்லாமிய கல்வியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் காணாமல் போன மாணவர் நஜீப் அஹமதுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாலக்காட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய மாநாட்டில் தீர்மானம்


ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இஸ்லாமிய கல்வியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் காணாமல் போன மாணவர் நஜீப் அஹமதுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாலக்காட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய மாநாட்டில் தீர்மானம் பாலக்காடு, டிச.20- கேரள மாநிலம் பாலக்காடு டவுன் ஹாலில் 17-12-2016 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.எஸ்.எஃப். (முஸ்லிம் மாணவர் பேரவை) முதல் தேசிய மாநாடு நடை பெற்றது.ஷிஹாப் அலி சுஹைபு கிராஅத் ஓதினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் வரவேற்புரையாற்றினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.எல்.ஏ., தேசிய செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.,எம்.பி. அப்துல் சமது சமதானி, கேரள மாநில செயலாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., தமிழ்மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், வழக்கறிஞர் சம்சுதீன் எம்.எல்.ஏ. முஸ்லிம் யூத் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. பிரோஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்மாநில பொதுச் செயலாளரும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) தேசிய ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., முஸ்லிம் மாணவர் பேரவையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.தேசிய முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் அஷ்ரப் அலி, மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரையாற்றினார்.

கேரள மாநில முஸ்லிம் யூத் லீக் தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் மாநாட்டை பற்றி பேசினார்.தமிழ்மாநில முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் பழவேற்காடு எம். அன்சாரி, கேரள எம்.எஸ்.எப். எஸ். முஷேப் கிலரியூர், தமிழ்மாநில முஸ்லிம் மாணவர் பேரவை இணைச்செயலாளர் முஹம்மது அல் அமீன், எம்.எஸ்.எப் பெண்கள் அணி தலைவி கேரள வழக்கறிஞர் பாத்திமா தெஹ்லியா, ஜார்கண்ட் குஷ்புகுமாரி, வழக்கறிஞர்முதசீர் அஹமது, முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய மாநாட்டில் பல் வேறு மாநிலங்களிலிருந்து 1000த் திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானங்கள்

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் காணாமல் போன நஜீப் அஹமதுவை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு பதவியேற்றதி லிருந்து சிறுபான்மையினர் மீதான குறிப்பாக முஸ்லிம் கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பசு பாதுகாப்பு, தேசிய ஒருமைப் பாடு என்ற போர்வையில் முஸ்லிம்கள், தலித்கள் அதிகம் தாக்கப் பட்டு வருகின்றனர்.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நஜீப் அஹமது என்ற மாணவர் அகில பாரதீய வித்யா பரிஷத் அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் காணா மல் போனார். 60 நாட்கள் கழிந் தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் காவல் துறை சரியான நட வடிக்கை எதுவும் எடுக்க வில்ல. பல்கலைக் கழக நிர்வாகம் நஜீபை தாக்கியவர்களுக்கு பாதுகாப்பு அளித்து நஜீப்பை குற்றவாளியாக வர்ணிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே நஜீபுக்கு நீதி வழங்க மோடி அரசு மறுத்து வருவதை எடுத்து காட்டுகிறது. எனவே, மாணவர் நஜீப் அஹமதுவை தாக்கிய குற்ற வாளிகள் மீது வழக்கு தொடர்வதுடன் நஜீப் அஹமதுவை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான நட டிக்கைகளை அரசாங்கமும், உள் துறை அமைச்சகமும் எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர் பேரவை கொண்டு வந்தது.

சமூக நீதியை நிலை நிறுத்த ரோஹித் சட்டம் அவசியம்

உயர்கல்வி நிலை யங்களில் தலித் மாணவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுவதை சுக்தியோ தோரத் (2007) மற்றும் பாலச்சந்திரா முங்கேகர் (2012) ஆகிய அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமூலா தற்கொலை செய்யப் படும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது தலித்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துக்காட்டுகிறது.தலித்கள் மீதான தாக்கு தல்களுக்கு தீர்வுகாண சமூக நீதிக்கான கூட்டு நடவடிக் கைக்குழு வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம் மாணவர் பேரவையும் இதே கோரிக்கையை விடுத்துள் ளது. உயர்கல்வி நிறுவனங் களில் பயிலும் தலித் மாணவர்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோஹித் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என இந்த கமிட்டி மத்திய அரசை கேட்டுக் கொண் டுள்ளது. உயர் கல்வி நிலையங் களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் அதிகரித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி வருவ தற்கு இந்த கமிட்டி கண்ட னம் தெரிவித்துள்ளது. எனவே ரோஹித் சட்டத்தை கொண்டு வருவது அவசியம். மேற்கண்ட தீர்மானத்தை ஹைதராபாத் பல் கலைக்கழக முஸ்லிம் மாணவர் பேரவை கொண்டு வந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இஸ்லாமிய கல்வியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தல் இஸ்லாமிய கல்வியாளர் கள் மற்றும் கல்வி நிறுவனங் கள் மீது பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக மோடி அரசு தவறாக வர்ணித்து வருகிறது. ஜாஹிர் நாயக் மற்றும் எம்.எம். அக்பர் போன்ற பிரபலமான முஸ்லிம் கல்வியாளர்கள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு களை சுமத்துவதுடன், ஊடகங்களும் விவாதம் நடத்தி வருகின்றன. நமது அரசியலமைப்பு சட்டப்படி ஒவ்வொருவருக் கும் அவரவர் மதத்தை பின்பற்ற மற்றும் பரப்புரை செய்ய உரிமை உள்ளது. அப்துல் நாஸர் மதானீ, ஜக்கரியா உட்பட ஆயிரக்கணக் கான முஸ்லிம் தலைவர்களும், இளைஞர்களும் நேர்மையான மற்றும் துரிதமான விசாரணை நடத்தப்படாமல் இன்னமும் சிறையிலேயே அடைபட்டுக் கொண்டி ருக்கின்றனர்.மோடி அரசாங்கம் தங்க ளது கொள்கைகளை எதிர்ப் பவர்களை சட்ட விரோத நடவ டிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் சிறப்பு ஆயுதப்படை சட்டம் போன்றவற்றின் வாயி லாக அடக்குமுறையை கையா ளுகின்றன. ஆதாரமில்லாத குற்றச் சாட்டுகள் மூலம் இஸ்லா மிய கல்வியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்கு தல்களை இந்த பேரவை கண்டிக்கிறது. இந்த தீர்மானத்தை ஜாவத் பாஸில் எம்.பி. கொண்டு வந்தார்.

சமுதாயத்தை பாதுகாக்க முஸ்லிம் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்

முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்படும் பாஸிச தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் முஸ்லிம் மாணவர் பேரவை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் வாயிலாக நமது அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டியது காலத் தின் கட்டாயம்.கீழ்க்கண்ட செயல் திட்டங் களை போர்க்கால அடிப் படையில் புதிதாக அமைக்கப் பட்ட தேசியக் கமிட்டியை இப்பேரவை கேட்டுக் கொண் டுள்ளது.

1. நாடு முழுவதும் மாநில அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

2. நிதி மற்றும் இதர ஆதாரங் கள் போன்றவற்றின் வாயிலாக அனைத்து உதவி களையும் அளிப்பதற்கு பல்வேறு மாநிலம், மத்தியப் பல்கலைக் கழகங்களில் அமைப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

3. மாணவர் பேரவை என்ற அடிப்படையில் மாணவர் மற்றும் முஸ்லிம்கள் சம்பந்த மான பிரச்சனைகளை இந்த முஸ்லிம் மாணவர் பேரவை திறமையாக கையாள வேண் டும்.

4. இந்த சமுதாயத்தின் பெரும்பான்மையானவர் களுக்கு தங்களது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு செய்திப் பத்திரிகையை உரு வாக வேண்டும்.

5. கல்வி உதவித் தொகை மற்றும் தேவையான பயிற்சி அளித்தல் போன்றவற்றின் வாயிலாக முஸ்லிம் சமுதாயத் தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்கான நட வடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

6 சங்பரிவார் போன்ற அமைப்புகளின் தாக்குதல் களால் முஸ்லிம்களும், தலித் களும் அதிகம் பாதிப்படை கின்றனர். பல்கலைக்கழகங் களில் உள்ள தலித் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு நமது அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்த தீர்மானங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மாணவர் பேரவை செயலாளரால் கொண்டு வரப்பட்டது.

எஸ்.எச்.முஹம்மது அர்ஷத், நன்றியுரை கூறினார்.

செய்யது ஷாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் துஆவுடன் கூட்டம் நிறைவுபெற்றது

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்