Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 12, 2007
காஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!


காஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.

இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல.

‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.

அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும்.

இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

-கே.எம்.கே.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்