Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, April 17, 2007
கேரள மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 1,71,023 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி தேசியதலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், ஹைதர் அலி தங்ஙள் மாநில நிர்வாகிகள் வாழ்த்துதினர் பா.ஜ.க. டெபாசிட் இழந்து படுதோல்வி


கேரள மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 1,71,023 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி தேசியதலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், ஹைதர் அலி தங்ஙள் மாநில நிர்வாகிகள் வாழ்த்துதினர் பா.ஜ.க. டெபாசிட் இழந்து படுதோல்வி மலப்புரம், ஏப்ரல், 17- கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 1,71,023 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ. அஹமது சாகிபின் மறைவையொட்டி கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 12.04.2017 அன்று நடைபெற்றது. மலப்புரம் இடைத்தேர்தல்

இத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யூ.டி.எப்.) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஏணி சின்னத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி சாகிப் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.டி. பைசல், பி.ஜே.பி. சார்பில் என். ஸ்ரீபிரகாஷ் மற்றும் பி.பி.ஏ. ஷாகிர், குஞ்ஞாலிக்குட்டி குலம்பில் பதின் ஜரிக்காரா, முஹம்மது முஸல்லியா, முஹம்மது பைசல், ஏ.கே. ஷாஜி, கே. சாஜிமோன் ஆகிய ஆறு சுயேட்சை முஸ்லிம் வேட்பாளர் களும் போட்டி யிட்டனர்.

பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிபை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.

பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிப் அபார வெற்றி

மலப்புரம் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான முடிவு இன்று அறிவிக்கப் பட்டது. தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி மொத்தம் 515,330 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்த படியாக வந்த கம்யூ னிஸ்ட் வேட்பாளரை 171,023 வாக்குகள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

சென்ற 2014 பாராளுமன்ற பொது தேர்தலில் மலப்புரம் தொகுதியில் இ. அஹமது சாகிப் 437,723 மொத்த வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது மலப்புரம் தொகுதி இடைத் தேர்தலில் 515,330 மொத்த வாக்குகள் பெற்ற கூடதலான 77,607 வாக்குகள் பெற்றுள்ளது வரலாற்று சாதனையாகும்

பா.ஜ.க. படுதோல்வி

பா.ஜ.க. வேட்பாளர் என். ஸ்ரீபிரகாஷ் 65,675 வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந் துள்ளார். பா.ஜ.க.வின் இத்தோல்வி மத்தியல் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு எதி ரான நட வடிக்கைகளுக்கு பொதுமக் களின் கடும் அதிருப் தியை வெளிப்படுத்தி யுள்ளது.

பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிபின் அரசியல் பயணம்

மலப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிப் மாணவ பருவத்திலேயே முஸ்லிம் லீகில் இணைந்து மாணவர் பேரவை மாநில பொரு ளாளர் படிப்படியாக இயக்க த்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரு பவர்.

பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிப் தனது அரசியல் பயணத் தில்1980ஆம் ஆண்டு மலப்புரம் நகராட்சி தலைவர்,1982 முதல் சட்டமன்ற உறுப்பினர், 1991 முதல் சட்டமன்ற கட்சி தலைவர் மற்றும் கேரள மாநில அமைச்சர், 1991 ஆம் ஆண்டு கட்சியின் கேரள மாநில பொதுச் செயலாளர், 2012ஆம் ஆண்டு தேசிய பொருளாளர், 2016ஆம் ஆண்டு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்து தற்போது கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சேவையாற்றி வருகிறார். முஸ்லிம் லீகின் கோட்டை மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு பிறகு மஞ்சேரி நாடாளுமன்ற தொகுதி தற்போது மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.

இந்திய பாராளுமன்றம் மலப்புரம் ,மஞ்சேரி பாராளு மன்ற தொகுதியிலிருந்து முதல் அவைலிருந்து தற்போதைய 16வது பாராளுமன்றம் வரை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பா ளர்களே வெற்றி பெற்றுள் ளனர். இத்தொகுதியில் வழக்கறிஞர் போக்கர் சாகிப், நிறுவனத் தலைவர் காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப், இப்ராஹிம் சுலைமான் சேட், இ. அஹமது சாகிப், தற்போது பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிப் ஆகியோர் தொடர்ந்து வெற்றிபெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அசைக்க முடியாத கோட்டையாக மலப்புரம் மாவட்டம் திகழ்ந்து சிறுபான்மையினர் முஸ்லிம் களின் அரசியல் வலிமையை இந்தியாவுக்கே நிரூபித்து வருகின்றனர்.

போட்டி இயக்கங்களுக்கு இடமில்லை

கேரளாவிலும் சமுதாயத் தின் பெயரால் பல்வேறு இயக்கங்கள் உருவாகி குழப்பங்கள் செய்து வந்தாலும் எந்த நிலையிலும் மாறுபடாமல் கொள்கை உறுயோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலை மைக்கு கட்டுப்பட்டு முஸ்லிம் களின் அரசியல் வலி மையை இந்திய முஸ்லிம் களுக்கே முன்னு தாரனமாக திகழ்ந்து வருபவர்கள் என கேரள முஸ் லிம்கள் எல்லா தேர்தல் களிலும் நிரூ பித்ததோடு நடைபெற்று முடிந்த மலப்புரம் நாடாளு மன்ற இடைத் தேர்தலிலும் நிருபித்துள்ளனர்.

முஸ்லிம் லீகினர் உற்சாகம்

இச்செய்தி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பல் வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், புதிய உத்வே கத்தையும் ஏற்படுத் தியுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து

மலப்புரம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெற்றியில் சரித்திர சாதனை படைத் திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞா லிக்குட்டி சாகிபுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய அமைப் புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி., கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. தேசிய செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனிஷ் உமர், கல்கத்தா ஷாஹின்ஷா ஜஹாங்கீர், பீகார் நயீம் அக்தர், அப்துஸ் ஸமது சமதானி, சிராஜ் இப்ராஹிம் சேட், தேசிய துணைத் தலைவர்கள் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்