Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 11, 2007
சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி


சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி திருநெல்வேலி, ஜன.11 -சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் தனித்தன் மைக்கு ஆபத்து .ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., குறிப்பிட்டார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திரு நெல்வேலி மாவட்ட அலுவ லகத்தில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் தனித் தன்மைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்கிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. மேலும் ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறது. மத்திய அரசின் இந்த தவறுகளை தமிழக அரசும் சுட்டிக் காட்டு வதில்லை.

தமிழக உரிமைகளை மீட்டெ டுக்க நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளவில்லை. எனவே, மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70-வது ஆண்டு விழாவை யொட்டி சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற மார்ச். 10, 11 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் தேசியச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது எம்.பி., தேசியச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., கேரள முன்னாள் அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டி மற்றும் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

மாநாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகியோ ருக்கு சமூக சமய நல்லி ணக்க விருதும், கட்சிக்காக பாடு பட்ட மூத்த தலைவர் களுக்கு காயிதெ மில்லத் பெயரால் விருதும் வழங்கப் பட உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முழுவதிலுமிருந்து இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கூறினார். பேட்டியின் போது, மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாநிலச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ் மாயில், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக் குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, கானகத்து மீரான், நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் எஸ். செய்யது சுலைமான், வி.ஏ.எம். இக்பால், வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, எம். கடாபி, மணிச் சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, தென்காசி எம்.எஸ். துராப்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்